+1 Unit Test One Mark Question

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 50

  மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

  50 x 1 = 50
 1. பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன

  (a)

  1860

  (b)

  1863

  (c)

  1873

  (d)

  1883

 2. மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.

  (a)

  பழைய கற்காலப்

  (b)

  புதிய கற்காலப்

  (c)

  இடைக்கற்காலப்

  (d)

  செம்புக்காலப்

 3. தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _________ ஆகும்

  (a)

  பொ.ஆ.மு. 3000-2600

  (b)

  பொ.ஆ.மு. 2600-1900

  (c)

  பொ.ஆ.மு. 1900-1700

  (d)

  பொ.ஆ.மு. 1700-1500

 4. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____ 

  (a)

  காலிபங்கன்

  (b)

  லோத்தல்

  (c)

  பனவாலி

  (d)

  ரூபார்

 5. ________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

  (a)

  குவார்ட் சைட்

  (b)

  கிரிஸ்டல்

  (c)

  ரோரிசெர்ட்

  (d)

  ஜாஸ்பார்

 6. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

  (a)

  மாடு

  (b)

  நாய்

  (c)

  குதிரை

  (d)

  செம்மறி ஆடு

 7. மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  (a)

  குருபாஞ்சாலம்

  (b)

  கங்கைச்சமவெளி

  (c)

  சிந்துவெளி

  (d)

  விதேகா

 8. கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை . 
  காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

  (a)

  கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று சரியானது. காரணம் தவறானது

  (d)

  கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .

 9. பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.

  (a)

  பெளத்தம்

  (b)

  சமணம்

  (c)

  ஆசீவகம் 

  (d)

  வேதம்

 10. வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும் 

  (a)

  கோசலம்

  (b)

  அவந்தி 

  (c)

  மகதம்

  (d)

  குரு

 11. ______ என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலை பதித்த இடம்' என்று பொருள்.

  (a)

  மகாஸ்ரீனபதம்

  (b)

  ஜனபதம்

  (c)

  கிசாசம்சிக்கா

  (d)

  குரு பாஞ்சாலம்

 12. சமண மதத்தை ஆதியில் தோற்றுவித்தவர் _______ 

  (a)

  ரிஷபர்

  (b)

  அஜிதானந்தர்

  (c)

  அரிஷ்டநேமி

  (d)

  மகாவீரர்

 13. முதல் பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

  (a)

  காஷ்மீர்

  (b)

  வைசாலி

  (c)

  பாடலிபுத்திரம்

  (d)

  ராஜகிருஹம்

 14. ____________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்

  (a)

  மகாவம்சம்

  (b)

  தீபவம்சம்

  (c)

  பிரமாணம்

  (d)

  முத்ராராட்சசம்

 15. குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு_________காலத்தைச் சேர்ந்தது.

  (a)

  பொ.ஆ.130-150

  (b)

  பொ.ஆ.170-190

  (c)

  பொ.ஆ.150-170

  (d)

  பொ.ஆ.190-210

 16. "இந்து" என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு_____________.

  (a)

  அய்கோப்ன கல்வெட்டு

  (b)

  முதலாம் டாரியஸின் கல்வெட்டு

  (c)

  ஜீனாகத் கல்வெட்டு

  (d)

  சாரநாத் கல்வெட்டு

 17. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

  (a)

  ஆந்திரா-கர்நாடகா

  (b)

  ஒடிசா

  (c)

  தக்காணப் பகுதி

  (d)

  பனவாசி

 18. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க
  (i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்
  (ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்
  (iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்
  (iv) இக்சவாகுகள் வேதவேள் விகளை ஆதரித்தனர்

  (a)

  (i)

  (b)

  (ii)

  (c)

  (iii)

  (d)

  (iv)

 19. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

  (a)

  வசிஷ்டபுத்ர புலுமாவி

  (b)

  நாகபனா

  (c)

  கடம்பர்

  (d)

  யக்னஸ்ரீ சதகர்னி

 20. _______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார். 

  (a)

  சேர

  (b)

  சோழ

  (c)

  பாண்டிய

  (d)

  சாதவாகன 

 21. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

  (a)

  தொண்டி

  (b)

  புகார்

  (c)

  கொற்கை

  (d)

  நெல்கிண்டா

 22. "சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________

  (a)

  கூரம் செப்பு பட்டயம்

  (b)

  ஐஹோல் கல்வெட்டு

  (c)

  அலகாபாத் கல்வெட்டு

  (d)

  பூலாங்குறிச்சி கல்வெட்டு

 23. இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் …………………

  (a)

  யூதிடெமஸ்

  (b)

  டெமெட்ரியஸ்

  (c)

  மினாண்டர்

  (d)

  ஆன்டியால்ஸைடஸ்

 24. ………………………… பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

  (a)

  அரிக்கமேடு

  (b)

  ஆதிச்சநல்லூர்

  (c)

  புகார்

  (d)

  பல்லாவரம்

 25. பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர்________

  (a)

  ஹீயோடோரஸ்

  (b)

  ஆண்டியால் சைடல்

  (c)

  வோனேனெஸ் 

  (d)

  மித்ரடேட்ஸ்

 26. சுங்கர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் _______

  (a)

  சாகர்கள்

  (b)

  சாதவாளனார்கள்

  (c)

  மௌரியர்கள்

  (d)

  யவனர்கள்

 27. கூற்று: பிளாண்டார் குறித்த தகவல்களை நாம் அறிவதற்கு அவரது தூதர் ஹீலியோடோரஸ் என்பவரே காரணம்
  காரணம்: இவர் பாகபத்ர அரசரின் அரச சபைக்கு தூதராக பிளாண்டரால் அனுப்பப்பட்டார்.

  (a)

  கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று சரி, காரணம் தவறு

  (c)

  கூற்று தவறு, காரணம் சரி

  (d)

  கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றிற் விளக்கவில்லை

 28. _______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது

  (a)

  முதலாம் சந்திரகுப்தர் 

  (b)

  சமுத்திரகுப்தர்

  (c)

  இரண்டாம் சந்திரகுப்தர்

  (d)

  ஸ்ரீகுப்தர்

 29. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?

  (a)

  உதயகிரி குகை (ஒடிசா )

  (b)

  அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )

  (c)

  எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )

  (d)

  பாக் (மத்தியப் பிரதேசம்)

 30. பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

  (a)

  கிரகவர்மன்

  (b)

  தேவகுப்தர்

  (c)

  சசாங்கன்

  (d)

  புஷ்யபுத்திரர்

 31. கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?

  (a)

  ஹர்ஷசரிதம்

  (b)

  பிரியதர்ஷிகா

  (c)

  அர்த்த சாஸ்திரா 

  (d)

  விக்ரம ஊர்வசியம்

 32. கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.

  (a)

  மூன்றாம் கோவிந்தன் - வாதாபி

  (b)

  ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி

  (c)

  விஷயம் - ராஷ்ட்டிரகூடர்

  (d)

  நம்மாழ்வார் - குருகூர்

 33. ………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.

  (a)

  சரவணபெலகொலா  

  (b)

  மதுரை

  (c)

  காஞ்சி

  (d)

  கழுகுமலை

 34. ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?

  (a)

  தேவாரம்

  (b)

  திருவாசகம்

  (c)

  நாலாயிரத்திவ்யபிரபந்தம்

  (d)

  பன்னிரு திருமுறை

 35. "பெரிய புராணம்" என்ற நூலை எழுதியவர் _________ 

  (a)

  அப்பர்

  (b)

  சேக்கிழார்

  (c)

  மாணிக்கவாசகர்

  (d)

  சுந்தரர்

 36. களக்பிரர்களை அழித்த பல்லவமன்னர் ____________ 

  (a)

  விஷ்ணு கோபன்

  (b)

  சிம்ம விஷ்ணு

  (c)

  முதலாம் மகேந்திரன்

  (d)

  முதலாம் நந்திவர்மன்

 37. மம்லுக் என்ற பெயர் ஒரு _____ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்

  (a)

  அடிமை

  (b)

  அரசர்

  (c)

  இராணி

  (d)

  படைவீரர்

 38. அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________ 

  (a)

  முபாரக் ஷா

  (b)

  ஆலம் கான்

  (c)

  கிசர் கான்

  (d)

  துக்ரில் கான்

 39. கெடா __________________ இல் உள்ளது

  (a)

  மலேசியா

  (b)

  சிங்கப்பூர்

  (c)

  தாய்லாந்து

  (d)

  கம்போடியா

 40. முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது

  (a)

  நாட்டார்

  (b)

  மாநகரம்

  (c)

  நகரத்தார்

  (d)

  ஊரார்

 41. பொஆ.800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு ___________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது

  (a)

  மத்திய அரசு

  (b)

  கிராமம்

  (c)

  படை

  (d)

  மாகாணம்

 42. இபன் ____ நாட்டுப் பயணி.

  (a)

  மொராக்கோ

  (b)

  வெனிஷிய

  (c)

  போர்த்துகல்

  (d)

  சீனா

 43. கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.

  (a)

  சங்கம் வம்சம்,ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம்

  (b)

  சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

  (c)

  சாளுவ வம்சம், சங்கம் வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

  (d)

  சங்கம் வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம் 

 44. கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளை நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் _______ 

  (a)

  பெல்காம்

  (b)

  கட்டாக்

  (c)

  சிம்மாச்சலம்

  (d)

  இராஜ மகேந்திரவரம்

 45. வைதீக வேதப்பிரிவுகளுக்கும் சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றி குறிப்பிப்பிடுவது _____  

  (a)

  இராமாயணம் 

  (b)

  பாகவத புராணம் 

  (c)

  திருத்தொண்டர்களின் புகழ்பாடும் தொகுப்புகள் 

  (d)

  பால லீலா 

 46. அக்பரின் அரசவையில் " ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்" என்ற அறியப்பட்டவர் _________ 

  (a)

  சூர்தாஸ் 

  (b)

  துக்காராம் 

  (c)

  இராமானந்தர் 

  (d)

  மீராபாய் 

 47. 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.

  (a)

  காலாப் படை 

  (b)

  குதிரைப் படை 

  (c)

  பீரங்கிப் படை 

  (d)

  யானைப் படை 

 48. தவறான கூற்றினைக் கண்டுபிடி

  (a)

  ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 1 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண் டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர்.

  (b)

  ஷெர்ஷா வின் நாணய முறை , ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்ட து.

  (c)

  முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமை யான இறுதிப் போர் ஆகும்.

  (d)

  சீக்கியப் புனித நூலான “குரு கிரந்த சாகிப்” குரு அர்ஜு ன் தேவால் தொகுக்கப்பட்டது.

 49. தவறான கூற்றினைக் கண்டுபிடி

  (a)

  இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.

  (b)

  அக்பரது புதிய தலை நகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச் சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டடங்க ள் உள்ளன.

  (c)

  மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது.

  (d)

  'புராண கிலா’ ஒரு உயர்ந்த கோட்டையாகும்

 50. ஆங்கிலேயர் 1639 ஆம் ஆண்டு உள்ளூர் ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில் _______________ கோட்டையைக் காட்டினர். 

  (a)

  புனித ஜார்ஜ் கோட்டை 

  (b)

  புனித வில்லியம் கோட்டை

  (c)

  வேலூர் கோட்டை

  (d)

  கோல்கொண்டா கோட்டை

*****************************************

Reviews & Comments about +11 வரலாறு ஒரு மதிப்பெண் அலகு தேர்வு வினாக்கள் ( +1 History Unit Test One Mark Question )

Write your Comment