+1 Public Official Model Question 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  2. _______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது. 

    (a)

    அடக்கவில்லைக் கணக்கியல்

    (b)

    நிதி ஆலோசகர்

    (c)

    வரி மேலாளர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  3. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  4. ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவப்புதன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  5. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  6. குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறைக்கு _______ என்று பெயர்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    குறிப்பேட்டில் பதிதல்

    (c)

    இருப்பு கட்டுதல்

    (d)

    எடுத்தெழுதுதல்

  7. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் தோன்றும்?

    (a)

    பற்பல கடனீந்தோர் கணக்கு

    (b)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

    (c)

    எடுப்புகள் கணக்கு

    (d)

    முதல் கணக்கு

  8. விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?

    (a)

    அனைத்து சரக்குகளின் விற்பனை

    (b)

    அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை

    (c)

    அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை

    (d)

    அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை

  9. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?

    (a)

    சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 

    (b)

    அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 

    (c)

    வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை 

    (d)

    வங்கி எடுத்துக் கொண்ட வட்டி

  10. வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ.1,000. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ரூ.2,000. ரொக்க  ஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?

    (a)

    3,000 மேல்வரைப்பற்று

    (b)

    3,000 சாதகமான இருப்பு

    (c)

    1,000 மேல்வரைப்பற்று

    (d)

    1,000 சாதகமான இருப்பு

  11. இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்

    (a)

    விதிப்பிழைகள்

    (b)

    அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்

    (c)

    குறைவாகக் கூட்டுதல் பிழைகள்

    (d)

    பகுதி விடு பிழைகள்

  12. பிழைகளைக் கண்டறிந்து அவற்றைத் திருத்தும் வரை _______________ ஏடுகளில் இருக்கும். 

    (a)

    முதல் கணக்கு

    (b)

    பேரேட்டுக் கணக்கு

    (c)

    அனாமத்துக் கணக்கு

    (d)

    இவை எதுவுமில்லை

  13. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்

    (a)

    சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்

    (b)

    சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்

    (c)

    சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்

    (d)

    சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்

  14. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்

    (a)

    வருவாயினச் செலவுகள்

    (b)

    முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவுகள்

    (d)

    முதலினச் செலவுகள்

  15. ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு. 

    (a)

    ரூ 8,000

    (b)

    ரூ 8,500

    (c)

    ரூ 500

    (d)

    ரூ 16,500

  16. இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் ________ 

    (a)

    நிலையான சொத்து

    (b)

    நடப்புச் சொத்து

    (c)

    கற்பனைச் சொத்து

    (d)

    புலனாகாச் சொத்து

  17. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.

    (a)

    இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்

    (b)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

    (c)

    மேற்கண்ட இரண்டிலும்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  18. 1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.   

    (a)

    ரூ 30,000

    (b)

    ரூ 5,00,000

    (c)

    ரூ 4,70,000

    (d)

    ரூ 5,30,000

  19. பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?

    (a)

    உள்ளீட்டு அலகு

    (b)

    வெளியீட்டு அலகு

    (c)

    தரவு

    (d)

    மையச் செயல்பாட்டு அலகு

  20. ______ பயனாளிக்கும் கணினி அமைப்புக்கும் இடையேயான ஒரு இடைமுகமாக அமைகின்றது. 

    (a)

    நிரலாக்க மென்பொருள் 

    (b)

    பயன்பாட்டு மென்பொருள்  

    (c)

    இயக்கமுறைமை 

    (d)

    செயல்பாட்டு மென்பொருள் 

  21. 7 x 2 = 14
  22. முதல் எனறால் என்ன?

  23. கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றஉம் கணக்குப் பதிவியலுக்கான உறவுமுறையினை விளக்குக.

  24. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?

  25. உரிய குறிப்பேடு என்றால் என்ன?

  26. இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன

  27. பிழைத் திருத்தம் என்றால் என்ன?

  28. கீழ்கண்ட தகவல்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.

    இயந்திரம் வாங்கிய விலை ரூ. 2,00,000
    மூலதனமாக்கப்பட வேண்டிய செலவுகள் ரூ. 50,000
    எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 15,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 வருடங்கள்
  29. வருவாயினச் செலவு என்றால் என்ன?

  30. இருப்புநிலைகுறிப்பு வரையறு.   

  31. கணக்குகள் குழுப்படுத்துதல் என்றால் என்ன?

  32. 7 x 3 = 21
  33. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  34. கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.

  35. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.

    ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.62,000
    3 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.12,000
    10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000
    12 கூலி ரொக்கமாகச் செலுத்தியது ரூ.4,000
    25 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.6,000
  36. முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000
    வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000
    உள் திருப்பம் 2,500 நிலம் 90,000
    தேய்மானம் 2,400 முதல் 60,000
    அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250
  37. சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் உண்டாகும் நன்மைகளை எழுதுக.

  38. ‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?

  39. ஒரு பக்கப் பிழைகள் மற்றும் இரு பக்கப் பிழைகள் பற்றிய குறிப்பு எழுதவும்

  40. 1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
    15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.

  41. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு திரு.வேணுகோபால் அவர்களின் 2015 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

      ரூ
    முதல்  40,000
    எடுப்பு  4,400
    கையிருப்பு ரொக்கம்    360
    வங்கி இருப்பு ரொக்கம்  7,200
    பொறி  10,000
    பொதுக்காப்பு    1,000
    கடனாளிகள்  6,400
    கடனீ ந்தோர்    4,200
    அறைகலன்  3,700
    நிகர இலாபம்  1,660
    இறுதிச் சரக்கிருப்பு   14,800
  42. 2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
    (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
    (ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
    (iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
    (iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
    (v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.

  43. 7 x 5 = 35
  44. பின்வரும் நடவடிக்கைகளை இராஜா ஹோட்டலின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.

     ஜனவரி     ரூ 
    1   ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       3,00,000
    2   ராஜுவிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது     1,00,000
    3   வங்கியில் ரொக்கம் செலுத்தியது 2,00,000
    20   வங்கியில் கடன் பெற்றது  1,00,000
    22   சொந்த உபயோகத்திற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது   800
    23   ராஜுவிற்கு தேசிய மின்னனு பணப்பரிமாற்றம் மூலமாக ரொக்கம் செலுத்தி கணக்கு தீர்க்கப்பட்டது 99,000
    25   உரிமையாளரின் சங்க உறுப்பினர் சந்தா காசோலை மூலம் செலுத்தியது   200
    26   உரிமையாளரின் வீட்டிற்கான மின் கட்டணம் எடுப்பு அட்டை மூலம் செலுத்தியது 2,000
    31   அறக்கட்டளை அமைப்பிற்கு மதிய உணவு இலவசமாக வழங்கியது 1,000
    31   வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை 1,000
  45. திருமதி அமுதா அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

    ஜனவரி 2018   ரூ
    1 திருமதி அமுதா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது 50,000
    2 ரொக்கக் கொள்முதல் செய்தது 10,000
    5 மோகன் என்பவரிடமிருந்து கடனாக கொள்முதல் செய்தது 6,000
    7 வங்கியில் செலுத்தியது 5,000
    10 அறைகலன் வாங்கியது 2,000
    20 சுரேஷிற்கு கடனாக விற்பனை செய்தது 5,000
    25 ரொக்க விற்பனை 3,500
    26 மோகனுக்குச் செலுத்தியது 3,000
    31 ஊதியம் வழங்கியது 2,800
  46. கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்

    2015 மார்ச் 1 சோமு என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது ரூ.5,000
    7 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 300
    15 வட்டி பெற்றது 1,800
  47. ரோகினி என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2016 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்

      ரூ   ரூ
    முதல் 60,000 விற்பனை 82,000
    பெற்றத் தள்ளுபடி 3,250 மின்கட்டணம் 800
    கொள்முதல் 58,000 எடுப்புகள் 5,250
    பொறி இயந்திரம் 40,000 வாகனச் செலவுகள் 1,200
    விளம்பரச் செலவுகள் 5,000 மகிழுந்து 35,000
  48. பின்வரும் நடவடிக்கைகளை வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் ஹரியின் கொள்முதல் திருப்ப ஏட்டில் பதிவு செய்து, அதனைப் பேரேட்டில் எழுத்தெழுதுக.

    2017  
    ஜனவரி  5 ஆணைப்படி இல்லாததால் ஆனந்திற்கு திருப்பியது 5 முகப்பு விளக்குகள்  ஒன்று ` 200 வீதம்
    ஜனவரி 14 தரம் குறைவு காரணமாக சந்திரனுக்கு திருப்பியது 4 ஒலிப்பான்கள் ஒன்று ரூ. 200 வீதம் 10 கண்ணாடிகள் ஒன்று ரூ. 350 வீதம்.
  49. 2017, மே மாதத்திற்காற்கான சேஷாத்ரி அவர்களின் பின்வரும் நடவடிக்கைகளை தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    மே   ரூ 
    1 கையிருப்பு ரொக்கம்  40,000
    5 ஸ்வாதியிடமிருந்து பெற்ற ரொக்கம்  4,000
    7 கூலி ரொக்கமாக  கொடுத்தது 2,000
    10 சசிகலாவிடமிருந்து ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது 6,000
    15 ரொக்கத்திற்கு விற்பனை செய்த 9,000
    18 கணிப்பொறி வாங்கியது 15,000
    22 சபாபதிக்கு ரொக்கம் செலுத்தியது 5,000
    28 சம்பளம் கொடுத்தது 2,500
    30 வட்டிப் பெற்றது 500
  50. பின்வரும் விவரங்களிலிருந்து குமார் என்பவரின் 2016 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) ரொக்க  ஏட்டின் படி இருப்பு ரூ.7,130
    (ஆ) செலுத்திய காசோலை வசூலாகாதது ரூ.1,000
    (இ) வாடிக்கையாளர் நேரநேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ.800

  51. 31.12.2007 ற்கான கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து திரு.கெளதம் அவர்களின் வங்கி சரிகட்டும் பட்டயலைத் தயாரிக்கவும்.
    [அ] ரொக்க ஏட்டின்படி இருப்பு ரூ 12,500
    [ஆ] அளித்த காசோலைகளில் இதுவரை செலுத்துகைக்கு முன்னிறுத்தப்படாதவை ரூ 1,900
    [இ] வங்கியில் செலுத்திய காசோலைகளில் வசூலித்து வரவு வைக்கப்படாதவை ரூ 1,200
    [ஈ] வங்கி செலுத்திய காப்பீட்டுக் கட்டணம் ரூ 500
    [உ] வாடிக்கையாளர் நேரடியாக வங்கிக்கு செலுத்தியது ரூ 800
    [ஊ] வங்கி வசூலித்த முதலீடு மீதான வட்டி ரூ 200
    [எ] வங்கிக் கட்டணம் ரூ 100     

  52. இராமனின் ஏடுகள் சமன்படவில்லை. இருப்பாய்வின் வித்தியாசத் தொகையாகிய ரூ.1,270-ஐ கணக்காளர் அனாமத்துக் கணக்கில் பற்று வைத்தார். பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும்.
    (அ) உரிமையாளரால் சொந்த உபயோகத்திற்காக ரூ.75 மதிப்புள்ள சரக்கு எடுக்கப்பட்டது ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.
    (ஆ) சண் சண்முகத்திற்கு கடனுக்கு ரூ.430 க்கு சரக்கு விற்றது அவர் கணக்கில் ரூ.340 என வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது
    (இ) விவேக்கிடமிருந்து கடனுக்கு ரூ.400 க்கு சரக்கு வாங்கியது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டது. ஆயினும், விவேக்கின் கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
    (ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகைகை ரூ.300 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை

  53. ஜனவரி 1, 2016 அன்று ரூ. 25,000க்கு சொத்து ஒன்று வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட வேண்டும். அச்சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 1,000. கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கப்பெறுகின்றன. தேய்மான விகிதம் கணக்கிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  54. பின்வருவனவற்றை முதலினம் அல்லது வருவாயினம் என வகைப்படுத்தவும்.
    (i) இரயில்வேத் துறைக்கு, இரயில் தண்டவாளம் அமைக்க செலுத்திய தொகை ரூ 50,000.
    (ii) பழைய அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம்.
    (iii) சரக்கு விற்பனையின் பேரில் செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.

  55. பின்வரும் சரண் என்பவரின் இருப்பாய்விலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.
    31.12.2017 அன்றைய இறுதிச்சரக்கிருப்பு ரூ 2,50,000 என்று மதிப்பிடப்பட்டது.

    பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ
    சரக்கிருப்பு (1.1.2017) 2,00,000 பற்பல கடனீந்தோர் 12,000
    கொள்முதல் 7,50,000 கொள்முதல் திருப்பம் 30,000
    உள்தூக்குக் கூலி   விற்பனை  
    கூலி   பெற்ற கழிவு 53,000
    சம்பளம்   முதல் 33,00,000
    பழுதுபார்ப்புச் செல்வுகள்      
    வாடகையும், வரியும்      
    கைரொக்கம்      
    நிலம்       
    எடுப்புகள்      
    வங்கி வைப்புகள்      
      44,15,000   44,15,000
  56. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து, குமார் அவர்களின் 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

     பற்று இருப்பு   ரூ   வரவு இருப்பு   ரூ 
     கொள்முதல்     14,500   விற்பனை     20,100
      நிலக்கரி மற்றும் எரிபொருள்     600   செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு    400
      உள்தூக்குக் கூலி 750   வாடகைப் பெற்றது 2,500
      விளம்பரம் 500   கடனீந்தோர் 2,000
      வெளித்தூக்குக் கூலி 400   முதல் 5,000
      வங்கி 1,200      
      அறைகலன் 8,000    
      கடனாளிகள் 2,250    
      பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 300    
      சரக்கிருப்பு (01.01.2017) 1,500    
      30,000   30,000

    சரிக்கட்டுதல்கள்:
    (அ) 31.12.2017 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 3,900
    (ஆ) முன்கூட்டிச் செலுத்திய உள்தூக்குக் கூலி ரூ 250
    (இ) முன்கூட்டிப் பெற்ற வாடகை ரூ 100
    (ஈ) மேலாளருக்கான கழிவு, அவரது கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 5% தரப்பட வேண்டும்.

  57. சாரா நிறுவனம் கடன் அடிப்படையில் விற்பனையை மேற்கொள்கின்றது. காலக்கெடு முடிந்தவுடன் ஆண்டிற்கு 2% வட்டி விதிப்பது அவர்களின் கொள்கை. பின்வரும் தரவுகளிலிருந்து ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் பெற வேண்டிய தொகையினைக் கண்டுபிடிக்கவும். ஆண்டிற்கு 365 நாட்கள் எனக் கொள்ளவும்.

    Customer Sales ரூ Date of Sales Period of Credit (days) Date of Settlement
    M 25,000 10-04-2016 60 05-07-2016
    N 14,000 28-05-2016 30 25-07-2016
    P 28,000 14-07-2016 45 25-08-2016
    R 54,000 03-08-2016 90 02-01-2017

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் மாதிரி வினாத்தாள் ( Plus One Accountancy Public Exam March 2019 Official Model Question Paper )

Write your Comment