மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 32

    பகுதி I

    16 x 2 = 32
  1. கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை? 

  2. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன? கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.

  3. ஹாலஜனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தருக.

  4. பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.

  5. பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
    (i) Mg[Cr(NH3)(Cl)5]
    (ii) Cr(NH3)5Cl]3[CoF6]2
    (iii) [Cr(NH3)3Cl3]

  6. படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக. 

  7. \(\rightarrow \)என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.

  8. அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.

  9. \(2 \times 10^{-3}\) M, H3O+ அயனிச் செறிவைக் கொண்டுள்ள ஒரு பழரசத்தில் OH அயனிச் செறிவை கணக்கிடுக. கரைசலின் தன்மையை கண்டறிக.

  10. டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.

  11. கூழ்ம நிலையிலுள்ள  Fe(OH) மற்றும் As2O ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது நிகழ்வதென்ன?

  12. ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணையை  ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.

  13. பின்வருவனவற்றுள் இருந்து பீனாலை எவ்வாறு தயாரிப்பாய் ?
    i) குளோரோபென்சின்        
    ii) ஐசோபுரப்பைல் பென்சீன்

  14. A) எனும் கரிம சேர்மம் ( C3H5Br ) ஐ உலர் ஈதரில் உள்ள மெக்னீஷியத்துடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (B) கிடைக்கிறது. இச்சேர்மத்தை CO2 உடன் வினைப்படுத்தி அமிலத்துடன் சேர்க்கும்போது (C) கிடைக்கிறது. (A), (B) மற்றும் (C) ஆகியவற்றை கண்டறிக.

  15. புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.

  16. தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக .

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment