பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

    பகுதி I

    30 x 1 = 30
  1. இரும்பின் தாது எது?

    (a)

    லிமோனைட்

    (b)

    அசுரைட்

    (c)

    ஸ்டீபினைட்

    (d)

    செருசைட்

  2. வறுத்தல் செயல்முறையில் சல்பைடு தாதுக்கள் _________ ஆக மாற்றப்படுகின்றன.

    (a)

    உலோகங்கள்

    (b)

    ஆக்சைடுகள்

    (c)

    கார்பனேட்கள்

    (d)

    நைட்ரேட்கள்

  3. வான் ஆர்கல் முறை மூலம் தூய்மையாக்கப்படும் உலோகம் எது?

    (a)

    காலியம்

    (b)

    டைட்டானியம்

    (c)

    ஜெர்மானியம்

    (d)

    சிலிக்கன்

  4. p - தொகுதியில் உலோகங்கள் காணப்படும் இடம் ______.

    (a)

    வலது புறம் மேற்பகுதி

    (b)

    நடுப்பகுதி

    (c)

    இடது புறம் கீழ்ப்பகுதி

    (d)

    தொகுதியின் கீழ்ப்பகுதி

  5. போரானின் பெரும்பாலான சேர்மங்கள்
    i) லூயி அமிலங்கள்
    ii) எலக்ட்ரான் மிகைச் சேர்மங்கள்
    iii) லூயி காரங்கள்
    iv) எலக்ட்ரான் குறைச் சேர்மங்கள்

    (a)

    (i) & (ii)

    (b)

    (ii) & (iii)

    (c)

    (i) & (iv)

    (d)

    (iii) & (iv)

  6. கார்பன் மோனாக்சைடு ஒளி முன்னிலையில் குளோரினுடன் வினைபட்டு உருவாகும் விஷத்தன்மை கொண்ட வாயு ________.

    (a)

    கடுகு எண்ணெய் வாயு

    (b)

    பாஸ்ஜின் 

    (c)

    பாஸ்பீன்

    (d)

    கார்பைலமீன் 

  7. ஸ்பொடுமின் என்பதன் வாய்பாடு _______.

    (a)

    Sc2Si2O7

    (b)

    Li Al(SiO3)2

    (c)

    [Be3Al2(SiO3)6]

    (d)

    Be2SiO4

  8. யூரியாவை நீராற்பகுத்தால் கிடைப்பது _______.

    (a)

    NO2

    (b)

    HNO3

    (c)

    NH3

    (d)

    N2O

  9. வெண்பாஸ்பரஸ் ________ல் பாதுகாக்கப்படுகிறது.

    (a)

    மண்ணெண்ணெய்

    (b)

    நீர்

    (c)

    ஆல்ஹகால்

    (d)

    ஈதர்

  10. எரிமலை வெடித்தலில் வெளியேறும் வாயு _________.

    (a)

    NO2

    (b)

    NO

    (c)

    SO2

    (d)

    SO3

  11. ஹேலஜன் அமிலங்களின் வலிமையின் சரியான வரிசை _________.

    (a)

    HF > HCl > HBr > HI

    (b)

    HF < HCl < HBr < HI

    (c)

    HF > HCl < HBr > HI

    (d)

    HF < HCl > HBr < HI

  12. இடைநிலைத் தனிமங்கள் அனைத்தும் _______________

    (a)

    உலோகங்கள்

    (b)

    அலோகங்கள்

    (c)

    உலோக மற்றும் அலோகங்கள்

    (d)

    வாயுக்கள்

  13. Fe2+ அயனியின் நிறம் _________

    (a)

    நீலம்

    (b)

    வெளிர் பச்சை

    (c)

    அடர் பச்சை

    (d)

    மஞ்சள்

  14. Y3+, La3+, Eu3+, Lu3+ அயனிகளின் சரியான அயனி ஆர வரிசை (அணு எண் Ti = 39; La = 57; Eu = 63; Lu = 71)

    (a)

    Y3+ < La3+ < Eu3+ < Lu3+

    (b)

    Y3+ < Lu3+ < Eu3+ < La3+

    (c)

    Lu3+ < Eu3+ < La3+ < Y3+ 

    (d)

    La3+ < Eu3+ < Lu3+ < Y3+ 

  15. உலோகவியலில், இளக்கி எதற்கு பயன்படுகிறது?

    (a)

    கனிமத்தை சிலிகேட்டாக மாற்ற

    (b)

    உருகும் மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற

    (c)

    உருகாத மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  16. ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை __________

    (a)

    [Rn]5f2-14 6d0-2 7s2

    (b)

    [Xe]5f2-14 5d0-2 5s2

    (c)

    [Rn]5f2-14 5d0-2 5s2

    (d)

    [Rn]4f2-14 5d0-2 6s2

  17. K2Cr2O7 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

    (a)

    குரோமைட் தாது

    (b)

    அர்ஜென்டைட்

    (c)

    பைரேலாலுசைட்

    (d)

    சிங்கைட்

  18. மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணை திறன் என்பது அதன் _____________

    (a)

    அணு எண் 

    (b)

    ஆக்சிஜனேற்ற எண் 

    (c)

    நிறை எண் 

    (d)

    அணைவு எண் 

  19. K4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறன் ____________

    (a)

    +2

    (b)

    +3

    (c)

    +4

    (d)

    +6

  20. பின்வரும் அணைவுச் சேர்மங்களுள் எதில் மைய உலோக அயனி SP3 இனக்கலப்புக்கு உட்படுகிறது?

    (a)

    [Ni (CN)4]2-

    (b)

    [Pt (NH3)4]2+

    (c)

    [NiCl4]2-

    (d)

    [Cu (NH3)4]2+

  21. தாலோ நீலம் என்ற ஆழ்ந்த நீல நிற அணைவு நிறமியின் மைய உலோக அயனி _____________

    (a)

    Ni2+

    (b)

    Co3+

    (c)

    Cu2+

    (d)

    Ag+

  22. படிக வடிவமற்ற திடப்பொருட்கள் ______ எனப்படும்.

    (a)

    திசையொப்பு பண்பு உடையவை 

    (b)

    திசையொப்பு பண்பற்றவை 

    (c)

    புறவேற்றுமை வடிவங்கள் உடையவை 

    (d)

    மாற்றியங்கள் உடையவை 

  23. முனைவுற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன

    (a)

    வலிமையான நிலை மின்னியல் கவர்ச்சி விசை 

    (b)

    முனைவுற்ற சகப்பிணைப்புகள் 

    (c)

    வலிமை குறைந்த லண்டன் விசைகள் 

    (d)

    ஹைட்ரஜன் பிணைப்புகள் 

  24. முகப்பு மைய கனசதுர அலகுக்கூட்டில் முகப்பு மையத்தில் உள்ள அணுவின் பங்கு ______________

    (a)

    \(\frac{1}{2}\)

    (b)

    \(\frac{1}{4}\)

    (c)

    \(\frac{1}{8}\)

    (d)

    \(\frac{1}{16}\)

  25. 2d sinθ=nλ, என்ற பிராக் சமன்பாட்டில் n என்பது ______________

    (a)

    மோல்களின் எண்ணிக்கை 

    (b)

    முதன்மை குவாண்டம் எண் 

    (c)

    அவகாட்ரோ எண் 

    (d)

    எதிரொளிப்பின் படி 

  26. வினை வேகம் = k[A] 3/2 [B]1 என்ற வேக விதியினை உடைய வினையின் மொத்த வினை வகை ___________

    (a)

    1.5

    (b)

    1

    (c)

    2.5

    (d)

    3

  27. முதல் வகை வினைக்கு, வரையப்படும் ln[A] Vs t  வரைபடம் தரும் நேர்கோட்டின் சாய்வு ____________

    (a)

    நேர்குறி உடையது 

    (b)

    எதிர்குறி உடையது 

    (c)

    பூஜ்யம் 

    (d)

    முடிவிலி 

  28. ஒரு முதல் வகை வினை 99.9% முற்றுப் பெறுவதற்கு தேவைப்படும் காலம் _____________

    (a)

    2 t1/2

    (b)

    5 t1/2

    (c)

    10 t1/2

    (d)

    100 t1/2

  29. வேதி வினையில் வினைவேக மாற்றி பங்கேற்றால், வினையின் இறுதியில் அது ______________

    (a)

    சிதைவடைகிறது 

    (b)

    மீளவும் பெறப்படுகிறது 

    (c)

    வேதி மாற்றமடைகிறது 

    (d)

    புதிய பொருளாக மாறுகிறது 

  30. ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் பூஜ்யம் எனில், அவ்வினையின் வினைவேக மாறில் ___________

    (a)

    வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகரிக்கும் 

    (b)

    வெப்பநிலை அதிகரிக்கும் போது குறையும் 

    (c)

    வெப்பநிலை குறையும் போது குறையும் 

    (d)

    வெப்பநிலையைச் சார்ந்ததல்ல 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment