கூட்டாளி சேர்ப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு_____.

    (a)

    சொத்து க/கு

    (b)

    பெயரளவு க/கு

    (c)

    ஆள்சார் க/கு

    (d)

    ஆள்சாரா க/கு

  2. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    செலவு

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  3. கூட்டாளி சேர்ப்பின்போது புதிய கூட்டாளி நற்பெயருக்காக கொண்டு வரும் தொகை, யாருடைய முதல்கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்?

    (a)

    அனைத்து கூட்டாளிகள்

    (b)

    பழைய கூட்டாளிகள்

    (c)

    புதிய கூட்டாளி

    (d)

    தியாகம் செய்த கூட்டாளிகள்

  4. ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.

    (a)

    1:3

    (b)

    3:1

    (c)

    5:3

    (d)

    3:5

  5. பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

    (a)

    1:3

    (b)

    3:1

    (c)

    2:1

    (d)

    1:2

  6. பழைய கூட்டாளிகள் தங்கள் இலாபத்தில் ஒரு விகிதத்தை புதிய கூட்டளிக்கு ஆதரவராக தியாகம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    புதிய இலாபப் பகிர்வு விகிதம்

    (b)

    பழைய இலாபப் பகிர்வு விகிதம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஒப்பந்த விகிதம்

  7. A , B என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் C என்பவரை 1/3 கூட்டுக்குச் சேர்த்தனர். அந்த இலாபப் பங்கை A மற்றும் B பகிர்ந்து கொள்வது.

    (a)

    சமமாக

    (b)

    அவர்களுடைய முதல் விகிதத்தில்

    (c)

    அவர்களுடைய இலாப விகிதத்தில்

    (d)

    தியாக விகிதத்தில்

  8. ஒரு புதிய கூட்டாளி நிறுவனத்திற்கு ________ கொண்டுவர வேண்டும்.

    (a)

    முதல்

    (b)

    சொத்து

    (c)

    பொறுப்பு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  9. கடந்த ஆண்டுகளில் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்தால், அது _________ எனப்படும்

    (a)

    பகிர்ந்து தரா இலாபம்

    (b)

    மறுமதிப்பீடு செய்தல்

    (c)

    நற்பெயர் சரிக்கட்டுதல்

    (d)

    இவை அனைத்தும்

  10. புதிய இலாபப் பகிர்வு விகிதம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை _________ பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    (a)

    தியாக விகிதத்தில்

    (b)

    சமமாக

    (c)

    இலாபநட்ட விகிதத்தில்

    (d)

    முதல் விகிதத்தில்

  11. 5 x 1 = 5
  12. இந்திய கூட்டாண்மைச் சட்டம்

  13. (1)

    மறுமதிப்பீடு கணக்கின் வரவு பக்கம்

  14. காப்புகள்

  15. (2)

    1932, பிரிவு 31(1)

  16. தியாக விகிதம்

  17. (3)

    பொறுப்புகள் பக்கம்

  18. சொத்து மதிப்பு அதிகமாகும் பொழுது

  19. (4)

    தொழிலாளர் ஈட்டுநிதி

  20. குவிந்த காப்புகள்

  21. (5)

    தொழிலாளர் ஈட்டுநிதி

    5 x 2 = 10
  22. ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \(\frac{1}{8}\) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  23. ரவி மற்றும் குமார் என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் கிறிஸ்டி என்பவரை \(\frac { 3 }{ 7 } \) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கிறிஸ்டி ரவியிடமிருந்து \(\frac { 2 }{ 7 } \) பங்கும், குமாரிடமிருந்து \(\frac { 1 }{ 7 } \) பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  24. விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  25. தியாக விகிதம் என்றால் என்ன?

  26. இராஜா மற்றும் இரவி என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இராம் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். இராம், 1/20 பங்கினை இராஜாவிடமும், 4/20 பங்கினை இரவியிடமும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  27. 5 x 3 = 15
  28. அமுதா மற்றும் புவனா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 5:3 என்ற விகிதத்தில் இலாப-நட்டம் பகிர்ந்து வந்தனர். சித்ரா 3/8 பங்கு விகிதத்தில் புதிய கூட்டாளியாக சேர்கிறார். அப்போது ரூ.8,000 தமது நற்பெயர் பங்களிப்பாக கொண்டு வருகிறார். அவர்கள் மாறுபடும் முதல் முறையில் கணக்கினை பராமரிக்கின்றனர். நற்பெயருக்கென தொகை முழுவதையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். நற்பெயரைச் சரிகட்டத் தேவையான குறிப்பேட்டுப்பதிவுகளை உருவாக்கவும்.

  29. கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை?

  30. சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை?

  31. நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.

  32. முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக

  33. 2 x 5 = 10
  34. வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்     அறைகலன் 25,000
    வெற்றி 30,000   சரக்கிருப்பு 20,000
    இரஞ்சித் 20,000 50,000 கடனாளிகள் 10,000
    காப்பு நிதி   5,000 கைரொக்கம் 35,000
    பற்பல கடனீந்தோர்   45,000 இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000
        1,00,000   1,00,000

    பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
    (i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
    (ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
    (iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
    (iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
    (v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
    புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

  35. 2018, மார்ச் 31 ஆம் நாளைய ரேகா மற்றும் மேரியின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 50,000
    ரேகா 50,000   சரக்கிருப்பு 8,000
    மேரி 30,000 80,000 பற்பல கடனாளிகள் 60,000
    பொதுக் காப்பு   40,000 வங்கி ரொக்கம் 32,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   10,000    
    பற்பல கடனாளிகள்   20,000    
        1,50,000   1,50,000

     ரேகா, மேரி இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்கள் கவிதாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரேகாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.
    பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன:
    (i) கவிதா ரூ.20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ரூ.4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
    (ii) கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
    (iii) சரக்கிருப்பு ரூ.6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
    (iv) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.
    கூட்டாளி சேர்க்கைக்கு பின் பேரேட்டு கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - Admission of a Partner Model Question Paper )

Write your Comment