" /> -->

விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. PCRன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன? PCRல் மற்றும் டி.என்.ஏ பா லிமரே ஸ் பங்கு யா து? PCR சுற்றில் பயன்ப டுத்தப்படும் டி.என்.ஏ பா லிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது?

 2. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?

 3. மரபுப் பொறியியல் மூலம் உருவாக்காக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?

 4. ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்றுவேறுபடுகின்றது என்பதை விளக்குக.

 5. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளொள்ளப்பட்டன?

 6. ELISA தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி –எதிர்ப்பொருள் வினை அடிப்படையிலானது.இதே தொழில்  நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?

 7. ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறைமூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர். இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர். தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக் குறிப்பிடவும்.

 8. இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? 

 9. பல்திறன் வரையறு.

 10. குறுதிறன் வரையறு.

 11. நமது உடலின் இன்சுலின் ஹார்மோனின் பங்கு யாது?

 12. உடல் செல் கரு மாற்றம் என்றால் என்ன?

 13. மரபணு வெளியேற்றம் என்றால் என்ன?

 14. மரபு மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்களின் நேர்மறையான செயல்கள் யாவை?

 15. உயிர் தொழில் நுட்பவியலை பயன்படுத்தும் நான்கு பெரிய துறைகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Zoology - Applications Of Biotechnology Two Marks Questions )

Write your Comment