சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. நிகழ்வின் நிகழ்தகவு கொண்ட சமவாய்ப்பு மாறியின் சாத்தியமுள்ள மதிப்புகளைப் பெருக்குவதன் மூலம் பெறப்பட்ட எந்த மதிப்பு எடையிட்ட சராசரிக்கு சமம் என அழைக்கப்படுகிறது.

    (a)

    தனித்த மதிப்பு

    (b)

    எடையிட்ட மதிப்பு

    (c)

    எதிர்பார்த்தல் மதிப்பு

    (d)

    திரள் மதிப்பு

  2. x -ஐ விவரிக்கும் நிகழ்தகவு குறிப்பிட்ட மதிப்பை விட சமமாகவே அல்லது குறைவாகவே  உள்ள நிகழ்தகவு ____.

    (a)

    தனித்த நிகழ்தகவு

    (b)

    திரள் நிகழ்தகவு

    (c)

    விளிம்பு நிகழ்தகவு

    (d)

    தொடர்ச்சியான நிகழ்தகவு 

  3. c ஒரு மாறிலி எனில், E (c) இன் மதிப்பு ______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    c f(c)

    (d)

    c

  4. E[X-E(X)]2 என்பது _____.

    (a)

    E(X)

    (b)

    E(X2)

    (c)

    V(X)

    (d)

    S.D(X)

  5. 5 x 2 = 10
  6. தனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது

    இங்கு ஒரு k மாறிலி எனில்,\(k=\frac { 1 }{ 18 } \) என நிறுவுக.

  7. ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது வீச்சு[-3, 3] உடைய நிகழ்தகவு அடர்த்திச் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    வளைவரையின் பரப்பு ஒன்று என்பதை சரிபார்க்கவும்.

  8. சமவாய்ப்பு மாறி வரையறுக்கவும்

  9. தனித்த சமவாய்ப்பு மாறியை வரையறுக்கவும்.

  10. மாணவர்கள் A தரநிலையை பெறுவதற்கான எண்ணிக்கையை வரையறுக்கும் சமவாய்ப்பு மாறியாக X இருக்கட்டும். கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து X இன் எதிர்பார்த்தல் மதிப்பைக் கண்டறியவும்.

    X= x 0 1 2 3
    P(X = x) 0.2 0.1 0.4 0.3
  11. 2 x 3 = 6
  12. சில குடும்ப ங்களில் உள்ள மகிழுந்துகளின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மகிழ்ந்துகளின் எண்ணிக்கை  0 1 2 3 4
    குடும்பங்களின் எண்ணிக்கை  30 320 380 190 80

    இவ் விவரங்களைக் கொண்டு நிகழ்தகவு நிறை சார்பை மதிப்பிடுக, மேலும் p(xi) ஒரு நிகழ்தகவு நிறை சார்பு என்பதையும் சரிபார்க்க.

  13. ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. X என்பது கணக்கிடப்பட்ட தலைகளின் எண்ணிக்கை எனில், X இன் திரள் பரவல் சார்பைக் கண்டுபிடிக்க.

  14. 2 x 5 = 10
  15. ஆறு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள், ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு நிர்வாக நிலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இரண்டு விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்க்காணல் குழுவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை X எனக் குறிக்கப்பட்டு. X இன் நிகழ்தகவு நிறைச் சார்பு பின்வருமாறு கண்டறியப்பட்டுள்ளது.
     

    X = x 0 1 2
    P(x) \(\cfrac { 2 }{ 11 } \) \(\cfrac { 5 }{ 11 } \) \(\cfrac { 4 }{ 11 } \)

    நேர்காணல் குழுவில் எத்தனை பெண்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

  16. ஒரு குடுவையில் சிவப்பு, கருப்பு, பச்சை , மற்றும் நீலம் ஆகிய நான்கு நிறபந்துகள் உள்ளன. எந்த நிறபந்தையும் பெற சமமான நிகழ்தகவு வழங்கப்பட்டுள்ளது. முப்பது சோதனைகளில் பந்துகள் திரும்பி வைக்கும் முறையில், நீலநிறபந்து பெறுவதற்கான எதிர்பார்க்கத்தக்க மதிப்பு என்ன?

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் Book Back Questions ( 12th Standard Business Maths - Random Variable and Mathematical Expectation Book Back Questions )

Write your Comment