உலோகவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  24 x 1 = 24
 1. பாக்ஸைட்டின் இயைபு  

  (a)

  Al2O3

  (b)

  Al2O3.nH2O

  (c)

  Fe2O3.2H2O

  (d)

  இவை எதுவுமல்ல

 2. ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

  (a)

  Al

  (b)

  Ni

  (c)

  Cu

  (d)

  Zn

 3. கலம்- Iல் உள்ளனவற்றைக் கலம் - II ல் உள்ளனவற்றுடன் பொருத்தித் தகுந்த விடையினைத் தெரிவு செய்க. 

  கலம் - I  கலம் - II 
  சயனைடு செயல்முறை  (i) மிகத்தூய்மையான Ge 
  நுரை மிதத்தல் செயல்முறை  (ii) ZnS தாதுவை அடர்பித்தல்
  மின்னாற் ஒடுக்குதல்  (iii) AI பிரித்தெடுத்தல் 
  புலத்தூய்மையாக்கல்  (iv) Au பிரித்தெடுத்தல்
      (v)  Ni ஐத் தூய்மையாக்குதல்
  (a)
  (i) (ii) (iii) (iv)
  (b)
  (iii) (iv) (v) (i)
  (c)
  (iv) (ii) (iii) (i)
  (d)
  (ii) (iii) (i) (v)
 4. உல்ப்ரமைட்(Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை 

  (a)

  உருக்குதல் 

  (b)

  காற்றில்லாச் சூழலில் வறுத்தல் 

  (c)

  வறுத்தல் 

  (d)

  மின்காந்தப் பிரிப்பு முறை 

 5. பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது.

  (a)

  இரும்பு 

  (b)

  லெட் 

  (c)

  சோடியம் 

  (d)

  சில்வர் 

 6. அலுமினாவிலிருந்து, மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம் 

  (a)

  அலுமினாவின் உருகு நிலையினைக் குறைக்க 

  (b)

  அலுமினாவிலிருந்து மாசுக்களை நீக்க 

  (c)

  மின் கடத்துத் திறனைக் குறைக்க 

  (d)

  ஒடுக்கும் வேகத்தினை அதிகரிக்க 

 7. ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை 

  (a)

  கார்பன் ஒடுக்கம் 

  (b)

  வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag)

  (c)

  மின்வேதி செயல்முறை 

  (d)

  அமிலக் கழுவுதல் 

 8. சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்.

  (a)

  வாலை வடித்தல் (Distillation)

  (b)

  புலதூய்மையாக்கல் (Zone refining)

  (c)

  துத்தநாகத்துடன் (Zinc) உலோக இடப்பெயர்ச்சி வினை 

  (d)

  நீர்மமாக்கல் (liquation)

 9. சிர்கோனியத்தினை (Zr) தூய்மையாக்கலின் பின்வரும் வினைகள் பயன்படுகின்றன. இம்முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது.
  Zr (impure) + 2I2 \(\overset { 523K }{ \longrightarrow } \) ZrI4
  ZrI4 \(\overset { 1800K }{ \longrightarrow } \) Zr (pure) + 2I2

  (a)

  உருக்கிப் பிரித்தல் 

  (b)

  வான்ஆர்கல் முறை 

  (c)

  புலத்தூய்மையாக்கல் 

  (d)

  மான்ட் முறை 

 10. உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று 

  (a)

  வேதிக்கழுவுதல் 

  (b)

  வறுத்தல் 

  (c)

  நுரைமிதப்பு முறை 

  (d)

  (அ) மற்றும் (இ)

 11. எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு 

  (a)

  \(\left( \frac { \Delta { S }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

  (b)

  \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) நேர்குறியுடையது 

  (c)

  \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

  (d)

  \(\left( \frac { \Delta T }{ \Delta G ^ 0 } \right) \)ஆரம்பத்தில் நேர்குறியுடையது  7000C க்கு மேல் \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

 12. எலிங்கம் வரைபடத்தை பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது? 

  (a)

  கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது  நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது.

  (b)

  CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.

  (c)

  CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.

  (d)

  உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் போது  அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது

 13. பின்வருவனவற்றுள் எது ஆக்சைடு வகை தாது அல்ல

  (a)

  குப்ரைட்

  (b)

  சிடிரைட்

  (c)

  காசிட்டரைட்

  (d)

  ஜிங்கைட்

 14. எது சல்பைடு வகை தாது அல்ல?

  (a)

  ஸ்டீபினைட்

  (b)

  அர்ஜென்டைட்

  (c)

  செருசைட்

  (d)

  ஸ்பேலிரைட்

 15. எது கார்பனேட் வகை தாது அல்ல?

  (a)

  சிடிரைட்

  (b)

  காலமைன்

  (c)

  செருசைட்

  (d)

  காசிட்டரைட்

 16. இரும்பின் தாது எது?

  (a)

  லிமோனைட்

  (b)

  அசுரைட்

  (c)

  ஸ்டீபினைட்

  (d)

  செருசைட்

 17. நுரை மிதப்பு முறையில் பைன் எண்ணெய் ________ ஆக பயன்படுகிறது.

  (a)

  சேகரிப்பான்

  (b)

  குறைக்கும் காரணி

  (c)

  நுரை உருவாக்கும் காரணி

  (d)

  இளக்கி

 18. வேதிக் கழுவுதலில் தூளாக்கப்பட்ட தங்கத்தின் தாது _________ நீர்த்த கரைசலில் காற்று செலுத்தி கழுவப்படுகிறது.

  (a)

  சோடியம் ஹைட்ராக்சைடு

  (b)

  சல்பியூரிக் அமிலம்

  (c)

  சோடியம் சயனைடு

  (d)

  அம்மோனியா

 19. ஒடுக்க வெப்பநிலையில் கார்பனுடன் சேர்ந்து உலோக கார்பைடுகளை உருவாக்காத உலோகங்களை பிரிக்க பயன்படும் முறை

  (a)

  உலோகத்தை பயன்படுத்தி ஒடுக்குதல்

  (b)

  ஹைட்ரஜனைக் கொண்டு ஒடுக்குதல்

  (c)

  கார்பனைக் கொண்டு ஒடுக்குதல்

  (d)

  சுய ஒடுக்கம்

 20. வெப்ப இயக்கவியல் கொள்கைகளின் படி உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒடுக்கம் காரணியுடன் சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் கட்டிலா ஆற்றல் மாற்றம் _________ மதிப்பினை பெற்றிருக்க வேண்டும்.

  (a)

  நேரக்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  ஒன்று

  (d)

  பூஜ்யம்

 21. உலோக ஆக்சைடை உலோகமாக ஒடுக்க, இணைக்கப்பட்ட வினையில் கட்டிலா ஆற்றல் மாற்றம் _________ பெறும் வகையில், ஒடுக்கும் காரணியாக தெரிவு செய்யப்படுகிறது.

  (a)

  அதிக நேர்க்குறி மதிப்பினை

  (b)

  குறைந்த நேர்க்குறி மதிப்பினை

  (c)

  அதிக எதிர்க்குறி மதிப்பினை

  (d)

  குறைந்த எதிர்க்குறி மதிப்பினை

 22. ஒட்டு மொத்த ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினையின் E0 மதிப்பு நேர்குறி எனில் அதன் ∆ G ன் மதிப்பு

  (a)

  நேரக்குறி

  (b)

  எதிர்க்குறி

  (c)

  பூஜ்யம்

  (d)

  ஒன்று

 23. புலத்தூய்மையாக்கல் முறை மூலம் தூய்மையாக்கப்படாத  உலோகம் எது?

  (a)

  ஜெர்மானியம்

  (b)

  சிர்கோனியம்

  (c)

  சிலிக்கன்

  (d)

  காலியம்

 24. பின்வருவனவற்றுள் எது உருக்கிப்பிரித்தல் மூலம் தூய்மையாக்கப்படவில்லை?

  (a)

  டின்

  (b)

  துத்தநாகம்

  (c)

  காரீயம்

  (d)

  பிஸ்மத்

 25. 2 x 1 = 2
 26. எளிதில் அரிமானம் அடையாத, வேதி உலைகளில் பயன்படும் உலோகம் _________

  ()

  அலுமினியம்

 27. _________ முறையில் அடர்ப்பிக்கப்பட்ட தாது காற்றில்லா சூழலில் வன்மையாக வெப்பப்படுத்தப்படுகிறது.

  ()

  காற்றில்லாச் சூழலில் வறுத்தல்

 28. 7 x 1 = 7
 29. மேக்னடைட்

 30. (1)

  Fe3O4

 31. காலமைன்

 32. (2)

  நிக்கல்

 33. இரும்பு

 34. (3)

  சில்வர்

 35. புவிஈர்ப்பு முறை

 36. (4)

  வெள்ளீயக்கல்

 37. கார வேதிக்கழுவுதல்

 38. (5)

  லிமோனைட்

 39. மின்னாற் தூய்மையாக்கல்

 40. (6)

  அலுமினா

 41. மான்ட் முறை

 42. (7)

  ZnCO3

  3 x 1 = 3
 43. அ. வினைத்திறன் அதிகம் உள்ள உலோகங்கள் தனிம நிலையிலேயே இயற்கையில் கிடைக்கின்றன.
  ஆ. தாதுக்களிலிருந்து கனிம கசடுகளை நீக்குவது தூய்மையாக்கல் எனப்படும்.
  இ. வெள்ளீயக்கல் தாது புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
  ஈ. சில்வர் கிளான்ஸ் ஒரு கார்பனேட் வகை தாது

  ()

  இ. வெள்ளீயக்கல் தாது புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.

 44. அ. காற்றில்லாச் சூழலில் வறுத்தல் முறையில் அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது அதிகளவு காற்றுடன் வன்மையாக வெப்பப்படுத்தப்படுகிறது.
  ஆ. கனிமக் கழிவுடன் சேர்ந்து எளிதில் உருகும் கசடினை உருவாக்கக்கூடிய வேதிச்சேர்மம் இளக்கி எனப்படும்.
  இ. அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் மெக்னீசியம் பெராக்சைடு மற்றும் பேரியம் எரியூட்டுக் கலவையாக பயன்படுகிறது.
  ஈ. எலிங்கம் வரைபடத்தில் உள்ள ஒரு உலோகம் அதற்கு கீழ்புறம் எலிங்கம் வரைகோடுகளை பெற்றுள்ள உலோக ஆக்சைடுகளை ஒடுக்க இயலும்.

  ()

  ஆ. கனிமக் கழிவுடன் சேர்ந்து எளிதில் உருகும் கசடினை உருவாக்கக்கூடிய வேதிச்சேர்மம் இளக்கி எனப்படும்.

 45. அ. மின்னாற் தூய்மையாக்கலில் தூய உலோகம் நேர்மின்வாயாகவும், தூய்மையற்ற உலோகம் எதிர்மின்வாயாகவும் செயல்படுகிறது.
  ஆ. வாலை வடித்தல் முறை அதிக கொதிநிலை உடைய எளிதில் ஆவியாகா உலோகங்களை தூய்மைப்படுத்த பயன்படுகிறது.
  இ. புலத் தூய்மையாக்கல் முறையானது பின்ன படிகமாக்கல் தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.
  ஈ. மான்ட் முறை டைட்டேனியத்தை தூய்மையாக்க பயன்படுகிறது.

  ()

  இ. புலத் தூய்மையாக்கல் முறையானது பின்ன படிகமாக்கல் தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.

 46. 2 x 2 = 4
 47. கூற்று (A): வணிக ரீதியாக அலுமினியத்தை சைனாக்களியிலிருந்து இலாபகரமாக பிரித்தெடுக்க இயலும்
  காரணம் (R): சைனாக்களி அலுமினியத்தின் கனிமமாகும்.
  i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
  ii. A சரி, ஆனால் R தவறு
  iii. A தவறு, ஆனால் R சரி
  iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

 48. கூற்று (A): Cr2O3 ஆனது அலுமினோ வெப்ப ஒடுக்க முறை மூலம் குரோமியாக ஒதுக்கப்படுகிறது.
  காரணம் (R): இம்முறையில் அலுமினியம் ஒடுக்கியாக செயல்படுகிறது.
  i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
  ii. A சரி, ஆனால் R தவறு
  iii. A தவறு, ஆனால் R சரி
  iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

 49. 2 x 2 = 4
 50. அ. மாலகைட், அசுரைட்
  ஆ.ரூபிசில்வர், குளோரார்ஜிரைட்
  இ. சிங்கைட், குப்ரைட்
  ஈ. ஆங்லசைட், செருசைட்

 51. அ. கயோலினைட், அலுமினியம்
  ஆ. ஸ்டீபினைட், சில்வர் 
  இ. கலீனா, லெட்
  ஈ. ப்ரௌசிடைட், டின்

 52. 3 x 2 = 6
 53. i. சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் தங்கமானது கரையாத சயனைடு அணைவாக மாறுகிறது.
  ii. அம்மோனியா வேதிக் கழுவுதல் முறையில் நிக்கலானது கரையும் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.
  iii. கார வேதிக் கழுவுதல் முறையில் அலுமினியமானது கரையாத அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது.
  அ) i & ii
  ஆ) i & iii
  இ) ii & iii
  ஈ) i, ii, & iii

 54. i. சோடியம், பொட்டாசியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்களின் ஆக்சைடுகளை கார்பனைக் கொண்டு ஒடுக்குவது வெப்ப இயக்கவியல் படி சாத்தியமாகும்.
  ii. அதிக வினைத்திறன் கொண்ட உலோகம், குறைவான வினைத்திறன் கொண்ட உலோக அயனியின் கரைசலில் சேர்க்கப்படும் போது குறைந்த வினைத்திறன் கொண்ட உலோகம் கரைசலுக்குள் செல்கிறது.
  iii. காப்பர் உலோகம், துத்தநாக உப்பு கரைசலிலிருந்து துத்தநாகத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது.
  அ) i & ii
  ஆ) i & iii
  இ) ii & iii
  ஈ) i, ii, & iii

 55. i. தூய்மையற்ற உலோகத்தை உருக்கி பின் திண்மமாக்கும் போது மாசுக்கள் திண்மப்பகுதியிலேயே தங்கி விடுகின்றன.
  ii. உலோகம் ஆக்சிஜன் ஒடுக்கமடைவதைத் தடுக்க புலத்தூய்மையாக்கல் மந்த வாயுச் சூழலில் நிகழ்த்தப்படுகிறது. 
  iii. ஜெர்மானியம், சிலிக்கன் மற்றும் காலியம் போன்ற தனிமங்கள் புலத்தூய்மையாக்கல் மூலம் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
  அ) i & ii
  ஆ) i & iii
  இ) ii & iii
  ஈ) i, ii, & iii

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வேதியியல் Chapter 1 உலோகவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 1 Metallurgy One Marks Model Question Paper )

Write your Comment