All Chapter 3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 132
    Answer The Following Questions:
    44 x 3 = 132
  1. புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.

  2. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

  3. எலிங்கம் வரைபடத்திலிருந்து உற்று நோக்கி உணரப்படுபவை யாவை?

  4. துத்தநாகத்தின் பயன்பாடுகள் யாவை?

  5. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

  6. ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.

  7. போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?

  8. போராக்ஸின் மீது வெப்பத்தின் விளைவினை எழுது. 

  9. குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.

  10. கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.

  11. பாஸ்பீனை காற்றில் வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?

  12. ஹோல்ம்ஸ் முன்னறிவிப்பான் பற்றி  குறிப்பு வரைக

  13. 3d வரிசையில் E0M3+/M2+ மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி

  14. லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?

  15. பின்வருவனவற்றின் எலக்ட்ரான் அமைப்பினை எழுதுக
    i) Cr3+
    ii) Cu+
    iii) Co2+
    iv) Mn2+
    v) Pm3+
    vi) Ce4+
    vii) Lu2+
    viii) Th4+

  16. இடைநிலைத் தனிமங்கள் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதன் காரணம் யாது?

  17. [Ma2b2c2] வகை அணைவுச் சேர்மத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக. இங்கு a,b,c என்பன ஒரு முனை ஈனிகளாகும், மேலும் இவ் அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான அனைத்து மாற்றியங்களையும் தருக.

  18. நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல. ஏன்?

  19. புகைப்படத் தொழிலில் அணைவுச் சேர்மத்தின் பயன் யாது?

  20. சிஸ் பிளாட்டின் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான மருந்துப்பொருளாக எவ்வாறு பயன்படுகிறது?

  21. Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.

  22. சதுர நெருங்கிப் பொதிந்த இரு பரிமாண அடுக்கில் ஒரு மூலக்கூறின் அணைவு எண் என்ன?

  23. திடப்பொருட்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  24. எளிய கனசதுர அழகுக்கூட்டினை பற்றி எழுதுக.

  25. ii) 500k வெப்பநிலையில், X\(\rightarrow \)விளைபொருள் என்ற ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் 6.932 x 104s at 500K வெப்பநிலையில் x ஐ வெப்பப்படுத்தும் போது 100 நிமிடங்களில், அது எவ்வளவு சதவீதம் சிதைவடிந்திருக்கும்? (e0.06 = 1.06)

  26. அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.

  27. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி மதிப்பு 1.54x10-3s-1 என்றால் அதன் அரை வாழ் கால மதிப்பு என்ன?

  28. ஒரு முதல் வகை வினைக்கு 99% வினை முடிவடைய ஆகும் காலம் 90% வினை முடிவடையும் காலத்தைப் போல் இரு மடங்கு என நிரூபி.

  29. pH வரையறு.

  30. 50ml கனஅளவுடைய 0.025M KOH கரைசலுடன் 50ml கனஅளவுடைய 0.05M HNO3 கரைசல் சேர்க்கப்படுகிறது. இறுதியில் பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.

  31. மின்பகுளிக் கடத்துத்திறன் அளவிடுதலில் DC மின்னோட்டத்திற்கு பதிலாக AC  மின்னோட்டம் பயன்படுத்தப்படுகிறதுஏன்?

  32. M1 மற்றும் M2 ஆகிய உலோகங்களின் ஒடுக்க மின்னழுத்தங்கள் முறையே -xV மற்றும் +yV. எது H2SO4 லிருந்து H2 வாயுவை ஐ விடுவிக்கும்?

  33. நொதிகள்  என்றால் என்ன? நொதிவினைவேக மாற்றத்தின் வினைவழிமுறை பற்றி குறிப்பு வரைக.

  34. ஒரு பொருள் நல்ல வினைவேக மாற்றியாக திகழ பரப்பு நீக்கம் அவசியம். ஏன்?

  35. எத்தனால் மற்றும் 2 – மெத்தில் பென்டன் -2- ஆல் ஆகியனவற்றிலிருந்து 2 – ஈத்தாக்ஸி – 2 – மெத்தில் பென்டேனைத் தயாரிக்கும் வில்லியம்களின் தொகுப்பு முறைக்கான வேதிச் சமன்பாட்டினைத் தருக.

  36. 4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.

  37. C5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பேட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.

  38. அசிட்டோனுடன் பென்சால்டிஹைடின் ஆல்டால் குறுக்கவினையில் உருவாகும் முதன்மையான விளைபொருளின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.

  39. பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
    i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C6H5NH2, (C2H5)2 NH, C2H5NH2
    ii. கார வலிமையின் ஏறுவரிசை
    a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
    b) C6H5NH2, C6H5NHCH3C6H5NH2p-Cl-C6H4-NH2
    iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
    (C2H5)NH2, (C2H5)NH(C2H5)3N மற்றும் NH3
    iv. கொதிநிலையின் ஏறுவரிசை  C6H5OH, (CH3)2NH, C2H5NH2
    v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CHNH2
    vi. கார வலிமையின் ஏறுவரிசை C6H5NH2, C6H5N(CH3)2(C2H5)NH மற்றும் CHNH2
    vii. கார வலிமையின் இறங்கு வரிசை 

  40. A,B மற்றும் C ஐ கண்டறிக  \(CH_3-NO_2\overset{LiAlH_4}\longrightarrow A\overset{2CH_3CH_2Br}\longrightarrow B \overset{H_2SO_4}\longrightarrow C\)

  41. ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்களுக்கிடையே உள்ள இரண்டு வேறுபாடுகளை தருக.

  42. பின்வருவனவற்றை மோனோசாக்கரைடுகள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் என வகைப்படுத்துக.
    i) ஸ்டார்ச்
    ii) ஃபிரக்டோஸ்
    iii) சுக்ரோஸ்
    iv) லாக்டோஸ்
    iv) மால்டோஸ்

  43. மருந்துப் பொருட்கள் என்றால் என்ன ? அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

  44. சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் தயாரிக்க பயன்படும் இனிப்புச் சுவையூட்டி எது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Chemistry All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment