விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    விந்துப்பை 

  2. குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன் ______.

    (a)

    ஈஸ்ட்ரோஜன் 

    (b)

    FSH 

    (c)

    புரோலாக்டின் 

    (d)

    ஆக்ஸிடோசின் 

  3. வலிமிகுந்த மாதவிடாய் இவ்விதம் அழைக்கப்படும்

    (a)

    டிஸ்மெனோரியா

    (b)

    மெனோரேஜியா

    (c)

    அமெனோரியா

    (d)

    ஆலிகோமெனோரியா

  4. தவறான இணையைக் கண்டுபிடி

    (a)

    இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்

    (b)

    நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை – ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்

    (c)

    லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு

    (d)

    அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி

  5. ஸ்பெர்மாடிட்  \(\overset { A }{ \longrightarrow } \) முதிர்ந்த விந்துசெல். இதில் 'A' என்பது எதைக் குறிக்கும்.

    (a)

    விந்துசெல் உருவாக்கம்

    (b)

    ஸ்பெர்மியேஷன்

    (c)

    ஸ்பெர்மியோ ஜெனிசின்

    (d)

    இனச்செல் உருவாக்கம்

  6. 5 x 2 = 10
  7. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

  8. மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?

  9. தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து

  10. விந்து நுண்குழலில் காணும் அடுக்கு எபிதீலியத்தில் உள்ள செல்களை பற்றி குறிப்பிடுக.

  11. பொய்யான பிரசவ வலி ஏற்படக் காரணம் யாது.

  12. 5 x 3 = 15
  13. இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?

  14. விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.

  15. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  16. மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல்உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.

  17. மூல இனச்செல் அடுக்குகள் யாவை? அவற்றிலிருந்து உருவாகும் உறுப்புகள் யாவை?

  18. 2 x 5 = 10
  19. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.

  20. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

    அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
    ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
    இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
    ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

*****************************************

Reviews & Comments about விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

Write your Comment