முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 46

    பகுதி I

    46 x 1 = 46
  1. எது கார்பனேட் வகை தாது அல்ல?

    (a)

    சிடிரைட்

    (b)

    காலமைன்

    (c)

    செருசைட்

    (d)

    காசிட்டரைட்

  2. புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படும் தாது வகை ________.

    (a)

    ஆக்சைடு தாது

    (b)

    சல்பைடு தாது

    (c)

    கார்பனேட் தாது

    (d)

    சல்பேட் தாது

  3. எவ்வுலோகத் தாதுவினை அடர்ப்பிக்க அம்மோனியா வேதிக் கழுவுதல் பயன்படுகிறது?

    (a)

    சில்வர்

    (b)

    காப்பர்

    (c)

    அலுமினியம்

    (d)

    துத்தநாகம்

  4. உலோக ஆக்சைடை உலோகமாக ஒடுக்க, இணைக்கப்பட்ட வினையில் கட்டிலா ஆற்றல் மாற்றம் _________ பெறும் வகையில், ஒடுக்கும் காரணியாக தெரிவு செய்யப்படுகிறது.

    (a)

    அதிக நேர்க்குறி மதிப்பினை

    (b)

    குறைந்த நேர்க்குறி மதிப்பினை

    (c)

    அதிக எதிர்க்குறி மதிப்பினை

    (d)

    குறைந்த எதிர்க்குறி மதிப்பினை

  5. புலத்தூய்மையாக்கல் முறை மூலம் தூய்மையாக்கப்படாத  உலோகம் எது?

    (a)

    ஜெர்மானியம்

    (b)

    சிர்கோனியம்

    (c)

    சிலிக்கன்

    (d)

    காலியம்

  6. பின்வருவனவற்றுள் எது புலத் தூய்மையாக்கல் மூலம் தூய்மையாக்கப்படவில்லை?

    (a)

    சிலிக்கன்

    (b)

    காலியம்

    (c)

    சிர்கோனியம்

    (d)

    ஜெர்மானியம்

  7. அயனியாக்கும் ஆற்றல் குறையும் போது, தனிமங்களின் உலோகத்தன்மை _________.

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    மாறாமல் உள்ளது

    (d)

    பூஜ்யமாகிறது

  8. எலக்ட்ரான் நாட்டம் அதிகம் கொண்ட தனிமம் ________.

    (a)

    ப்ளூரின் 

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  9. போராக்ஸின் வாய்ப்பாடு
    i) Na2B4O7.10H2O
    ii) Na2[B4O5(OH)4].8H2O
    iii) Na2[B4O5(OH)4].2H2

    (a)

    (i) மட்டும்

    (b)

    (i) & (ii) மட்டும்

    (c)

    (i) & (iii) மட்டும்

    (d)

    (iii) மட்டும்

  10. உலோகவியலில் இளக்கியாக பயன்படும் சேர்மம் ________.

    (a)

    போரான் நைட்ரைடு

    (b)

    போரிக் அமிலம்

    (c)

    போராக்ஸ்

    (d)

    போரான் டிரை ஆக்ஸைடு

  11. கரைசலில் பொட்டாஷ் படிகாரம் பின்வரும் அயனிகளின் பண்புகளைக் கொண்டுள்ளது _________.

    (a)

    K+ அயனி

    (b)

    Al3+ அயனி

    (c)

    SO4-2 அயனி

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  12. CO மூலக்கூறின் அமைப்பு ______.

    (a)

    முக்கோண வடிவம்

    (b)

    நான்முகி வடிவம்

    (c)

    நேர்கோட்டு வடிவம்

    (d)

    சதுர தள வடிவம்

  13. டால்க் (Talc) என்பது எவ்வகை சிலிக்கேட்? 

    (a)

    ஜனோ சிலிகேட்டுகள்

    (b)

    பைலோ சிலிகேட்டுகள்

    (c)

    டெக்டோ சிலிக்கேட்டுகள் 

    (d)

    பைலோ சிலிக்கேட்டுகள் 

  14. பின்வரும் எச்சேர்மம் வெப்பச் சிதைவிற்கு உட்பட்டு தூய நைட்ரஜனை தருகிறது?

    (a)

    NaNO2

    (b)

    NaNO3

    (c)

    NaN3

    (d)

    HNO3

  15. யூரியாவை நீராற்பகுத்தால் கிடைப்பது _______.

    (a)

    NO2

    (b)

    HNO3

    (c)

    NH3

    (d)

    N2O

  16. தூய நைட்ரிக் அமிலத்தின் நிறம் ______.

    (a)

    நிறமற்றது

    (b)

    பழுப்பு

    (c)

    இளம்பச்சை

    (d)

    பச்சை

  17. ஹோல்ம்ஸ் முன்னறிப்பானில் பயன்படும் சேர்மங்கள் _________.

    (a)

    CaC2&Ca3P2

    (b)

    AIP & Ca3P2

    (c)

    CaC2 & P4

    (d)

    AlP & P4

  18. திரவ நிலையில் உள்ள ஹேலஜன் _________.

    (a)

    ஃபுளுரின்

    (b)

    குளோரின்

    (c)

    புரோமின்

    (d)

    அயோடின்

  19. ஹேலஜன் அமிலங்களின் வலிமையான அமிலம் எது?

    (a)

    HF

    (b)

    HCl

    (c)

    HBr

    (d)

    HI

  20. மந்த வாயுக்களின் முதலாம் அயனியாக்கும் ஆற்றலின் சரியான வரிசை __________

    (a)

    He < Ne < Ar < Kr

    (b)

    He > Ne > Ar > Kr

    (c)

    He < Ne > Ar < Kr

    (d)

    He> Ne < Ar > Kr

  21. இடைநிலை உலோகங்கள் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதன் காரணம் ______________

    (a)

    சிறிய உருவளவு

    (b)

    காலியான d ஆர்பிட்டால்கள்

    (c)

    அதிக நேர்மின் சுமை

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  22. இடைநிலைத் தனிமங்கள் எளிதாக உலோகக் கலவைகளை உருவாக்குகின்றன, ஏனெனில் அவைகள் _______ பெற்றிருக்கின்றன.

    (a)

    ஒரே அணு எண்

    (b)

    எலக்ட்ரான் அமைப்பு

    (c)

    ஏறக்குறைய ஒரே அணு உருவளவு

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  23. Fe2+ அயனியின் நிறம் _________

    (a)

    நீலம்

    (b)

    வெளிர் பச்சை

    (c)

    அடர் பச்சை

    (d)

    மஞ்சள்

  24. லாந்தனைடு குறுக்கத்தின் விளைவு பின்வரும் எதற்கு காரணமாகிறது?

    (a)

    Zr மற்றும் Y இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன

    (b)

    Zr மற்றும் Nb இரண்டும் ஒரே ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளன

    (c)

    Zr மற்றும் Hf இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன.

    (d)

    Zr மற்றும் Zn இரண்டும் ஒரே ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளன.

  25. Y3+, La3+, Eu3+, Lu3+ அயனிகளின் சரியான அயனி ஆர வரிசை (அணு எண் Ti = 39; La = 57; Eu = 63; Lu = 71)

    (a)

    Y3+ < La3+ < Eu3+ < Lu3+

    (b)

    Y3+ < Lu3+ < Eu3+ < La3+

    (c)

    Lu3+ < Eu3+ < La3+ < Y3+ 

    (d)

    La3+ < Eu3+ < Lu3+ < Y3+ 

  26. காப்பர் மற்றும் இரும்பு ஆகிய இரண்டும் உள்ள தாது ____________

    (a)

    மாலகைட்

    (b)

    சால்கோபைரைட்

    (c)

    சால்கோசைட்

    (d)

    அசுரைட்

  27. ___________ ஆக்சோ நேர் அயனியை உருவாக்குகின்றன

    (a)

    ஆக்டினைட்டுகள் 

    (b)

    லாந்தனைடுகள்

    (c)

    s - தொகுதி தனிமங்கள்

    (d)

    p - தொகுதி தனிமங்கள்

  28. நிறுத்தைப் பொறுத்து வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக

    (a)

    U3+

    (b)

    U4+

    (c)

    UO2+2

    (d)

    Th4+

  29. KMnO4 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

    (a)

    குரோமைட் இரும்பு தாது

    (b)

    பைரோலுசைட்

    (c)

    பெரஸ் சல்பைடு 

    (d)

    இரும்பு பைரைட்

  30. அசிட்டால்டிஹைடிலிருந்து அசிட்டிக் அமிலம் தயாரிக்க பயன்படும் வினைவேக மாற்றி __________

    (a)

    CO2(CO)8

    (b)

    TiCl4 + Al(C2H5)3

    (c)

    Rh/lr அணைவு

    (d)

    TiCl4

  31. மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறணை நிறைவு செய்வது ______________

    (a)

    நேர் அயனிகள் 

    (b)

    எதிர் அயனிகள் 

    (c)

    நடுநிலை மூலக்கூறுகள் 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  32. அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் _____________ ஆகும். 

    (a)

    அயனியுறும் இணைதிறன் 

    (b)

    அயனியுறா இணைதிறன் 

    (c)

    திசைநோக்கும் பண்பற்றது.

    (d)

    ஆக்சிஜனேற்ற எண் 

  33. K [PtCl3 (C2 H4)] என்பதன் பெயர் ___________

    (a)

    வில்கின்சன் வினைவேகமாற்றி 

    (b)

    சிக்லர் - நட்டா வினைவேக மாற்றி 

    (c)

    மேக்ஸன் பச்சை உப்பு 

    (d)

    சீசஸ் உப்பு 

  34. [Cr (NH3)4 ClBr] NO2 மற்றும் [Cr(NH3)4 ClNO2] Br ஆகிய இரண்டு அணைவுச் சேர்மங்களும்____________

    (a)

    இணைப்பு மாற்றியங்கள் 

    (b)

    அயனியாதல் மாற்றியங்கள் 

    (c)

    அணைவு மாற்றியங்கள் 

    (d)

    கரைப்பணேற்ற மாற்றியங்கள் 

  35. மைய உலோக அயனியின் (n -1) d ஆர்பிட்டால்கள் இனக்கலப்பில் ஈடுபட்டால் அந்த அணைவுச் சேர்மம் ___________ எனப்படும்.

    (a)

    வெளி ஆர்பிட்டால் அணைவு 

    (b)

    இணை சுழற்சி அணைவு 

    (c)

    உயர் சுழற்சி அணைவு 

    (d)

    தனித்த சுழற்சி அணைவு 

  36. [Cu(NH3)4]2+ என்ற அணைவு அயனியின் நிலைப்புத்தன்மையற்ற மாறிலி 1.0 x 10-12 எனில், அதன் நிலைப்புத் தன்மை மாறிலி மதிப்பு ______________

    (a)

    1.0 x 10-12

    (b)

    1.0 x 1012

    (c)

    12

    (d)

    -12

  37. புற்று நோய் கட்டிகளுக்கு எதிரான மருந்துப் பொருளாகப் பயன்படும் அணைவுச் சேர்மம் ____________

    (a)

    Ca - EDTA அணைவு 

    (b)

    சிஸ் - பிளாட்டின் 

    (c)

    டிரான்ஸ் பிளாட்டின் 

    (d)

    சயனோ கோபாலமின் 

  38. படிக வடிவமற்ற திடப்பொருட்கள் ______ எனப்படும்.

    (a)

    திசையொப்பு பண்பு உடையவை 

    (b)

    திசையொப்பு பண்பற்றவை 

    (c)

    புறவேற்றுமை வடிவங்கள் உடையவை 

    (d)

    மாற்றியங்கள் உடையவை 

  39. முனைவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன

    (a)

    வலிமையான நிலை மின்னியல் கவர்ச்சி விசை 

    (b)

    முனைவுற்ற சகப்பிணைப்புகள் 

    (c)

    வலிமை குறைந்த லண்டன் விசைகள் 

    (d)

    ஹைட்ரஜன் பிணைப்புகள் 

  40. ஒரு எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை _______________

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    6

  41. கன சதுர அமைப்பின் விளிம்பு நீளம் 'a' எனில் SC, bcc, fcc ஆகிய அலகு கூட்டில் உள்ள கோளங்களின் ஆரங்கள் முறையே _____________

    (a)

    \(\frac { 1 }{ 2 } a;\frac { \sqrt { 3 } }{ 2 } a;\frac { \sqrt { 2 } }{ 2 } a\)

    (b)

    \(1a;\sqrt { 3 } a;\frac { 1 }{ \sqrt { 2 } } a\)

    (c)

    \(\frac { 1 }{ 2 } a;\frac { \sqrt { 3 } }{ 4 } a;\frac { 1 }{ 2\sqrt { 2 } } a\)

    (d)

    \(\frac { 1 }{ 2 } a;\sqrt { 3 } a;\frac { 1 }{ \sqrt { 2 } } a\)

  42. வினை வேகம் = k[A] 3/2 [B]1 என்ற வேக விதியினை வினை வகை வினைபடு பொருள் B யினைப் பொறுத்து ____________

    (a)

    1.5

    (b)

    1

    (c)

    2.5

    (d)

    3

  43. ஒரு வினையின் வினை வகையை __________ மூலம் தீர்மானிக்கலாம்.

    (a)

    வேதிவினைக் கூறு விகிதம் 

    (b)

    சோதனை 

    (c)

    வினை வழிமுறை 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  44. ஒரு முதல் வகை வினை 99.9% முற்றுப் பெறுவதற்கு தேவைப்படும் காலம் _____________

    (a)

    2 t1/2

    (b)

    5 t1/2

    (c)

    10 t1/2

    (d)

    100 t1/2

  45. வினைவேக மாற்றி ஒரு வினையின் கிளர்வு ஆற்றலை __________

    (a)

    அதிகரிக்கிறது 

    (b)

    குறைகிறது 

    (c)

    மாற்றுவதில்லை 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  46. வினை வேகம் =K[A]3/2[B]-1/2 என்ற வேக விதி கொண்ட வினையின் ஒட்டுமொத்த வினை வகை மதிப்பு _________________

    (a)

    2

    (b)

    1

    (c)

    -1/2

    (d)

    3/2

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment