விலங்கியல் - இனப்பெருக்க நலன் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?

  2. அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

    (தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)

  3. கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக
    அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும்.
    ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும்.
    இ) மல்டிலோட்  375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடு IUD ஆகும்.

  4. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  5. மக்கள்,தொகை கட்டுப்பாட்டுக்கான தமிழக அரசின் சுவரொட்டி விளம்பரங்கள் எவை?

  6. இயற்கையான சீரியக்க, கால இடைவெளி முறை குடும்பக்கட்டுப்பாடு - விளக்குக.

  7. வேதிப்பொருள் கருத்தடை முறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எவை?

  8. விந்துக்குழல் தடை, கருக்குழல் தடை வேறுபடுத்துக.

  9. பாகாடீரிய பால்வினை நோய்களுக்கு எடுத்துக்காட்டு தருக.

  10. வைரஸ் பால்வினை நோய்கள் யாவை?

  11. GIFT,ZIFT வேறுபடுத்துக.

  12. மேயர் ரோகிடான்ஸ்கி நோய்க் குறைபாடு என்றால் என்ன?

  13. வைட்டமின் E-ன் சிறப்பு என்ன?

  14. சர்வ தேச நோய்கள் யாவை?

  15. தமிழக மக்கள் நலவாழ்வுத்துறையின், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் பணிகள் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - இனப்பெருக்க நலன் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Reproductive Health Two Marks Questions )

Write your Comment