தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க.

    (a)

    கிழங்கு - அல்லியம் சீப்பா

    (b)

    தரைகீழ் உந்துதண்டு - பிஸ்டியா

    (c)

    மட்டநிலத்தண்டு - மியூசா

    (d)

    வேர்விடும் ஓடுதண்டு - ஜிஞ்ஜிஃபெர்

  2. மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர் _____.

    (a)

    J.G.கோல்ரூட்டர்

    (b)

    G.B. அமிசி

    (c)

    E. ஸ்டிராஸ்பர்கர்

    (d)

    E. ஹேன்னிங்

  3. தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.

    (a)

    ஸ்போரோபொலினின் - மகரந்தத்துகளின் எக்சைன்

    (b)

    டபீட்டம் - நுண்வித்துகளின் வளர்ச்சிக்கான ஊட்டத்திசு

    (c)

    சூல் திசு - வளரும் கருவிற்கான ஊட்டத்திசு

    (d)

    வழி நடத்தி -  சூல்துளை நோக்கி மகரந்தக் குழாய் வழி நடத்துதல்

  4. ‘X’ எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ், சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டுள்ளது. இம்மலரின் மகரந்தச்சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது?

    (a)

    நீர்

    (b)

    காற்று

    (c)

    பட்டாம்பூச்சி

    (d)

    வண்டுகள்

  5. பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை ____.

    (a)

    1 செல்நிலை

    (b)

    2 செல்நிலை

    (c)

    3 செல்நிலை

    (d)

    4 செல்நிலை

  6. 5 x 2 = 10
  7. இனப்பெருக்கம் என்றால் என்ன?

  8. கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக.

  9. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.

  10. உயர் தாவரங்களில் தழைவழி இனப்பெருக்கத்திற்கு கையாளப்படும் பாரம்பரிய முறைகளை விவரி.

  11. மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக.

  12. 5 x 3 = 15
  13. கேன்தரோஃபில்லி என்றால் என்ன?

  14. எண்டோதீலியம் என்றால் என்ன ?

  15. பல்கருநிலை என்றால் என்ன ? வணிகரீதியில் இது எவ்வாறு பயன்படுகிறது?

  16. ‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’. இக்கூற்றை நியாயப்படுத்துக.

  17. டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.

  18. 4 x 5 = 20
  19. போலன்கிட் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  20. மாற்று சூலகத்தண்டு நீளம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  21. நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.

  22. கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

Write your Comment