விலங்கியல் - மனித இனப்பெருக்கம் முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    விந்துப்பை 

  2. ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம் _____.

    (a)

    செர்டோலி செல்கள் 

    (b)

    லீடிக் செல் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    புரோஸ்டேட் சுரப்பி 

  3. விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி _____.

    (a)

    விந்துப்பை 

    (b)

    பல்போயுரித்ரல் சுரப்பி 

    (c)

    புரோஸ்டேட் சுரப்பி 

    (d)

    கோழைச் சுரப்பி 

  4. பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?

    (a)

    விதைப்பை 

    (b)

    ஆண்குறி 

    (c)

    சிறுநீர் வடிகுழல் 

    (d)

    விந்தகம் 

  5. கரு பதியும் இடம் ______.

    (a)

    கருப்பை 

    (b)

    வயிற்றுக்குழி 

    (c)

    கலவிக் கால்வாய் 

    (d)

    ஃபெல்லோப்பியன் குழாய்  

  6. 6 x 2 = 12
  7. ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக

  8. மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?

  9. தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து

  10. முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி

  11. விந்து நுண்குழலில் காணும் அடுக்கு எபிதீலியத்தில் உள்ள செல்களை பற்றி குறிப்பிடுக.

  12. பொய்யான பிரசவ வலி ஏற்படக் காரணம் யாது.

  13. 6 x 3 = 18
  14. இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?

  15. விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.

  16. விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?

  17. மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல்உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.

  18. மூல இனச்செல் அடுக்குகள் யாவை? அவற்றிலிருந்து உருவாகும் உறுப்புகள் யாவை?

  19. ரிலாக்சின் பற்றி விவரி.

  20. 3 x 5 = 15
  21. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.

  22. குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.

  23. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

    அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
    ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
    இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
    ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - மனித இனப்பெருக்கம் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Zoology - Human Reproduction Important Question Paper )

Write your Comment