Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 50
    50 x 1 = 50
  1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

    (a)

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

    (b)

    வரலாற்றுக்காலம்

    (c)

    பழங் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. பர்சஹோம் _________ நிலவிய இடமாகும்

    (a)

    காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு

    (b)

    கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப்பண்பாடு

    (c)

    கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு

    (d)

    தென்னிந்தியாவின் புதிய கற்ககாலப்பண்பாடு

  3. ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக _________ இருந்தது.

    (a)

    வேளாண்மை

    (b)

    மட்பாண்டம் செய்தல்

    (c)

    கைவினைத்தொழில்கள்

    (d)

    மீன் பிடித்தல்

  4. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____ 

    (a)

    காலிபங்கன்

    (b)

    லோத்தல்

    (c)

    பனவாலி

    (d)

    ரூபார்

  5. ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.

    (a)

    செம்மை

    (b)

    இரும்பை

    (c)

    வெண்கலத்தை

    (d)

    தங்கத்தை

  6. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர்_______ குறியீடுகளைக் கொண்டுள்ளது.

    (a)

    26

    (b)

    36

    (c)

    16

    (d)

    46

  7. மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    குருபாஞ்சாலம்

    (b)

    கங்கைச்சமவெளி

    (c)

    சிந்துவெளி

    (d)

    விதேகா

  8. கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை . 
    காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

    (a)

    கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரியானது. காரணம் தவறானது

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .

  9. ____________  வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

    (a)

    இரும்பு

    (b)

    வெண்கலம்

    (c)

    செம்பு

    (d)

    பித்தளை 

  10. வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும் 

    (a)

    கோசலம்

    (b)

    அவந்தி 

    (c)

    மகதம்

    (d)

    குரு

  11. திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?

    (a)

    பால

    (b)

    பிரகிருதம்

    (c)

    சமஸ்கிருதம்

    (d)

    இந்தி

  12. ______ என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலை பதித்த இடம்' என்று பொருள்.

    (a)

    மகாஸ்ரீனபதம்

    (b)

    ஜனபதம்

    (c)

    கிசாசம்சிக்கா

    (d)

    குரு பாஞ்சாலம்

  13. வேளாண் நிலத்தின் மீதான வரி _______ எனப்பட்டது.

    (a)

    சுரா

    (b)

    சுல்கா

    (c)

    பலி

    (d)

    பாகா

  14. அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _____________ 

    (a)

    மகாபாபத்ம நந்தர்

    (b)

    தன நந்தர்

    (c)

    பிந்துசாரர்

    (d)

    பிம்பிசாரர்

  15. பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து___________என்ற நகரை அழித்தார்.

    (a)

    கபிஷா

    (b)

    ஆக்கிமீனைட்

    (c)

    கதாரா

    (d)

    ஹராவதி

  16. "இந்து" என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு_____________.

    (a)

    அய்கோப்ன கல்வெட்டு

    (b)

    முதலாம் டாரியஸின் கல்வெட்டு

    (c)

    ஜீனாகத் கல்வெட்டு

    (d)

    சாரநாத் கல்வெட்டு

  17. கரிகாலன் ________________ மகனாவார்

    (a)

    செங்கண்ணன்

    (b)

    கடுங்கோ

    (c)

    இளஞ்சேட்சென்னி

    (d)

    அதியமான்

  18. _____________ராஜசூய யாகத்தை நடத்தினார்

    (a)

    பெருநற்கிள்ளி

    (b)

    முதுகுடுமிப் பெருவழுதி

    (c)

    சிமுகா

    (d)

    அதியமான்

  19. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

    (a)

    வசிஷ்டபுத்ர புலுமாவி

    (b)

    நாகபனா

    (c)

    கடம்பர்

    (d)

    யக்னஸ்ரீ சதகர்னி

  20. _______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார். 

    (a)

    சேர

    (b)

    சோழ

    (c)

    பாண்டிய

    (d)

    சாதவாகன 

  21. பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________ 

    (a)

    முசிறி

    (b)

    தொண்டி

    (c)

    புகார்

    (d)

    கொற்கை

  22. "சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________

    (a)

    கூரம் செப்பு பட்டயம்

    (b)

    ஐஹோல் கல்வெட்டு

    (c)

    அலகாபாத் கல்வெட்டு

    (d)

    பூலாங்குறிச்சி கல்வெட்டு

  23. இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி ………………………….. என்று குறிப்பிடப்பட்டது.

    (a)

    மதுரா கலை

    (b)

    காந்தாரக் கலை

    (c)

    பாக் கலை

    (d)

    பாலா கலை

  24. ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்,
    (i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோம் எழுச்சியுற்றது.
    (ii) அரேபியக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸால் கண்டுபிடிக்கப்பட்டது.

    (a)

    (i) சரி

    (b)

    (ii) சரி

    (c)

    (i), (ii) இரண்டுமே சரி

    (d)

    (i), (ii) இரண்டுமே தவறு

  25. புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______ 

    (a)

    ருத்ராமன்

    (b)

    ருத்ரமறன்

    (c)

    ருத்ரதாசன்

    (d)

    ருத்ரதாமன்

  26. சோழமண்டலக்  கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்

    (a)

    முசிறி

    (b)

    தொண்டி

    (c)

    கொற்கை

    (d)

    புகார்

  27. கூற்று: பிளாண்டார் குறித்த தகவல்களை நாம் அறிவதற்கு அவரது தூதர் ஹீலியோடோரஸ் என்பவரே காரணம்
    காரணம்: இவர் பாகபத்ர அரசரின் அரச சபைக்கு தூதராக பிளாண்டரால் அனுப்பப்பட்டார்.

    (a)

    கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று சரி, காரணம் தவறு

    (c)

    கூற்று தவறு, காரணம் சரி

    (d)

    கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றிற் விளக்கவில்லை

  28. குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

    (a)

    இலக்கியச் சான்றுகள்

    (b)

    கல்வெட்டு சான்றுகள்

    (c)

    நாணயச் சான்றுகள்

    (d)

    கதைகள், புராணங்கள்

  29. தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவர் _______

    (a)

    திக்நாகர்

    (b)

    வசுபந்து

    (c)

    சந்திரகாமியா

    (d)

    வராகமிகிரர்

  30. ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.

    (a)

    கிரகவர்மன்

    (b)

    அவலலோகிதேஷ்வர போதிசத்வர்

    (c)

    பிரபாகரவர்த்தனர்

    (d)

    போனி

  31.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

    (a)

    குந்தலா

    (b)

    பானு

    (c)

    அவந்தி

    (d)

    சர்வாகதா

  32. தேர்ந்தெடுத்துப் பொருத்துக.

     (1) சிம்மவிஷ்ணு    - சாளுக்கியா 
     (2) முதலாம் ஜெயசிம்மன்     - ராஷ்ட்டிரகூடர்  
     (3) முதலாம் ஆதித்தன்  - கப்பல் தளம்
     (4) மாமல்லபுரம்  - சோழஅரசன்
    (a)

    4, 3, 1, 2

    (b)

    4, 1, 2, 3

    (c)

    2, 1, 4, 3

    (d)

    4, 3, 2, 1

  33. காம்போஜம் என்பது நவீன ………………

    (a)

    அஸ்லாம்

    (b)

    சுமத்ரா

    (c)

    ஆனம்

    (d)

    கம்போடியா

  34. ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?

    (a)

    தேவாரம்

    (b)

    திருவாசகம்

    (c)

    நாலாயிரத்திவ்யபிரபந்தம்

    (d)

    பன்னிரு திருமுறை

  35. யுவான் - சுவாங் காஞ்சிக்கு வருகைபுரிந்தபோது இருந்த பல்லவ மன்னன் _________ 

    (a)

    முதலாம் மகேந்திர வர்மன்

    (b)

    முதலாம் நரசிம்ம வர்மன்

    (c)

    ராஜசிம்மன்

    (d)

    இரண்டாம் புல்கேசி

  36. எல்லோரா குகைகளை உலக பாரம்பரியமிக்க சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு _________ 

    (a)

    1953

    (b)

    1963

    (c)

    1937

    (d)

    1983

  37. 8ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் ________ ஆவார்.

    (a)

    ஹஜ்ஜஜ்

    (b)

    முகமது-பின்-காஸிம்

    (c)

    ஜெய சிம்ஹ

    (d)

    தாகிர்

  38. பாலம் பவோலி  கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது

    (a)

    சமஸ்கிருதம்

    (b)

    பாரசீக மொழி

    (c)

    அரபி

    (d)

    உருது

  39. _________________ஒரு கலத்துக்குச் சமம் ஆகும்

    (a)

    28.கி.கி 

    (b)

    27கி.கி 

    (c)

    32கி.கி 

    (d)

    72கி.கி 

  40. முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது

    (a)

    நாட்டார்

    (b)

    மாநகரம்

    (c)

    நகரத்தார்

    (d)

    ஊரார்

  41. பொஆ.800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு ___________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது

    (a)

    மத்திய அரசு

    (b)

    கிராமம்

    (c)

    படை

    (d)

    மாகாணம்

  42. ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக _____ இடம் பணி செய்தனர்.

    (a)

    காகதியர்

    (b)

    ஹொய்சாளர்

    (c)

    பீஜப்பூர் சுல்தான்

    (d)

    யாதவர்

  43. ஷா நாமாவை எழுதியவர் _______ 

    (a)

    பிர்தெளசி

    (b)

    இபின் பதூதா

    (c)

    நிக்கோலோ டி கோன்டி

    (d)

    டோமிங்கோ பயஸ்

  44. _____ கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.

    (a)

    இராஜா கிருஷ்ண தேவ்

    (b)

    சுல்தான் குலிகுதுப்பான்

    (c)

    முகமது கவான்

    (d)

    பாமன் ஷா

  45. அத்வைதம்  என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர் _____ 

    (a)

    ஆதிசங்கரர் 

    (b)

    இராமானுஜர் 

    (c)

    இராமானந்தர் 

    (d)

    சைதன்யர் 

  46. சரியான கூற்றினைத் தேர்ந்தெடு 

    (a)

    தனது தொடக்ககால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால் சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்.

    (b)

    சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினார்  

    (c)

    இராம பக்தியை முன்னிலைப்படுத்தி வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றனர்.
     

    (d)

    பௌத்த மத நூல்களில் ரவிதாஸின் பக்திப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  47. 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.

    (a)

    காலாப் படை 

    (b)

    குதிரைப் படை 

    (c)

    பீரங்கிப் படை 

    (d)

    யானைப் படை 

  48. கடைசிப்போரான காக்ரா போரில் பாபர் ______ எதிராகப் போரிட்டார்.

    (a)

    ஆப்கானியர்களுடன் 

    (b)

    ராஜபுத்திரர்களுடன் 

    (c)

    துருக்கியர்களுடன் 

    (d)

    மராட்டியர்களுடன் 

  49. தவறான கூற்றினைக் கண்டுபிடி

    (a)

    ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 1 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண் டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர்.

    (b)

    ஷெர்ஷா வின் நாணய முறை , ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்ட து.

    (c)

    முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமை யான இறுதிப் போர் ஆகும்.

    (d)

    சீக்கியப் புனித நூலான “குரு கிரந்த சாகிப்” குரு அர்ஜு ன் தேவால் தொகுக்கப்பட்டது.

  50. மேற்கு ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் நுழை வாயிலாக இருந்த துறைமுகம் ___________ ஆகும். 

    (a)

    டையூ

    (b)

    கல்கத்தா

    (c)

    பம்பாய்

    (d)

    சூரத்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One History Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment