முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒவ்வொரு உறுப்பும் 1 எனக் கொண்ட m x n வரிசை உடைய அணியின் தரம்______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    m

    (d)

    n

  2. ​​​​ ρ(A)≠ρ([A,B]) எனில் தொகுப்பானது ______.

    (a)

    ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது

    (b)

    ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது

    (c)

    ஒருங்கமைவு அற்றது

    (d)

    ஒருங்கமைவு உடையது

  3. |Anxn|=3 |adjA|=243 எனில் n-ன்மதிப்பு _______.

    (a)

    4

    (b)

    5

    (c)

    6

    (d)

    7

  4. \(\int { \sqrt { { e }^{ x } } dx } \)-ன் மதிப்புச் சார்பு _____.

    (a)

    \(\sqrt { { e }^{ x } } +c\)

    (b)

    2\(\sqrt { { e }^{ x } } +c\)

    (c)

    \(\frac { 1 }{ 2 } \sqrt { { e }^{ x } } +c\)

    (d)

    \(\frac { 1 }{ 2\sqrt { { e }^{ x } } } +c\)

  5. இறுதி நிலைச் சார்பு MR=100-9x2 -ன் தேவைச் சார்பு ______.

    (a)

    100-3x2

    (b)

    100x-3x2

    (c)

    100x-9x2

    (d)

    100+9x2

  6. 6 x 2 = 12
  7. 5x+3y+7z=4, 3x+26y+2z=9, 7x+2y+10z=5 என்ற சமன்பாடுகளை தர முறையில் ஒருங்கமைவுடையது எனக்காட்டுக. மேலும் அவற்றை தீர்க்க.

  8. ரூ.8,600 ஆனது இரண்டு விதமான கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு முதலீடானது 4\(\frac{3}{4}\)-ம் மற்றொரு முதலீடானது 6\(\frac{1}{2}\)%-ம் ஆண்டு வருவாயை ஈட்டுத் தருகிறது. ஓர் ஆண்டில் இரு முதலீடுகளுக்கான மொத்த வருமானம் ரூ.431.25 எனில் ஒவ்வொரு கணக்கிலும் செய்யப்பட்ட முதலீட்டு தொகையினைக் காண்க.

  9. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { { x }^{ 3 } }{ x+2 } \)dx

  10. பின்வருவனவற்றை மதிப்பிடுக:
    \(\int { \frac { dx }{ { e }^{ x }+6+{ 5e }^{ -x } } } \)

  11. y−2x−4=0 என்ற கொடு, y =1 மற்றும் y =3 எனும் எல்லைக்குள் y -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

  12. உற்பத்தி பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு MC=\(\frac { 14000 }{ \sqrt { 7x+4 } } \) மற்றும் மாறாச் செலவு ரூ.18,000 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவுக் காண்க.

  13. 6 x 3 = 18
  14. \(\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  15. ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த அலகுகளின் நேரிய சார்பு P = a + bl + cm இங்கு தொழிலாளர்களின் கூடுதல் உழைப்பு நேரம் (மணியில்) l, கூடுதல் இயந்திரம் நேரம் (மணியில்) m மற்றும் வேலையை முடிக்கும் நேரம் a (நிலையானது) எனில் பின்வரும் விவரங்களிலிருந்து a,b மற்றும் c ஆகிய மாறிலிகளின் மதிப்புகளைக் காண்க.

    நாள் உற்பத்தி
    (P அலகுகள்)
    உழைப்பு நேரம்
    (l மணியில்)
    கூடுதல் இயந்திரம்
    நேரம் (m மணியில்)
    திங்கள்  6,950 40 10
    செவ்வாய்  6,725 35 9
    புதன்  7,100 40 12

    மேலும் உழைப்பு நேரம் 50 மணிகள் மற்றும் கூடுதல் இயந்திரம் நேரம் 15 மணிகள் எனில் உற்பத்தியைக் கணக்கிடுக.

  16. மதிப்பிடுக:  \(\int { } \)x3exdx

  17. மதிப்பிடுக: \(\int { \sqrt { { x }^{ 2 }-16 } } \)dx

  18. y=x மற்றும் x=–1, x=2 எனும் எல்லைகளுக்குட்பட்ட அரங்கத்தின் பரப்பு காண்க.

  19. தொகையிடல் முறையைப் பயன்படுத்தி y2=16x என்ற பரவளையம் x =4 என்ற கோட்டுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.

  20. 3 x 5 = 15
  21. கிரேமரின் விதியை பயன்படுத்தி தீர்வு காண்க : 2x+3y=7, 3x+5y=9.

  22. 3 வணிகக் கணிதப் புத்தகங்கள், 2 கணக்கு பதிவியல் புத்தகங்கள் மற்றும் ஒரு வணிகவியல் புத்தகம் ஆகியவற்றின் மொத்த விலை ரூ.840. இரண்டு வணிகக் கணித புத்தங்கள், ஒரு கணக்குபதிவியல் மற்றும் ஒரு வணிகவியல் புத்தகத்தின் மொத்த விலை ரூ.570. ஒரு வணிகக் கணித புத்தகம், ஒரு கணக்குப்பதிவியல் புத்தகம் மற்றும் 2 வணிகவியல் புத்தகங்களின் மொத்த விலை ரூ.630 எனில், ஒவ்வொரு புத்தகத்தின் விலையை கிரேமரின் விதியைக் கொண்டுக் காண்க.

  23. மதிப்பிடுக:
    \(\Gamma \)(6)

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Business Maths First Mid Term Model Question Paper )

Write your Comment