11-STD REVISION TEST 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

    (a)

    நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்

    (b)

    வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்

    (c)

    நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்

    (d)

    வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்

  2. கணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________ 

    (a)

    தற்கால தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட மாற்றம் 

    (b)

    சந்தையில் ஏற்பட்ட நிறைவுப் போட்டி

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  3. இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

    (a)

    முக்கியத்துவ மரபு

    (b)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (c)

    முன்னெச்சரிக்கை மரபு

    (d)

    நிகழ்வு தீர்வு / கருத்து

  4. இருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________ 

    (a)

    குறிப்பேட்டுப் பதிவுகள்

    (b)

    பேரேட்டுக் கணக்குகள்

    (c)

    இறுதிக் கணக்குகள்

    (d)

    இலாபநட்டக் கணக்குகள்

  5. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  6. குறிப்பேட்டிலுள்ள பதிவினை இணைக்கக் கூடிய பேரேட்டுப் பகுதி _______.  

    (a)

    பே.ப.எ.பத்தி    

    (b)

    கு.ப.எ.பத்தி 

    (c)

    விவரப் பத்தி 

    (d)

    குறிப்புப் பத்தி 

  7. பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தத் தொகை முறை

    (c)

    மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  8. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்

    (a)

    பற்றுக் குறிப்பு

    (b)

    வரவு குறிப்பு

    (c)

    இடாப்பு

    (d)

    ரொக்க இரசீது

  9. சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?

    (a)

    பேரேட்டில் விற்பனைக் கணக்கு

    (b)

    பேரேட்டில் கொள்முதல் கணக்கு

    (c)

    பேரேட்டில் முதல் கணக்கு

    (d)

    பேரேட்டில் ரொக்கக் கணக்கு

  10. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  11. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்ள்முதல் கணக்கு

    (b)

    அறைகலன் கணக்கு

    (c)

    அதியமான் கணக்கு

    (d)

    இவை ஏதுமில்லை

  12. விதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.

    (a)

    விதிப்பிழைகள்

    (b)

    செய்பிழைகள்

    (c)

    பிழைகள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  13. நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?

    (a)

    இலாப நட்டக் கணக்கு

    (b)

    நிலைச் சொத்து கணக்கு

    (c)

    தேய்மானக் கணக்கு

    (d)

    வங்கி கணக்கு

  14. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்

    (a)

    வருவாயினச் செலவுகள்

    (b)

    முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவுகள்

    (d)

    முதலினச் செலவுகள்

  15. ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு. 

    (a)

    ரூ 8,000

    (b)

    ரூ 8,500

    (c)

    ரூ 500

    (d)

    ரூ 16,500

  16. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

    (a)

    ஓர் நடப்புச் சொத்து

    (b)

    ஓர் நீர்மைச் சொத்து

    (c)

    புலனாகும் சொத்து

    (d)

    புலனாகாச்சொத்து

  17. நிகர இலாபம்.

    (a)

    முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்

    (b)

    முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

    (c)

    எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்

    (d)

    எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்

  18. நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது? 

    (a)

    இலாபத்திலிருந்து 

    (b)

    முதலிலிருந்து 

    (c)

    எடுப்பிலிருந்து 

    (d)

    கை ரொக்கத்திலிருந்து 

  19. பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?

    (a)

    அணுகக் குறிமுறை

    (b)

    தொடர்ச்சியான குறிமுறை

    (c)

    தொகுப்புக் குறிமுறை

    (d)

    மதியயோட்டுக் குறிமுறை

  20. கணினி அமைப்பானது ________ முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. 

    (a)

    மூன்று 

    (b)

    நான்கு 

    (c)

    ஐந்து 

    (d)

    ஆறு 

  21. 7 x 2 = 14
  22. தேய்மானம் என்றல் என்ன?

  23. "இரட்டைதன்மை கருத்து" பற்றி குறிப்பு வரைக.

  24. பின்வருனவற்றிக்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.
    (அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்.
    (ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்.

  25. கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?

  26. ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?

  27. பகுதி விடுபிழை என்றால் என்ன?

  28. தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?

  29. முதலின வரவு என்றால் என்ன?

  30. தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?    

  31. வன்பொருள் என்றால் என்ன?

  32. 7 x 3 = 21
  33. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  34. ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.

  35. நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?

  36. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

    31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு
    கணக்கின் பெயர் பற்று ரூ வரவு ரூ
    கட்டடம் 60,000  
    இயந்திரம் 17,000  
    கொள்முதல் திருப்பம் 2,600  
    வாராக்கடன் 2,000  
    ரொக்கம் 400  
    பெற்றெற்றத் தள்ளுபடி 3,000  
    வங்கி மேல்வரைப்பற்று 10,000  
    கடனீந்தோர் 50,000  
    கொள்முதல் 1,00,000  
    முதல்   72,800
    பொருத்துகைகள்   5,600
    விற்பனை   1,04,000
    கடனாளிகள்   60,000
    வட்டி பெற்றெற்றது   2,600
    மொத்தம் 2,45,000 2,45,000
  37. 2017 ஏப்ரல் மாதத்திற்கான பின்வரும் நடவடிக்கைகளை பிரதீப் என்பவரின் தனிப்பத்தி  ஏட்டில் பதியவும்.

    ஏப்ரல்   ரூ
    1 வணிகம் ரொக்கத்துடன் துவங்கியது 27,000
    5 ரொக்கத்திற்கு சரக்குகள் வாங்கியது 6,000
    10 ரொக்கத்திற்கு சரக்குகள் விற்றது 11,000
    13 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 5,000
    14 சங்கீதாவிற்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 9,000
    17 பிரீத்தி என்பவருக்கு கடனாகச் சரக்கு விற்றது 13,000
    21 ரொக்கம் செலுத்தி எழுதுபொருள் வாங்கியது 200
    25 முருகனுக்கு ரொக்கம் செலுத்தியது 14,000
    26 ரொக்கமாக கழிவு கொடுத்தது 700
    29 அலுவலக தேவைக்காக வங்கியிலிருந்து எடுத்தது 4,000
    30 காசோலை மூலம் வாடகை செலுத்தியது 3,000
  38. கீழ்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக

      விவரம்  
    i) ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று 10,000
    ii) செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது 5,000
    iii) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 1,000
    iv) வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது 500
    v) வங்கி பற்றுவைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி 1,000
    vi) வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை  300
  39. விதிப்பிழையைப் பற்றிய குறிப்பை எடுத்துக்காட்டுடன் எழுதவும்.

  40. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

  41. 31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.

      ரூ
    தொடக்க சரக்கிருப்பு  5,700
    கொள்முதல்  1,58,000
    கொள்முதல் திருப்பம்  900
    விற்பனை  2,62,000
    விற்பனை திருப்பம்      600

      இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.    

  42. வாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.

  43. 7 x 5 = 35
  44. வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.

     (i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள்       ரூ 20,000
     (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு ரூ 5,000
     (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது    ரூ 2,000
     (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு  ரூ 500
     (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது    ரூ 1,500
     (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது ரூ 1,000
     (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது ரூ 100
  45. கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.

    அ] ரொக்கக் க/கு
           அறைகலன் க/கு   
    ஆ] வாடகை க/கு
            ரொக்கக் க/கு  
    இ] வங்கி க/கு
           ரொக்கக் க/கு  
    ஈ) தமிழ்ச் செல்வி க/கு
            விற்பனை க/கு  
  46. ராஜா என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைப் பேரேட்டில் எடுத்து எழுதுக.

    2018 மார்ச் 1 செந்தில் என்பவருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.9,000
    5 முரளி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது 4,500
    9 ரொக்க விற்பனை 6,000
    18 மணியிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது 3,200
    23 முரளியின் கணக்கு முழுவதுமாக தீர்க்கப்பட்டு
    அவரிடமிருந்து தொகை பெறப்பட்டது
    4,000
  47. சென்னையிலுள்ள அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.12.2017ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    கட்டடம் 20,000 போக்குவரத்து செலவுகள் 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,000 சம்பளம் 5,600
    கடனாளிகள் 20,000 முதல் 40,000
    வங்கி ரொக்கம் 16,800 அறைகலன் 10,000
    காப்பீடு செலுத்தியது 1,600 மோட்டார் வாகனம் 5,000
    வாடகைப் பெற்றது 5,000 புனையுரிமை 2,000
    நன்கொடை அளித்தது 2,500 நற்பெயர் 3,000
    பெற்றக் கடன் 42,000    
  48. பின்வரும் விபரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக் கடையின் துணை ஏடுகளை தயார் செய்யவும்.

    2017  
    டிசம்பர் 1 உமாதேவியிடமிருந்து கடனுக்கு வாங்கியது
      ஒன்று ரூ. 80 வீதம் 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள்
      ஒன்று ரூ. 150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தத்தகங்கள்
    டிசம்பர் 7 ஸ்ரீதேவியிடம் கடனுக்கு விற்றது
      ஒன்று ரூ. 90 வீதம் 240 வணிகப்புள்ளியியல் புத்தகங்கள்
      ஒன்று ரூ. 170 வீதம் 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள்
    டிசம்பர் 10 சுபாவிடமிருந்து வாங்கியது
      ஒன்று ரூ. 80 வீதம் 40 பொருளாதாரம் புத்தகங்கள்
      கழிக்க: வியாபாரத்தள்ளுபடி 15%
    டிசம்பர் 15 சேதமடைந்திருந்த 10 கணக்குப்பதிவியல் புத்தகங்களை உமாதேவியிடம் திருப்பி, இதற்கு பணம் பெறப்படவில்லை
    டிசம்பர் 18 டிசம்பர் 18 குப்தாவிற்கு கடனுக்கு விற்றது
      ஒன்று ரூ. 95 வீதம் 200 பொருளாதாரம் புத்தகங்கள்
    டிசம்பர்  26 சுபாவிற்கு 5 பொருளாதாரம் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
  49. சோழன் என்பவரது முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவுசெய்க.

    2017 ஏப்ரல்   ரூ
    1 சோழன் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது 50,000
    2 வங்கியில் நடப்புக் கணக்கு துவங்கியது 32,000
    10 ரொக்க விற்பனை 14,000
    11 வங்கியில் ரொக்கம் செலுத்தியது 10,000
    19 அலுவலகத் தேவைக்காக கணிப்பொறி காசோலை மூலம் வாங்கியது  24,000
    22 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது 9,000
    25 காசோலை மூலம் சரக்குகள் வாங்கியது  7,600
    27 வங்கி மேல்வரைப் பற்றிற்கான வட்டி, வங்கி எடுத்துக்கொண்டது 350
    28 அலுவலக பணியாளர்கள் சம்பளத்தை மின்னணு தீர்வை முறை மூலம் செலுத்தியது  30,000
    30 வீட்டுச் செலவினங்களுக்காக ரொக்கம் எடுத்துக் கொண்டது 6,500
  50. சுதா நிறுமத்தின் வங்கி அறிக்கையானது 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று ரூ 10,000 மேல்வரைப்பற்றினை காட்டியது. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க.
    (அ) 2017 டிசம்பர், 30 அன்று வங்கியில் செலுத்திய காசோலை   ரூ15,000 வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்படவில்லை.
    (ஆ) 2017 டிசம்பர், 31 அன்று வங்கியால் பற்று வைக்கப்பட்ட நீண்டகால கடன் மீதான வட்டி  ரூ 500. ஆனால் சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்பட்படவில்லை.
    (இ) 2017 டிசம்பர், 24 அன்று  ரூ 550-க்கான காசோலை  விடுக்கப்பட்டு வங்கியரால் செலுத்தப்பட்ட  ரூ 505 என ரொக்க  ஏட்டின் வங்கிப் பத்தியில் பதியப்பட்டது.
    (ஈ) 2017 டிசம்பர், 27 அன்று விடுத்த காசோலை   ரூ 200 இரு முறை ரொக்க  ஏட்டில் பதியப்பட்டது.
    (உ) ரொக்க  வைப்பு  ரூ 2,598 வங்கியால்  ரூ 2,589 எனப் பதியப்பட்டது.
    (ஊ) பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று வாடிக்கையாளரால் செலுத்தப்பட்ட  ரூ 2,000 சுதா நிறுமத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.
    (எ) மேல்வரை மேல்வரை மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ.600 சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.
    (ஏ) 2017 டிசம்பர், 29 அன்று விடுத்த இரு காசோலைகள் முறையே  ரூ 500 மற்றும் ரூ 700 -இல் முதல் காசோலை  மட்டுமே 2017 டிசம்பர், 31 -க்கு முன் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.

  51. 31.12.2007 ற்கான கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து திரு.கெளதம் அவர்களின் வங்கி சரிகட்டும் பட்டயலைத் தயாரிக்கவும்.
    [அ] ரொக்க ஏட்டின்படி இருப்பு ரூ 12,500
    [ஆ] அளித்த காசோலைகளில் இதுவரை செலுத்துகைக்கு முன்னிறுத்தப்படாதவை ரூ 1,900
    [இ] வங்கியில் செலுத்திய காசோலைகளில் வசூலித்து வரவு வைக்கப்படாதவை ரூ 1,200
    [ஈ] வங்கி செலுத்திய காப்பீட்டுக் கட்டணம் ரூ 500
    [உ] வாடிக்கையாளர் நேரடியாக வங்கிக்கு செலுத்தியது ரூ 800
    [ஊ] வங்கி வசூலித்த முதலீடு மீதான வட்டி ரூ 200
    [எ] வங்கிக் கட்டணம் ரூ 100     

  52. கீழ்க்காணும் பதிவுகளைத் திருத்துக

      விவரம்   பே.ப. எ பற்று ரூ வரவு ரூ
    கொள்முதல் க/கு   5,000  
      ரொக்கக் க/கு       5,000
      (ரொக்கம் செலுத்தி அறைகலன் வாங்கியது)        
    நிலா க/கு   8,000  
      ரொக்கக் க/கு       8,000
      (நிலாவுக்கு சம்பளம் கொடுத்தது)        
    குறளமுது க/கு   2,000  
      ரொக்கக் க/கு       2,000
      (குறளமுதுக்கு வாடகை கொடுத்தது)        
    ரொக்கக் க/கு   9,000  
      விற்பனைக் க/கு       9,000
      (ரொக்கத்திற்கு அறைகலன் விற்றது)        
    ரொக்கக் க/கு   6,0000  
      கோதைமலர்க/கு       6,000
      (கோதைமலருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது)        
  53. ஜனவரி 1, 2016 அன்று ரூ. 25,000க்கு சொத்து ஒன்று வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட வேண்டும். அச்சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 1,000. கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கப்பெறுகின்றன. தேய்மான விகிதம் கணக்கிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  54. பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
    (i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
    (ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
    (iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
    (iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
    (v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.

  55. பின்வரும் சாய்ஃப் என்பவரின் இருப்பாய்விலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    நிலம் 40,000 கொள்முதல் திருப்பம் 15,000
    தொடக்கச் சரக்கிருப்பு 40,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,300
    இயந்திரம் 66,000 முதல் 1,50,000
    கொள்முதல் 1,30,000 விற்பனை 2,20,000
    கூலி 35,000 கடனீந்தோர் 60,000
    வட்டி கொடுத்தது 13,000    
    ரொக்கம் 2,300    
    கடனாளிகள் 80,000    
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 15,000    
    அலுவலக வாடகை செலுத்தியது 12,700    
    அறைகலன் 3,000    
    எடுப்புகள் 5,000    
    விற்பனைத் திருப்பம் 10,000    
      4,52,000   4,52,000

    இறுதிச் சரக்கிருப்பு ( 31.12.2017) ரூ. 14,500. 

  56. மனோஜின் 2016, மார்ச் 31 ஆம் நாளளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

    பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ
    மொத்த
    இலாபம்
    25,000 பயணச் செலவுகள் 500
    சம்பளம் 5,600 எழுதுபொருள் செலவு 75
    காப்பீடு 200 வாடகை 650
    அளித்த தள்ளுபடி 400 கடன்மீது வட்டி 225
    பெற்ற தள்ளுபடி 300 பழுதுபார்ப்புச் செலவுகள் 125
    பெற்ற கழிவு 100 அலுவலகச் செலவுகள் 55
    விளம்பரம் 450 பொது செலவுகள் 875
    அச்சு செலவுகள் 375 தபால் செலவுகள் 175

    சரிக்கட்டுதல்கள்:
    (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 400
    (ii) முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ  50
    (iii) கழிவுப் பெற வேண்டியது ரூ 100

  57. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்

      A B C D E F
    1 Asset Cost of purchase Installation charge Transportation charge Salvage value Life in years
    2 Machinery 200000 20000 5000 25000 10
    3 Furniture 50000 4000 2000 5000 8

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Accountancy 3rd Revision Test Question Paper 2019 )

Write your Comment