Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. பின்வரும் சமன்பாடுகள் ஒருங்கமைவு உடையது எனில் k-ன் மதிப்பைக் காண்க.x + 2y − 3z = −2, 3x − y − 2z = 1, மற்றும் 2x + 3y − 5z = k.

  2. ஒரு தொகை ரூ.5,000 ஆனது ஆண்டிற்கு 6%, 7% மற்றும் 8% தரக்கூடிய மூன்று பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்பட்டு, ஆண்டு மொத்த வருமானமாக ரூ358 பெறப்படுகிறது. முதல் இரண்டு முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம், மூன்றாவது முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட ரூ.70 அதிகம் எனில், அம்மூன்று பங்குகளில் செலுத்தப்படும் முதலீடுகளை தரமுறையில் காண்க.

  3. ‘a’ மற்றும் ‘b’ இன் எம்மதிப்புகளுக்கு x + y + z = 6, x + 2y + 3z = 10, x + 2y + az = b என்ற சமன்பாடுகள்
    (i) எந்த தீர்வும் பெற்றிராது
    (ii) ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கும்
    (iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என ஆராய்க.

  4. ஒரு வாகன தயாரிப்பு நிறுவனமானது S1, S2 மற்றும் S3 என்ற மூன்று வகையான எஃகு இரும்புகளையும் பயன்படுத்தி C1, C2 மற்றும் C3 என்ற மூன்று வகையான மகிழுந்து வாகனங்களை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு வகையான வாகனங்ளுக்கு தேவையான எஃகு இரும்பு R டன்களில் மற்றும் மூன்று வகையான மகிழுந்து வாகனங்களுக்கும் தேவையான மொத்த எஃகு இரும்பு விவரம் பின்வரும் அட்டவணையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    எஃகு வகைகள் வாகனங்களின் வகைகள் இருப்பிலுள்ள மொத்த எஃகு
    C1 C2 C3
    S1 3 2 4 28
    S2 1 1 2 13
    S3 2 2 1 14

    நிறுவனம் தயாரிக்கும் ஒவ்வொரு வகையான வாகனங்களின் எண்ணிக்கையை காண்க.

  5. சென்னை நகரில் ஒரு புதிய போக்குவரத்து வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை இந்த ஆண்டு பயன்படுத்துபவர்கள் 30% பேர் அடுத்த ஆண்டு பயன்படுத்தாமல் மெட்ரோ ரயில் வண்டிக்கு மாறி விடுவர். மீதி 70% தொடர்ந்து அப்புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர். இந்த ஆண்டு மெட்ரோ ரயில் வண்டியை பயன்படுத்துபவர்களில் 70% பேர் அடுத்த  ஆண்டும் தொடர்ந்து அதையே பயன்படுத்துபவர் மீதி 30% பேர் புதிய போக்குவரத்து வசதிக்கு மாறிவிடுவர். சென்னை நகர மக்கள் தொகை மாறாமலிருக்கிறது என்றும் பயணிகளில் அடுத்த ஆண்டில் 60% பேர் புதிய போக்குவரத்து வசதியையும் 40% பேர் மெட்ரோ ரயில் வண்டியையும் பயன்படுத்துவார்கள் எனக் கொண்டால்,
    (i) அதற்கு அடுத்த ஆண்டில் எத்தனை சதவீதம் பயணிகள் புதிய போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்?
    (ii) காலப்போக்கில் எத்தனை சதவீதம் பேர் புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர்?

  6.  x + 2y + z = 7, 2x − y + 2z = 4, x + y − 2z = −1 என்ற சமன்பாடுகளை கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க.

  7. தரப்பட்ட சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனில் k-ன் மதிப்பைக் காண்க.
    x+y+z=1, 3x-y-z=4, x+5y+5z=k

  8. மதிப்பிடுக: \(\int _{ 1 }^{ 2 }{ \frac { 1 }{ (x+1)(x+2) } } dx\)

  9. வரையறுத்த தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லை எனக் கொண்டு \(\int _{ 1 }^{ 2 }{ (2x+1) } dx\)-ஐ மதிப்பிடுக.

  10. (D2-2D-15) y=0, x=0 எனும்போது \(\frac { dy }{ dx } =0\) மற்றும் \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } =2\).

  11. சொற்டொர்க ள், (i) நிகழ்தகவு நிறைச்சா ர்பு (ii) நிகழ்தகவு அடர்த்திச் சார்பு மற்றும் (iii) நிகழ்தகவு பரவல் சார்பு ஆகியவற்றை விளக்கவும்.

  12. ஒவ்வொரு முப்பது நாள்களிலும் சராசரியாக ஒன்பது நாள்கள் மழை பொழிகின்றது. குறைந்த பட்சம் வாரத்தில் இரண்டு நாள்கள் மழை பொழிவதற்கான நிகழ்தகவினைக் காண்க.

  13. இயல்நிலைப் பரவலின் சராசரி 30 மற்றும் திட்டவிலக்கம் 5 எனில்
    (i) 26 ≤ X ≤ 40
    (ii) X > 45 ஆகிய பரப்பினை காண்க.

  14. முறைபடுத்திய கூறெடுப்பை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  15. ஒரு நேர்க்கோட்டைப் பொருத்தும் முறையை விளக்குக

  16. லாஸ்பியர், பாசி மற்றும் ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை உருவாக்கவும். மேலும் முடிவின் மீதான கருத்தினைத் தருக.

    பொருள்கள் அடிப்படை ஆண்டு நடப்பு ஆண்டு
    விலை அளவு விலை அளவு
    அரிசி 15 5 16 8
    கோதுமை 10 6 18 9
    வாடகை 8 7 15 8
    எரிபொருள் 9 5 12 6
    போக்குவரத்து 11 4 11 7
    இதரசெலவுகள் 16 6 15 10
  17. 2010ஆம் ஆண்டிற்கு
    (i) லாஸ்பியர்
    (ii) பாசி
    (iii) ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை பின்வரும் புள்ளி விவரங்களுக்குக் கணக்கிக.

    பொருள்கள் விலை அளவு
    2000 2010 2000 2010
    A 12 14 18 16
    B 15 16 20 15
    C 14 15 24 20
    D 12 12 29 23
  18. உற்பத்தி செய்முறையிலிருந்து வழக்கமான இடைவெளியில் 5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் அளவீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மாதிரிசராசரி ( X ) மற்றும் வீச்சு (R) ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மாதிரி 1 2 3 4 5 6 7 8 9 10
    \(\bar { X } \) 49 45 48 53 39 47 46 39 51 45
    R 7 5 7 9 5 8 8 6 7 6

    சராசரி கட்டுப்பாடு வரம்புகளைக் கண்டுபிடிக்க, மேலும் கட்டுப்பாட்டின் நிலை குறித்து கருத்து தருக.. (கொடுக்கப்பட்ட தகவல் A2=0.58,D3=0 மற்றும் D4 = 2.115)

  19. ஒரு கணினி மையத்தில் மூன்று திட்டமிடும் நிபுணர்கள் உள்ளனர். அந்த மையத்தில் மூன்று பயன்பாட்டு திட்டங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். மையத்தின் தலைவர் திட்டங்களை கவனமாக பரிசீலித்து, மூன்று திட்டமிடல் நிபுணர்கள் எடுத்துக் கொள்ளும் கணினி நேரத்தை மதிப்பீடு செய்கிறார்.

    மொத்த கணினி நேரத்தை குறைக்குமாறு திட்டங்களுக்கான திட்ட நிபுணர்களை ஒதுக்கீடு செய்க

  20. ஒரு வாடகை மகிழுந்து நிறுவனம் ஒரு மகிழுந்து நிறுத்த a,b,c,d மற்றும் e என்ற பணிமனைகள் உள்ள ன. A,B,C,D மற்றும் E என்ற ஐந்து வளாகங்களில் உள்ள வடிக்கையாளர்கள் ஒவ்வொருக்கும் ஒரு மகிழுந்து தேவைப்படுகிறது. கீழே உள்ள தொலைவு அணியானது பணிமனை (ஆரம்பிக்குமிடம்) மற்றும் வளாகங்கள் (சென்றடையுமிடம்) ஆகியவற்றின் தொலைவு கொடுக்கப்பட்டுள்ளது.

    பயணதூரத்தைக் குறைக்கும் வகையில் வடிகையாளர்களுக்கு மகிழுந்துகளை எவ்வாறு ஒதுக்கவேண் டும்.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Business Maths - Five Marks Question Paper )

Write your Comment