12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 



    20 x 1 = 20
  1. A=\(\left[ \begin{matrix} 3 & 1 & -1 \\ 2 & -2 & 0 \\ 1 & 2 & -1 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } \\ { a }_{ 31 } & { a }_{ 32 } & { a }_{ 33 } \end{matrix} \right] \) எனில், a23-ன் மதிப்பானது ______.

    (a)

    0

    (b)

    -2

    (c)

    -3

    (d)

    -1

  2. x+y+z=6, x+2y+3z=14 மற்றும்  2x+5y+\(\lambda\)z =\(\mu\) என்ற நேரிய சமன்பாட்டுத் தொடக்கமானது  (\(\lambda\), \(\mu\)\(\epsilon\) R) ஒருங்கமைவு உடையது. எம் மதிப்பற்றது ஒரே ஒரு தீர்வினை தரும்?

    (a)

    \(\lambda\)=8

    (b)

    \(\lambda\)=8, \(\mu\)≠36

    (c)

    \(\lambda\)≠8

    (d)

    இல்லை 

  3. z என்ற கலப்பெண்ணானது z∈ C\R ஆகவும் z + \(\frac1{z}\) ∈ R எனவும் இருந்தால், |z| - மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  4. \(\cfrac { { z }_{ 1 }-{ z }_{ 2 } }{ { z }_{ 2 }-{ z }_{ 3 } } =\cfrac { 1-i\sqrt { 3 } }{ 2 } \) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் கலப்பெண்கள் z1,z2 மற்றும் z3 என்பன முக்கோணத்தின் உச்சிகள் எனில்,அம்முக்கோணம் 

    (a)

    பரப்பு பூச்சியத்தைக் கொண்டது 

    (b)

    செங்குத்தான இருசமபக்க முக்கோணம் 

    (c)

    சமபக்க முக்கோணம் 

    (d)

    விரிகோண-இருசமபக்க முக்கோணம் 

  5. x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.

    (a)

    |k|≤6

    (b)

    k=0

    (c)

    |k|>6

    (d)

    |k|≥6

  6. எல்லா 'x' மதிப்பிற்கும் \({ x }^{ 2 }+2ax+(10-3a)>0\) ல் 'a' அமையும் இடைவெளி 

    (a)

    \(a<-5\)

    (b)

    \(-5

    (c)

    \(a>5\)

    (d)

    \(2

  7. \({ \sin }^{ -1 }\left( \tan\frac { \pi }{ 4 } \right) -{ \sin }^{ -1 }\left( \sqrt { \frac { 3 }{ x } } \right) =\frac { \pi }{ 6 } \) -ல் x என்பதை மூலமாக கொண்ட சமன்பாடு _______.

    (a)

    x2−x−6=0

    (b)

    x2−x−12=0

    (c)

    x2+x−12=0

    (d)

    x2+x−6=0

  8. tan-1 \(\left\{ \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } } \right\} =\alpha \) எனில் x2 =  

    (a)

    sin 2α

    (b)

    sin α

    (c)

    cos 2α

    (d)

    cos α

  9. நீள்வட்டம் E1: \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) செவ்வகம் R-க்குள் செவ்வகத்தின் பக்கங்கள் நீள்வட்டத்தின் அச்சுகளுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளன. அந்த செவ்வகத்தின் சுற்றுவட்டமாக அமைந்த மற்றொரு நீள்வட்டம் E2, (0,4)என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.

    (a)

    \(\frac { \sqrt { 2 } }{ 2 } \)

    (b)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (c)

    \(\frac { 1 }{ 2 } \)

    (d)

    \(\frac { 3 }{ 4 } \)

  10. ஆதியை மையமாகவும்,குவியம் (0,4) மற்றும் முனை (0,7) ஆகியவற்றைக் கொண்டதுமான நீள்வட்டத்தின் சமன்பாடு 

    (a)

    \(\cfrac { { x }^{ 2 } }{ 49 } +\cfrac { { y }^{ 2 } }{ 33 } =1\)

    (b)

    \(\cfrac { { x }^{ 2 } }{ 33 } -\cfrac { { y }^{ 2 } }{ 49 } =1\)

    (c)

    \(\cfrac { { x }^{ 2 } }{ 33 } +\cfrac { { y }^{ 2 } }{ 49 } =-1\)

    (d)

    \(\cfrac { { x }^{ 2 } }{ 33 } +\cfrac { { y }^{ 2 } }{ 49 } =1\)

  11. \(\vec { a } .\vec { b } =\vec { b } .\vec { c } =\vec { c } .\vec { a } =0\) எனில் \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \) ன் மதிப்பு _______.

    (a)

    \(\left| \vec { a } \right| \left| \vec { b } \right| \left| \vec { c } \right| \)

    (b)

    \(\cfrac { 1 }{ 3 } \left| \vec { a } \right| \left| \vec { b } \right| \left| \vec { c } \right| \)

    (c)

    1

    (d)

    -1

  12. 3x + 3y + 3z - 1 = 0 மற்றும் x + y - z + 5 = 0 என்ற இரண்டு தளங்கள்

    (a)

    ஒன்றுக்கொன்று செங்குத்து

    (b)

    இணை

    (c)

    450 ல் சாய்வு 

    (d)

    30 ல் சாய்வு

  13. y2 -xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?

    (a)

    y = 0

    (b)

    y =\(\pm \sqrt { 3 } \)

    (c)

    y = \(\frac { 1 }{ 2 } \)

    (d)

    y =士3

  14. இரண்டு மிகை எண்களின் கூடுதல் 200 மேலும் அவற்றின் பெருக்கல் பலனின் பெரும மதிப்பு_______.

    (a)

    100

    (b)

    25\(\sqrt { 7 } \)

    (c)

    28

    (d)

    24\(\sqrt { 14 } \)

  15. f (x, y, z) = xy + yz + zx , எனில் fx -fz − -ன் மதிப்பு _______.

    (a)

    z − x

    (b)

    y − z

    (c)

    x − z

    (d)

    y − x

  16. \(\int _{ 0 }^{ 1 }{ x(1-x)^{99} dx } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 1 }{ 11000 } \)

    (b)

    \(\frac { 1 }{ 10100 } \)

    (c)

    \(\frac { 1 }{ 10010 } \)

    (d)

    \(\frac { 1 }{ 10001} \)

  17. \(\frac { dy }{ dx } +\frac { 1 }{ \sqrt { { 1-x }^{ 2 } } } =0\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு _______.

    (a)

    y + sin-1 x = c

    (b)

    x + sin-1 y = 0

    (c)

    y+ 2sin-1 x = C

    (d)

    x+ 2sin-1 y = 0

  18. P(X = 0) = 1−P( X = 1 ) மற்றும் E(X) = 3Var(X) எனில், P(X = 0) காண்க.

    (a)

    \(\frac{2}{3}\)

    (b)

    \(\frac{2}{5}\)

    (c)

    \(\frac{1}{5}\)

    (d)

    \(\frac{1}{3}\)

  19. -ன் மீது \(a\ast b=\sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } \) எனில்,✴️ ஆனது _______.

    (a)

    பரிமாற்று விதிக்கு கட்டுப்படும் ஆனால் சேர்ப்பு விதியை நிறைவு செய்யாது.

    (b)

    சேர்ப்பு விதிக்கு கட்டுப்படும் ஆனால் பரிமாற்று விதியை நிறைவு செய்யாது.

    (c)

    பரிமாற்று விதி மற்றும் சேர்ப்பு விதிகளை நிறைவு செய்யாது.

    (d)

    பரிமாற்று விதி மற்றும் பரிமாற்று விதிகளை நிறைவு செய்யாது.

  20. ஒரு கூட்டுக்கூற்றில் 3 தனிக்கூற்றுகள் உட்படுத்தப்பட்டிருந்தால் அம்மெய்மை அட்டவணையின் நிரைகளின் எண்ணிக்கை _______.

    (a)

    9

    (b)

    8

    (c)

    6

    (d)

    3

    1. பகுதி-II

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 2 = 14
  21. 3x+y+9z=0, 3z+2y+12z=0 மற்றும் 2x+y+7z=0 என்ற சமன்பாட்டு தொகுப்பிற்கு வெளிப்படையற்ற தீர்வுகள் உள்ளன என காட்டுக.

  22. கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
    \(\left| \cfrac { 2+i }{ -1+2i } \right| \)

  23. சமன்பாடு x2-(a-2)x-a-1=0 இன் வர்க்கத்தின் கூடுதல் மிக குறைவான மதிப்பை கொண்டிருக்குமெனில் a ன் மதிப்பை காண்க.

  24. sin-1 (-1) ன் முதன்மை மதிப்பு காண்க.

  25. x2+y2-6x+4y+c=0 என்ற வட்டத்திற்கு c-ன் எல்லா மதிப்புகளுக்கும் x+y -1=0 என்ற நேர்கோடு விட்டமாக அமையுமா எனத் தீர்மானிக்க.

  26. \(\vec { r } =\left( \hat { i } -\hat { j } \right) +\lambda \left( 2\hat { i } +\hat { j } +\hat { k } \right) \) மற்றும் \(\vec { r } =\left( \hat { i } +\hat { j } -\hat { k } \right) +\mu \left( 2\hat { i } -\hat { j } -\hat { k } \right) \) என்ற இரண்டு ஒரே தளத்தில் அமையாத கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரத்தைக் கணக்கிடு.

  27. இருமுனைகளிலும் காப்பிடப்பட்ட 10மீ நீளமுள்ள ஒரு கம்பியின் வெப்பநிலை செல்சியஸில்  நீளம் x சார்பாக T = x (10-x) எனத் தரப்படுகிறது. கம்பியின் மையப்புள்ளிகளில் வெப்பநிலை மாறபாட்டு வீதம் பூச்சியம் என்பதை நிரூபிக்க. 

  28. (x, y)≠(0,0) -க்கு g(x,y)=\(\frac { { x }^{ 2 }y }{ { x }^{ 4 }+{ y }^{ 2 } } \) மற்றும் g(0,0) = 0 என்க.
    (i) ஒவ்வொரு y = mx,m ∈ R நேர்கோட்டுப் பாதையிலும்\(\underset { (x,y)\longrightarrow (0,0) }{ \lim } \) g(x,y)=0 என நிறுவுக.
    (ii) ஒவ்வொரு y = kx2 k ∈ R  \{0}பரவளையப் பாதையிலும் \(\underset { (x,y)\longrightarrow (0,0) }{ \lim } \)g(x,y)=\(\frac { k }{ 1+k^{ 2 } } \) என நிறுவுக.

  29. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி (இருப்பின்) ஆகியவற்றைக் காண்க:
    \(3{ \left( \frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \right) }={ \left[ 4+{ \left( \frac { { d }y }{ { d }x } \right) }^{ 2 } \right] }^{ \frac { 3 }{ 2 } }\)

  30. p என்பது " ஜூபிடர் ஒரு கோளாகும்" மற்றும் q என்பது "இந்திய ஒரு தீவு”. பின்வரும் கூற்றுகளுக்குரிய வார்த்தைகளுடன் கூடிய வாக்கியங்களை அமைக்க.
    p ↔ q

  31.             பகுதி-III

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7x 3 = 21
  32. பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மா்மாறு அணி காணல் முறையில் தீர்க்க:
    2x − y = 8, 3x + 2y = −2

  33. z1 = 3, z2 = -7i, மற்றும் z3 = 5 + 4i எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
    z1(z2 + z3) = z1z2 + z1z

  34. தீர்க்க: \({ (5+2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2-3 } }+{ (5-2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2 }-3 }=10\)

  35. தீர்க்க:
    \({ \cot }^{ -1 }x-{ \cot }^{ -1 }\left( x+2 \right) =\frac { \pi }{ 12 } ,x>0\)

  36. x2=-36y என்ற பரவளையத்தின் முனையை செவ்வகலத்தின் முனைகளோடு கோடுகளாக இணைக்க கிடைக்கும் முக்கோணத்தின் பரப்பைக் காண்க.

  37. x + 2y + 3z = 2 மற்றும் x - y - z + 11 = 3 என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழிச் செல்வதும், (3,1,-1) என்ற புள்ளியிலிருந்து \(\frac { 2 }{ \sqrt { 3 } } \) தொலைவில் உள்ளதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க.

  38. கீழ்க்காணும் சார்புகளுக்கு குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகளைக் காண்க:
     f (x) = x(x - 4)3

  39. V (x, y, z) = xy + yz + zx, x, y, z ∈ R எனில் வகையீடு dV -ஐக் காண்க .

  40. பின்வரும் இயற்பியல் கூற்றுகள் ஒவ்வொன்றையும், வகைக்கெழுச் சமன்பாடாக எழுதுக.
    (i) ரேடியம் சிதைவுறும் வீதமானது காணப்படும் அளவு Q -க்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
    (ii) ஒரு நகரத்தின் மக்கள் தொகை P ஆனது, மக்கள்தொகை மற்றும் 5,00,000-க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை பெருக்கிக் கிடைக்கும் மதிப்புக்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கிறது.
    (iii) ஒரு பொருளின் வெப்பநிலை Tஐப் பொருத்து ஆவி அழுத்தம் P-ன் மாறுவீதமானது, ஆவி அழுத்தத்திற்கு நேர்விகிதத்திலும், வெப்பநிலையின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்திலும் உள்ளது.
    (iv) ஒரு சேமிப்புத் தொகைக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் 8% வட்டித் தொகையானது தொடர்ச்சியாக அசலுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், மற்றொரு முதலீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வரவு ரூ.400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது. 

  41. 0 = அனைத்து ஒற்றை முழுக்களின் கணம் எனில் ℤo -ன் மீது இயற்கணித செயலி + ஆனது (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க.

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7x 5 = 35
    1. x + y + z = a, x + 2y + 3z = b, 3x + 5y + 7z = c என்ற நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பின் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருப்பதற்கு a, b மற்றும் c-ல் உருவாகும் நிபந்தனையைக் காண்க.

    2. z1, z2 மற்றும் z3 என்ற கலப்பெண்கள் \(\left| { z }_{ 1 } \right| =\left| { z }_{ 2 } \right| =\left| { z }_{ 3 } \right| =r>0\) மற்றும் z1 + z2 + z3 \(\neq \) 0 எனவும் இருந்தால் \(\left| \frac { z_{ 1 }{ z }_{ 2 }+{ z }_{ 2 }{ z }_{ 3 }+{ z }_{ 3 }{ z }_{ 1 } }{ { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } } \right| \) = r என நிறுவுக.

    1. \({ px }^{ 4 }+{ qx }^{ 3 }+{ rx }^{ 3 }+{ sx }^{ 2 }+tx+u=0\) என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலங்களின் பெருக்கற்பலன், இரண்டிரண்டு மூலங்களாக எடுத்துக் கொண்டு பெருக்கிக் கிடைக்கும் மதிப்புகளின் கூட்டல் பலனின் மூன்றில் ஒரு மடங்கு எனில்,'r' மற்றும் 'u' ஆகியவற்றிக்கிடையேயான தொடர்பைக் காண்க.

    2. தீர்க்க \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) =\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} \)

    1. \({ tan }^{ -1 }\left( \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } } \right) =\alpha \) எனில் x2 = sin 2α என நிரூபிக்க.

    2. (1,1),(2,-1), மற்றும் (3,2) என்ற மூன்று புள்ளிகள் வழிச்செல்லும் வட்டத்தின் சமன்பாடு காண்க.

    1. ஒரு ஒரு நீள்வட்ட எதிரொலிப்பு அறையில் உயரம் 5 மீ மற்றும் அகலம் 26 மீ இருவர் அந்த அறையின் எந்த இடங்களில் அவர்கள் மெதுவாக பேசுவதை ஒருவருக்கொருவர் தெளிவாக கேட்க முடியும்.

    2. வெக்டர் முறையில் cos (\(\alpha\) - \(\beta\)) = cos \(\alpha\) cos \(\beta\) + sin \(\alpha\) sin \(\beta\) என நிறுவுக.

    1. \(4\hat { i } -\hat { j } +3\hat { k } ,-2\hat { i } +\hat { j } -2\hat { k } \) எனும் வெக்டர்களுக்கு செங்குத்தானாலும்,எண் அளவு 6 உடையதுமான வெக்டர்களைக் காண்க.

    2. f(x) = x log x + 3x என்ற சார்பிற்கு ஓரியல்பு இடைவெளிகள் மற்றும் அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.

    1. U(x,y,z) = xyz, x=e-t, y=e-t cost, z= sin t t ∊ Rஎனில் \(\frac { dU }{ dt } \) -ஐக் காண்க.

    2. \(\int ^{1}_{0} (\tan ^{-1} x + \tan ^{-1}(1-x))\) dx = \(\frac {\pi}{2}\) - log, 2 எனக்காட்டுக.

    1. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
      2xydx + (x2 + 2y2) dy = 0 

    2. \((p\overset { \_ \_ }{ \vee } q)\wedge (p\overset { \_ \_ }{ \vee } \neg q)\) -ன் மெய்மை அட்டவணையைத் தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021

Write your Comment