Plus One All Chapters One Mark Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

    40 x 1 = 40
  1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

    (a)

    சமூகக் கணக்கியல்

    (b)

    காரியதரிசிகளின் கணக்கியல்

    (c)

    மேலாண்மைக் கணக்கியல்

    (d)

    பொறுப்பு கணக்கியல்

  2. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  3. நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

    (a)

    கணக்கு

    (b)

    நடவடிக்கை

    (c)

    சான்றுச்சீட்டு

    (d)

    இடாப்பு

  4. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் நோக்கமல்ல.

    (a)

    வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்

    (b)

    வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.

    (c)

    நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல்.

    (d)

    பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல் தருதல்.

  5. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  6. நிறுவனத் தொடர்ச்சி அனுமானத்தின்படி நிறுவனத்தின் ஆயுள்

    (a)

    மிக குருக்கலானது என்று கூறுகின்றது

    (b)

    மிக நீளமானது என்று கூறுகின்றது

    (c)

    நீடித்த வாழ்வு இல்லை என்று கூறுகின்றது

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  7. கணக்கியலின் ஆதாரத் தூண்களாக விளங்குபவை _________________ 

    (a)

    அடிப்படை அனுமானங்கள்

    (b)

    எதிர்பார்க்கும் நட்டங்கள் 

    (c)

    நிறுவனத் தொடர்ச்சி

    (d)

    கணக்கியல் கருத்துகள்

  8. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

    (a)

    சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்

    (b)

    சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்

    (c)

    பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

    (d)

    முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

  9. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு

    (a)

    பெயரளவு கணக்கு

    (b)

    ஆள்சார் கணக்கு

    (c)

    சொத்துக் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  10. ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவுத்தன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  11. நடவடிக்கையின் தோற்றம் பெறுவது

    (a)

    குறிப்பேடு

    (b)

    ஆதார ஆவணங்கள்

    (c)

    கணக்கியல் சமன்பாடு

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  12. கு.ப.எ. என்பது

    (a)

    பேரேட்டு பக்க எண்

    (b)

    குறிப்பேட்டு பக்க எண்

    (c)

    சான்று சீட்டு எண்

    (d)

    ஆணை எண்

  13. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  14. பெயரளவுப் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது _________. 

    (a)

    வரவு/ஆதாயம் 

    (b)

    செலவு / நட்டம் 

    (c)

    சொத்து 

    (d)

    பொறுப்பு 

  15. இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்

    (a)

    ஆள்சார் கணக்குகள் மட்டும்

    (b)

    சொத்துக் கணக்குகள் மட்டும் 

    (c)

    பெயரளவு கணக்குகள் மட்டும்

    (d)

    அனைத்து கணக்குகளும்

  16. பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தத் தொகை முறை

    (c)

    மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  17. அனாமத்துக் கணக்கின் வரவு இருப்பு தோன்றுவது _____ 

    (a)

    இலாப நட்டக் கணக்கு வரவுப் பக்கத்தில்

    (b)

    இருப்பு நிலைக் குறிப்பு பொறுப்புகள் பக்கத்தில்

    (c)

    இருப்பு நிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில்

    (d)

    இவை எதுவுமில்லை

  18. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

    (a)

    விற்பனை கணக்கு

    (b)

    ரொக்க கணக்கு

    (c)

    கொள்முதல் கணக்கு

    (d)

    உரிய குறிப்பேடு

  19. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்

    (a)

    ரொக்க ஏடு

    (b)

    பேரேடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    கொமுதல் ஏடு

  20. மறுப்புச் சான்றிதழை வழங்குபவர்

    (a)

    பொதுக்குறிப்பர்

    (b)

    எழுதுநர் 

    (c)

    எழுதுப்பெறுநர் 

    (d)

    செலுத்தப் பெறுநர்

  21. எழுதப்பெறுநரின் அவமதிப்பிற்கான விளக்கத்தினை வழக்கறிஞர் பதிவுசெய்தல் மாற்றுச்சீட்டை _________ செய்தல் எனப்படும்.

    (a)

    குறிக்கை 

    (b)

    எடுத்தெழுதல்

    (c)

    மேலெழுதல்

    (d)

    அவமதிப்பு

  22. தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    சாதாரண ரொக்க ஏடு

    (b)

    இருபத்தி ரொக்க ஏடு

    (c)

    முப்பத்தி ரொக்க ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  23. சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு

    (a)

    ஒரு செலவு

    (b)

    ஒரு இலாபம்

    (c)

    ஒரு சொத்து 

    (d)

    ஒரு பொறுப்பு 

  24. ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி இருப்பு காட்டுவது 

    (a)

    நிகர வருமானம் 

    (b)

    கையிருப்பு ரொக்கம் 

    (c)

    மொத்த லாபம் 

    (d)

    நிகர லாபம் 

  25. சில்லறை ரொக்க ஏட்டினைப் பராமரிப்பவர் _________என அழைக்கப்படுகிறார்.

    (a)

    உரிமையாளர் 

    (b)

    வங்கியர் 

    (c)

    சில்லறைக் காசாளர் 

    (d)

    அலுவலகர் 

  26. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் பற்றிருப்பு என்பது

    (a)

    வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு

    (b)

    வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு

    (c)

    ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று

    (d)

    மேற்கூறிய ஏதுமில்லை

  27. வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ.1,000. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ரூ.2,000. ரொக்க  ஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?

    (a)

    3,000 மேல்வரைப்பற்று

    (b)

    3,000 சாதகமான இருப்பு

    (c)

    1,000 மேல்வரைப்பற்று

    (d)

    1,000 சாதகமான இருப்பு

  28. இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்

    (a)

    விதிப்பிழைகள்

    (b)

    அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்

    (c)

    குறைவாகக் கூட்டுதல் பிழைகள்

    (d)

    பகுதி விடு பிழைகள்

  29. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,

    (a)

    ஆண்டுதோறும் அதிகரிக்கும்

    (b)

    ஆண்டுதோறும் குறையும்

    (c)

    அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்

    (d)

    ஆண்டுதோறும் மாறக்கூடியது

  30. தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?

    (a)

    காலப்போக்கு

    (b)

    பயன்பாடு

    (c)

    வழக்கொழிவு

    (d)

    அ, ஆ மற்றும் இ

  31. சுரங்கங்கள், எண்ணெய் கிணறுகள் போன்ற இயற்க்கை வளங்களின் மதிப்புக் குறைதல் ________எனப்படும்.

    (a)

    போக்கெழுதல் 

    (b)

    வழக்கொழிவு 

    (c)

    வெறுமையாதல் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  32. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  33. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது

    (a)

    கடந்த காலத்திற்கு

    (b)

    எதிர் காலத்திற்கு

    (c)

    நடப்பு காலத்திற்கு

    (d)

    எந்த காலத்திற்கும்

  34. விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு__________________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு 

    (d)

    முதலின வரவு

  35. வணிகத்தின் நிகர இலாபம் __________ அதிகரிக்கும்

    (a)

    எடுப்புகளை

    (b)

    பெறுதல்களை

    (c)

    பொறுப்புகளை

    (d)

    முதலினை

  36. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

    (a)

    ஓர் நடப்புச் சொத்து

    (b)

    ஓர் நீர்மைச் சொத்து

    (c)

    புலனாகும் சொத்து

    (d)

    புலனாகாச்சொத்து

  37. கையிருப்பு ரொக்கம் உதாரணமாக இருப்பது      

    (a)

    நடப்புச் சொத்துக்கு  

    (b)

    நிலைச் சொத்துக்கு  

    (c)

    நடப்புப் பொறுப்புக்கு 

    (d)

    நிலை பொறுப்புக்கு 

  38. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.

    (a)

    இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்

    (b)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

    (c)

    மேற்கண்ட இரண்டிலும்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  39. உரிமையாளரின் முதல் தொகை ரூ 7,00,000 ஆண்டுக்கு 8% முதல் மீதான வட்டி அனுமதிக்கப்பட்டால் முதல் மீதான வட்டி _______. 

    (a)

    ரூ 56,000 

    (b)

    ரூ 5,600

    (c)

    ரூ5,60,000

    (d)

    ரூ 7,00,000

  40. கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது

    (a)

    கணினி அமைப்பு செயலிழத்தல்

    (b)

    துல்லியத்தன்மை

    (c)

    பலதுறைப் புலமை

    (d)

    தேக்ககம்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை2019 ( 11th Standard Accountancy Important 1 mark Questions )

Write your Comment