All Chapter 2 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 70
    Answer All The Following Question:
    35 x 2 = 70
  1. பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000
    உள்திருப்பம் 15,000
    வாராக்கடன் 5,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000
    ரொக்க விற்பனை 1,40,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000
    வெளித் திருப்பம் 6,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000
    2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
  3. பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.

    சந்தா பெற்றது  ரூ
    2015 - 16 - க்காக 7,500
    2016 –17 - க்காக 60,00
    2017 – 18 - க்காக 1,500
      69,000

    2016-17 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ 2,400. 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015-2016 ஆம் ஆண்டில் பெற்றது ரூ 1,000

  4. பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

    விவரம் ரூ
    1.4.2017 அன்று பரிசு நிதி 60,000
    1.4.2017 அன்று பரிசு நிதிக்கான முதலீடு 60,000
    பரிசு நிதி முதலீடு மீதான வட்டிப் பெற்றது 6,000
    பரிசுகள் வழங்கியது 8,000
    பரிசு நிதிக்காக நன்கொடைப் பெற்றது 12,000
  5. இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?

  6. மதிப்பூதியம் என்றால் என்ன?

  7. வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.

  8. வெண்ணிலா மற்றும் ஈஸ்வரி இருவரும் கூட்டாளிகள். வெண்ணிலா ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.5,000 எடுத்துக் கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 4%. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி கால முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்.

  9. முதல் மீதான வட்டி என்றால் என்ன?

  10. வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?

  11. ஒரு கூட்டாண்மை நிறுவனம் விலகும் கூட்டாளி ஒருவரின் கணக்கைத் தீர்ப்பதற்காக நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. அந்த நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2015: ரூ.40,000; 2016: ரூ.50,000; 2017: ரூ.48,000 ; 2018: ரூ.46,000
    வியாபாரம் கூட்டாளிகளில் ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை. அக்கூட்டாளியின் நியாயமான ஊதியம் ஆண்டுக்கு ரூ.6,000 என மதிப்பிடப்பட்டது.
    கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  12. கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.

  13. ஆண்டுத் தொகை என்றால் என்ன?

  14. அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  15. விமலா மற்றும் கமலா இருவரும் கூட்டாளிகள். 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். வினிதா என்பவர் விமலாவிடம் 1/14 பங்கும் மற்றும் கமலாவிடமிருந்து 1/14 பங்கும் பெற்று கூட்டாண்மையில் சேருகிறார். அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  16. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  17. ஆதாய விகிதம் என்றால் என்ன?

  18. நவீன், ரவி மற்றும் குமார் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை முறையே 1/2, 1/4 மற்றும் 1/4 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். குமார் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை நவீன் மற்றும் ரவி சமமாக எடுத்துக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்

  19. புதிய இலாப விகிதம் என்றால் என்ன?

  20. சுதா நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, மீதமுள்ள தொகை தேவையான பொழுது என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 1,40,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை இயக்குனர்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்தனர்
    60,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - முழுமையாக
    75,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - 40,000 பங்குகள் (மிகுதியான விண்ணப்ப பணம் ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்படும்)
    5,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - எதுவுமில்லை
    அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஒதுக்கீட்டுத் தொகை பெறுவது வரையிலான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  21. பங்கு என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  22. நிறுமம் வரைவிலக்கணம் தருக.

  23. முனைமத்தில் வெளியிடுதல் என்றால் என்ன?

  24. சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 1,00,000 2,60,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 50,000 60,000
      நடப்புப் பொறுப்புகள் 25,000 30,000
    மொத்தம் 1,75,000 3,50,000
    II. சொத்துகள்    
      நிலைச் சொத்துகள் 1,00,000 2,00,000
      நடப்புச் சொத்துகள் 75,000 1,50,000
    மொத்தம் 1,75,000 3,50,000
  25. போக்குப் பகுப்பாய்வு எப்போது இதர பகுப்பாய்வு கருவிகளை விட ஏற்புடையதாகும்?

  26. கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?

  27. செங்குத்துப் பகுப்பாய்வு என்றல் என்ன?

  28. புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?

  29. முதலீடுகள் மீதான வருவாய் விகிதம் எதைக் குறிப்பிடுகிறது?

  30. செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

  31. கடன் வசூலிப்பு காலம் என்றால் என்ன?

  32. ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.

  33. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

  34. மேலாண்மை தகவல் அமைப்பு என்றால் என்ன?

  35. டேலியின் நுழைவாயில் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment