உயிரிகளின் இனப்பெருக்கம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

    (a)

    அர்ரீனோடோக்கி 

    (b)

    தெலிடோக்கி 

    (c)

    ஆம்ஃபிடோக்கி 

    (d)

    'அ' மற்றும் 'இ' இரண்டும் 

  2. இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் _______.

    (a)

    முட்டையிடுபவை 

    (b)

    தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை 

    (c)

    குட்டி ஈனுபவை 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  3. கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
    உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
    காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

    (a)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (b)

    ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

    (d)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை

  4. 4 x 2 = 8
  5. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  6. பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.

  7. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  8. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  9. 3 x 3 = 9
  10. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்து.

  11. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  12. காரணங்கள் கூறுக.
    அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன
    ஆ) ஆண் தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.

  13. 2 x 5 = 10
  14. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

  15. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th Standard உயிரியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் Book Back Questions ( 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Book Back Questions )

Write your Comment