தொகை நுண்கணிதம் - II மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. y=x(4−x) என்ற வளைவரையானது 0 மற்றும் 4 எனும் எல்லைகளுக்குள், x -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பு_____.

    (a)

    \(\frac { 30 }{ 3 } \) ச.அலகுகள்

    (b)

    \(\frac { 31 }{ 2 } \) ச.அலகுகள்

    (c)

    \(\frac { 32 }{ 3 } \) ச.அலகுகள்

    (d)

    \(\frac { 15 }{ 2 } \) ச.அலகுகள்

  2. இறுதிநிலை வருவாய் MR=35+7x-3x2 எனில், அதன் சராசரி வருவாய் AR = ____.

    (a)

    35x+\(\frac { 7x^{ 2 } }{ 2 } \)-x3

    (b)

    35+\(\frac { 7x }{ 2 } \)-x2

    (c)

    35+\(\frac { 7x }{ 2 } \)+x2

    (d)

    35+7x+x2

  3. தேவைச் சார்பு pd =28-x2 -க்கு x0=5 மற்றும் p0=3 எனும் போது நுகர்வோர் உபரி____.

    (a)

    250 அலகுகள்

    (b)

    \(\frac{250}{3}\) அலகுகள்

    (c)

    \(\frac{251}{2}\) அலகுகள்

    (d)

    \(\frac{251}{3}\) அலகுகள்

  4. இறுதிநிலை செலவுச் சார்பு MC=\(100\sqrt { x } \), T.C=0 மற்றும் வெளியீடு 0 எனில் சராசரிச் சார்பு AC ஆனது____.

    (a)

    \(\frac { 200 }{ 3 } x^{ \frac { 1 }{ 2 } }\)

    (b)

    \(\frac { 200 }{ 3 } x^{ \frac { 3 }{ 2 } }\)

    (c)

    \(\frac { 200 }{ 3x^{ { 3/ 2 } } } \)

    (d)

    \(\frac { 200 }{ 3x^{ { 1/ 2 } } } \)

  5. 6 x 2 = 12
  6. தொகையிடலை பயன்படுத்தி y -1=x என்ற கோடு, x-அச்சு, x=-2 மற்றும் x=3 என்னும் எல்லைக்குள் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.

  7. ஒரு நிறுவனம், 30 நாள்களுக்கு ஒரு முறை 500 இருசக்கர வாகனங்களை பெறுகிறது. அனுபவத்தில் சரக்கு கையிருப்பு, இருப்பு நாள்களுடன் (x) உடன் தொடர்புடையது என தெரிகிறது. கடைசியில் பெறப்பட்ட சரக்கு முதலில் இருந்து I(x)=500-0.03x2, தினசரி சரக்கு தேக்கச் செலவு ரூ.0.3 எனில் 30 நாள்களுக்கான மொத்த செலவைக் காண்க.

  8. விற்பனை செய்யப்படும் x அலகு பொருள்களின் இறுதிநிலை வருவாய் சார்பு 5+3e-0.03x எனில், விற்பனை செய்யப்படும் 100 அழகு பொருள்களின் மொத்த வருவாயை தோராயமாக காண்க. (e-3=0.05)

  9. MR =20-5x+3x2 எனில், மொத்த வருவாய்ச் சார்பு காண்க.

  10. MR =14-6x+9x2 எனில், தேவைச் சார்பு காண்க.

  11. இறுதிநிலை வருவாய் சார்பு MR=6-3x-x3 எனில், வருவாய் சார்பு மற்றும் தேவைச் சார்பு ஆகியவற்றைக் காண்க.

  12. 3 x 3 = 9
  13. y = 4x + 3 என்ற வளைவரை, x -அச்சு, x=1 மற்றும் x=4 ஆகியவற்றுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

  14. y=|x+3| என்ற வளைவரையை வரைக. மேலும் \(\int _{ -6 }^{ 0 }{ |x+3| } dx\)-இன் மதிப்பைக் காண்க.

  15. ஒரு பொருளின் தேவைச் சார்பு y=36-x2 எனில், y0= 11- ல் நுகர்வோர் உபரியை காண்க.

  16. 3 x 5 = 15
  17. இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில்,
    (i) C (0)=100 எனும் போது C யைக் காண்க.
    (ii) சராசரிச் செலவு AC -ஐக் காண்க

  18. இறுதி நிலை வருவாய் சார்பு MR=35+7x-3x2 எனில், வருவாய் சார்பு மற்றும் தேவைச் சார்பு காண்க.

  19. திரு. அருள் என்பவர் ABC வங்கியில், ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.10,000 -ஐ ஆண்டிற்கு 10% கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு செலுத்துகிறார். 5 ஆண்டுகளின் முடிவில் அவர் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகை எவ்வளவு? (e0.5=1.6487)

*****************************************

Reviews & Comments about தொகை நுண்கணிதம் - II மாதிரி வினாத்தாள்

Write your Comment