12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. நிர்வாகம் மற்றும் ஆளுமைப் பணி எதனுடன் தொடர்புடையது?

    (a)

    நிர்வாகம்

    (b)

    மேலாண்மை

    (c)

    நிர்வாகம் மற்றும் மேலாண்மை

    (d)

    நிறுவனம்

  2. மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

    (a)

    புதுமைப்படுத்துதல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    திட்டமிடுதல் 

    (d)

    முடிவெடுத்தல் 

  3. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

    (a)

    முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது 

    (b)

    நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது 

    (c)

    குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது 

    (d)

    அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது 

  4. ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பல முறை 

  5. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் _____ ஆவர். 

    (a)

    தனிநபர் 

    (b)

    நிறுமங்கள் 

    (c)

    நிதி நிறுவனங்கள் 

    (d)

    மேலே உள்ள அனைத்தும் 

  6. _________ கருவூல இரசீதுகள் எந்தவித நிலையான தள்ளுபடி விகிதம் கொண்டு செயல்படுவதில்லை

    (a)

    91 நாட்கள்

    (b)

    182 நாட்கள்

    (c)

    364 நாட்கள்

    (d)

    91 நாட்கள் மற்றும் 182 நாட்கள்

  7. காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

    (a)

    விலை ஏற்றம் 

    (b)

    விலை குறைப்பு 

    (c)

    விலை நிலைத்தன்மை 

    (d)

    விலையில் மாற்றமில்லை 

  8. செபியின் உறுப்பினர்கள் _______

    (a)

    இயக்குர்

    (b)

    துணை இயக்குநர்

    (c)

    கூடுதல் இயக்குநர்

    (d)

    இவை அனைத்தும்

  9. திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும். 

    (a)

    தேர்ந்தெடுக்கப்பட்ட 

    (b)

    பரவலான / ஊடுருவலான

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    மேலே உள்ள எதுவும் இல்லை

  10. தேர்வு பொதுவாக ஒரு _____ செயலாக கருதப்படுகிறது. 

    (a)

    நேர்மறை 

    (b)

    எதிர்மறை 

    (c)

    இயற்கை 

    (d)

    இவை ஒன்றும் இல்லை 

  11. ஒலி, ஒளி காட்சி உதவிகள் மூலம் இது நடைபெறுகிறது.

    (a)

    கருத்தரங்கு மாநாட்டு முறை

    (b)

    பங்கேற்று நடத்தல் முறை

    (c)

    மின்னணு கற்றல் முறை

    (d)

    செயல்விளக்க பயிற்சி முறை

  12. சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது 

    (a)

    வாடிக்கையாளரின் தகுதி 

    (b)

    பொருளின் தரம் 

    (c)

    வாடிக்கையாளரின் பின்புலம் 

    (d)

    வாடிக்கையாளரின் தேவைகள் 

  13. சந்தையிடுகை என்பது _________ என்ன செய்கின்றாரோ அதுவேயாகும்.

    (a)

    சந்தையிடுகையாளர்

    (b)

    விற்பனையாளர்

    (c)

    நுகர்வோர்

    (d)

    மேலாளர்

  14. COPRA என்பதன் விரிவாக்கம் யாது?

    (a)

    Consumer precious Act

    (b)

    Consumer primary Act

    (c)

    Consumer Protection Act

    (d)

    Consumer prevention Act

  15. நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள _____ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும். 

    (a)

    ரொக்க ரசீது 

    (b)

    உத்தரவாத அட்டை 

    (c)

    இடாப்பு 

    (d)

    மேற்காணும் அனைத்தும் 

  16. வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணியாகும்.

    (a)

    கட்டுப்படுத்த முடியாத

    (b)

    கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது 

    (c)

    சமாளிக்க கூடியது 

    (d)

    சமாளிக்க முடியாதது 

  17. குறிப்பிட்ட சரக்கு என்பது விற்பனையின் எந்தக் காலகட்டத்தில் உள்ள சரக்கைக் குறிக்கிறது? 

    (a)

    உடன்பாடுபோகும்போது 

    (b)

    ஒப்பந்தம் 

    (c)

    ஆணையைப் பெறும்போது 

    (d)

    விற்க கடமைப்பட்டபோது 

  18. கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?

    (a)

    ஆறு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  19. அரைத்த மாவையே அரைக்காமல் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி வெற்றி காண்பவர்கள் 

    (a)

    முதல் தலைமுறை தொழில் முனைவோர் 

    (b)

    நவீன தொழில் முனைவோர் 

    (c)

    பாரம்பரிய தொழில் முனைவோர் 

    (d)

    மேற்கூறிய எவருமில்லை 

  20. நிறுமச் சட்டம் 2013-ன் படி ஒரு நபர் இயக்குநராக ______ நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்க கூடாது. 

    (a)

    5 நிறுமம்

    (b)

    10 நிறுமம்

    (c)

    20 நிறுமம்

    (d)

    15 நிறுமம்

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக. 

  23. "செயல்படுவதற்கு முன் சிந்தியுங்கள்" - இந்த கூற்று எந்த மேலாண்மை செயல்பாடுடன் தொடர்புடையது?

  24. குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள் என்ன?

  25. எதிர்கால சந்தை என்றால் என்ன? (அல்லது)
    முன்னோக்கிய சந்தை என்றால் என்ன?

  26. மூலதனச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது? 

  27. பழமையான இரண்டு பணச்சந்தைகளை விவரி.

  28. பங்குச் சந்தை வரைவிலக்கணம் தருக.

  29. செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .

  30. மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதெனும் இரண்டு கூறுக. 

  31. உரிமை மாற்றுப் பணிகள் என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 3 = 21
  33. தரவரிசைக் கோட்பாடு என்பதை விளக்குக. (அல்லது) தரவரிசை தொடர் என்றால் என்ன? (அல்லது) ஆணையுரிமை வரிசை என்றால் என்ன?

  34. இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?

  35. நிதிச் சொத்துக்களின் வகைகளைக் கூறுக

  36. ஆட்சேர்ப்பு வரையறு. 

  37. மனோபாவச் சோதனை என்றால் என்ன?

  38. பணிவழி பயிற்சி பற்றி நீ அறிவது யாது?

  39. சந்தையிடுகையாளர் ஓர் புதுமை கண்டுபிடிப்பாளரா? நீர் அதை ஏற்றுக்கொள்வீரா?

  40. கன்வர்சி அவர்களின் சந்தையிடுகையின் வரைவிலக்கணம் யாது?

  41. தனியிடச்சந்தை (Niche) பற்றி விளக்குக

  42. தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பற்றி விவரிக்கவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    7 x 5 = 35
    1. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குக.

    2. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

    1. குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை?

    2. நிதிச் சந்தையின் பல்வேறு வகையான புதிய நிறுவனங்களை வி்ளக்குக.

    1. பணச்சந்தையின் சிறப்பியல்புகளை விவரி. 

    2. மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி. 

    1. பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?

    2. சந்தையிடுகை பணிகளை விளக்குக.

    1. ஐ.நா.அவையின் நுகர்வோர் பாதுகாப்புக்குறித்த நோக்கங்கள் யாவை? 

    2. வணிகத்தின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார சூழலை விளக்குக.

    1. தொழில் முனைவோரை வகைப்படுத்துக. 

    2. பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி. 

    1. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக. 

    2. பலவகையான திறந்த மற்றும் இரகசிய வகையில் செய்யப்படும் வாக்கெடுப்பு முறைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment