ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஈத்தீன்  \(\overset { HOCL }{ \rightarrow } \)  A \(\overset {x }{ \rightarrow } \) ஈத்தன்  -1 , 2 - டை ஆல் என்ற தொடர்ச்சியான  வினையில் A  மற்றும் X என்பன முறையே ___________

    (a)

    குளோரா ஈத்தேன் மற்றும் NaOH

    (b)

    எத்தனால் மற்றும் H2SO4 

    (c)

    2 குளோரா ஈத்தேன் 1 - ஆல் மற்றும் NaHCO3

    (d)

    எத்தனால் மற்றும் H2O

  2. பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?

    (a)

    2 – நைட்ரோபீனால்  

    (b)

    4 – குளோரா பீனால்

    (c)

    4 – நைட்ரோபீனால்  

    (d)

    3 – நைட்ரோபீனால்  

  3. (CH3)3 - C - CH(OH) CH3  \(\overset { அடர்H\_ 2SO\_ 4 }{ \rightarrow } \)  x (முதன்மை விளைபொருள்)

    (a)

    (CH3)3 CCH = CH2

    (b)

    (CH3)2 C = C (CH3)2

    (c)

    CH2 = C(CH3 )CH2 - CH2 - CH3

    (d)

    CH2 = C (CH3) - CH2 - CH2 - CH3

  4. HO CH2 CH2 – OH ஐ பெர் அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது  உருவாவது ___________

    (a)

    மெத்தனாயிக்  அமிலம்

    (b)

    கிளையாக்சால்

    (c)

    மெத்தனால் 

    (d)

    CO2

  5. பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன்  வினைபுரிந்து தரும் நிறம் _________

    (a)

    சிவப்பு நிறம்

    (b)

    ஊதா நிறம்

    (c)

    அடர் பச்சை நிறம்

    (d)

    எவ்வித நிறமும் உருவாவதில்லை

  6. 3 x 2 = 6
  7. ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணையை  ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.

  8. NH3, CH3 O− போன்ற கருக்கவர் பொருட்களை ஆல்கஹால்களின் கருக்கவர் பதிலீட்டு வினைக்கு நாம் பயன்படுத்த இயலுமா?

  9. எத்தனால் ஆனது அமில வினைவேகமாற்றி முன்னிலையில் நீரகற்ற வினைக்கு உட்பட்டு ஈத்தினைத் தரும் வினையின் வினைவழிமுறையினைத் தருக.

  10. 3 x 3 = 9
  11. எத்தனால் மற்றும் 2 – மெத்தில் பென்டன் -2- ஆல் ஆகியனவற்றிலிருந்து 2 – ஈத்தாக்ஸி – 2 – மெத்தில் பென்டேனைத் தயாரிக்கும் வில்லியம்களின் தொகுப்பு முறைக்கான வேதிச் சமன்பாட்டினைத் தருக.

  12. 4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.

  13. இணைமாற்றியம் (மெட்டா மெர்சம்) என்றால் என்ன? 2 – மீத்தாக்ஸிபுரப்பேனின் இணைமாற்றியங்களுக்கான IUPAC வடிவமைப்புகளைத் தருக.

  14. 2 x 5 = 10
  15. 0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில் உள்ள மெத்தில் மெக்னீசியம் அயோடைடுன் சேர்க்கும் போது STP ல் 112 cm3 மீத்தேனை வெளியேற்றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம் வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.

  16. பின்வரும் வினையினை நிறைவு செய்க.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Hydroxy Compounds and Ethers Model Question Paper )

Write your Comment