p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. அதிகுளிர்நிலை அறுவைசிகிச்சைக்குத் தேவையான குறைந்த வெப்பநிலையை உருவாக்கப் பயன்படுவது _________.

    (a)

    திரவ ஆக்சிஜன்

    (b)

    திரவ நைட்ரஜன்

    (c)

    திரவ ஹைட்ரஜன்

    (d)

    திரவ அம்மோனியா

  2. யூரியாவை நீராற்பகுத்தால் கிடைப்பது _______.

    (a)

    NO2

    (b)

    HNO3

    (c)

    NH3

    (d)

    N2O

  3. நீரைப் போன்றே அம்மோனியாவும் சிறந்த அயனியுறும் கரைப்பானாக செயல்படுவதன் காரணம் அதன்மின்கடத்தாய் பொருள்மாறிலி மதிப்பு ______.

    (a)

    குறைவு

    (b)

    அதிகம்

    (c)

    பூஜ்யம்

    (d)

    ஒன்று

  4. நைட்ரிக் அமிலத்தை வணிக ரீதியாக தயாரிக்கும் முறை _______.

    (a)

    ஹேபர் முறை

    (b)

    டெக்கான் முறை

    (c)

    தொடு முறை

    (d)

    ஆஸ்வால்ட் முறை

  5. அமோனியா மூலக்கூறின் வடிவமைப்பு _________.

    (a)

    நான்முகி

    (b)

    பிரமிடு

    (c)

    சதுரத்தளம்

    (d)

    எண்முகி

  6. 5 x 2 = 10
  7. அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?

  8. சேமிக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. ஏன்?

  9. பாஸ்பீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  10. கந்தக டை ஆக்சைடின் வடிவமைப்பு பற்றி எழுதுக

  11. கந்தக அமிலத்தின் நீர் நீக்கும் பண்பினை எடுத்துக்கட்டுக

  12. 5 x 3 = 15
  13. உலோகங்களுடன் கந்தக அமிலத்தின் வினை யாது?

  14. இராஜதிராவகம் என்றால் என்ன? தங்கத்தின் மீது அதன் வினை யாது?

  15. HF அமிலம் கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படுவதில்லை. ஏன்?

  16. ஹேலஜன் இடைச் சேர்மங்கள் உருவாக நிபந்தனைகள் யாவை?

  17. செனான் புளுரைடுகளின் தயாரிப்பினை எழுது

  18. 4 x 5 = 20
  19. ஆஸ்வால்ட் முறை மூலம் நைட்ரிக் அமிலத்தின் வணிக ரீதியிலான தயாரிப்பினை விவரி

  20. பல்வேறு நைட்ரஜன் ஆக்சைடுகளின் தயாரிப்பினை எழுது

  21. பாஸ்பரஸ் ஆக்சைடுகளின் அமைப்புகளை விவரி

  22. பாஸ்பரஸின் ஆக்ஸோ அமிலங்களின் தயாரிப்பினை எழுதுக

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - P - Block Elements - II Model Question Paper )

Write your Comment