முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    பகுதி I

    20 x 2 = 40
  1. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

  2. போராக்ஸின் பயன்களைத்  தருக.

  3. சால்கோஜன்சன் p-தொகுதி தனிமங்களாகும் காரணம் தருக.

  4. ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

  5. பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
    i) Na2[Ni(EDTA)]
    II) [Ag(CN)2)
    iii) [Co9en)3]2(SO4)3
    iv) [Co(ONO)(NH3)5]2+
    v) [Pt(NH3)2Cl(NO2)]

  6. [Cr(NH3)6]3+  ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.

  7. அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பினை கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பிலிருந்து வேறுபடுத்துக.

  8. \(\rightarrow \)என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.

  9. ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  10. பின்வரும் நீரிய கரைசல்களில் நிகழும் வினைகளில் இணை அமில-கார இரட்டைகளை கண்டறிக.
    i) \(HS^{-}(aq)+HF\rightleftharpoons F^{-}(aq)+H_{2}S)(aq)\)
    ii) \(HPO_{4}^{2-}+SO_{3}^{2-}\rightleftharpoons PO_{4}^{3-}+HSO_{3}^{-}\)
    iii) \(NH_{4}^{+}+CO_{3}^{2-}\rightleftharpoons NH_{3}+HCO_{3}^{-}\)

  11. Ag2CrO4 ன் கரை திறன் பெருக்க மதிப்பு \(1\times10^{-12}\) ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறனை கணக்கிடுக.

  12. 298K வெப்பநிலையில், 0.01M செறிவு கொண்ட 1 :1 வலிமை குறைந்த மின்பகுளி கரைசலின் கடத்துத்திறன் மதிப்பு \(1.5\times10^{-4}\) S cm-1. எனில்
    i) கரைசலின் மோலார் கடத்துத்திறன்
    ii) வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை வீதம் மற்றும் பிரிகை மாறிலி ஆகியவற்றை கணக்கிடுக.
    குறிப்பு: \(\lambda\) நேரயனி = 248.2 S cm2 mol-1 ; \(\lambda\) எதிரயனி = 51.8 S cm2 mol-1

  13. வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவதற்காக கூழ்மமாக்கி சேர்க்கப்படுகிறது. இக்கூற்றை  எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  14. 1 – மீத்தாக்ஸிபுரப்பேனை  அதிக அளவு HI உடன் வெப்படுத்தும் போது உருவாகும் விளைபபொருட்களை  கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.

  15. 1 – பீனைல் எத்தனாலை அமிலம் கலந்த உடன் KMnO4 வினைப்படுத்த என்ன நிகழும்?

  16. X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
    \(CH_3COCH_2CH_2COOC_2H_5 \overset{CH_3MgBr}\longrightarrow X \overset{H_3O^+}\longrightarrow Y\)

  17. நைட்ரோ பென்சீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்
    i. 1,3,5 - ட்ரை நைட்ரோபென்சீன்
    ii. ஆர்த்தோ மற்றும் பாரா நைட்ரோ பீனால்
    iii. m – நைட்ரோ அனிலீன்
    iv. அசாக்சி பென்சீன்
    v. ஹைட்ரசோ பென்சீன்
    vi. N – பினைல்ஹைட்ராக்சிலமீன்
    vii. அனிலீன்

  18. சிறு குறிப்பு வரைக
    i. ஹாப்மன் புரோமமைடு வினை
    ii. அமோனியாவால் பகுப்பு
    iii. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு
    iv. ஸ்காட்டன் – பெளமான் வினை
    v. கார்பைலமீன் வினை
    vi. கடுகு எண்ணெய் வினை
    vii. இணைப்பு வினை
    viii. டையசோஆக்கல் வினை
    ix. காம்பெர்க் வினை

  19. அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக

  20. வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment