பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    10 x 5 = 50
  1. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம்  தொடக்க இருப்பு 
    ரூ.
    இறுதி இருப்பு 
    ரூ.
    கடனாளிகள்  60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு  5,000 1,000
    கடனீந்தோர்  25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு  2,000 3,000
        ரூ.
    பிற தகவல்கள்    1,30,000
    கடனாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது    1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி    5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம்    70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி    3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது    7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது    14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது    1,200
    வாராக்கடன்    3,500
  2. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சகம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

  3. ஜான் மற்றும் சுரேஷ் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் ஜான் ரூ.60,000 மற்றும் சுரேஷ் 40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று ஜான் கூடுதல் முதலாக ரூ.10.000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் சுரேஷ் ரூ.50,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.

  4. முரளி மற்றும் சேது இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள், முரளி, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். சேது, கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.2,20,000 முரளி மற்றும் சேதுவிற்கு கழிவினைக் கண்டுபிடிக்கவும்

  5. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (அ) ஈட்டிய இலாபங்கள் : 2016 : ரூ.30,000: 2017: ரூ.35,000 மற்றும் 2018: ரூ.38,000;
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பாத திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்த்துள்ளது
    (இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,000 குறைக்கப்பட்டது
    (ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்காகன காப்பீட்டுக் கட்டணம்  ஆண்டுகளுக்கு ரூ.3,600 என மதிப்பிடப்பட்டது
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுக்குள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்

  6. அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப் பகிர்வு விகிதம் 3 : 2 : 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துக்கள் ரூ.
    முதல் கணக்குகள்:     இயந்திரம் 60,000
      அமீர் 80,000   அறைகலன்  40,000
      இராஜா 70,000 1,50,000 கடனாளிகள் 30,000
    காப்பு நிதி   15,000 சரக்கிருப்பு 10,000
    கடனீந்தோர்   35,000 முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு 40,000
          வங்கி ரொக்கம் 20,000
        2,00,000   2,00,000

    ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ,10,000 கொண்டுவந்தார்.
    பின்வருமாறு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது
    தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

  7. நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31 ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விளக்கினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்பெயர் ரூ.80,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் ரூ.80,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்.
    (ஆ) நற்பெயரோ; பாதித்தொகையை போக்கெழுத்தால் கூட்டாளிகள் முடிவெடுத்தால்.

  8. காந்திமதி நிறுமத்தின் பெயரளவு முதல் ரூ.1,00,000 பங்கொன்று ரூ.10வீதம் செய்யப்பட்டது. இது பொதுமக்களுக்கு 6,000 பங்குகளை வெளியீடு செய்தது. அனால் 8,000 பங்குகள் வேண்டிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,000 பங்குகளுக்கான விண்ணப்பங்களை இயக்குநர்கள் நிராகரித்து திருப்பி விட்டனர். 1,000 பங்குகள் மீதான விண்ணப்பித் தொகை ஒதுக்கீட்டிற்கு சரிகட்டப்பட்டது. பங்குகள் மீது பின்வருமாறு தொகைகள் பெறப்பட்டன.

    விண்ணப்பத்தின் போது பங்கொன்றுக்கு  ரூ.3 வீதம் 
    ஒதுக்கீட்டின்போது பங்கொன்றுக்கு  ரூ.3 வீதம் 

    மீத தொகை முதலாவது மற்றும் இறுதி அழைப்பில்.
    100 பங்குகளை வைத்திருந்த பங்குதாரர் ஒருவர் அழைப்பு தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக அவரின் பங்குகள் ஒறுபிழப்பு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

  9. குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடைவடியும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

      விவரம்  2016, மார்ச் 31 2017, மார்ச் 31
        ரூ. ரூ.
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்     
      பங்குதாரர் நிதி  2,00,000 5,20,000
      நீண்டகாலப் பொறுப்புகள்  1,00,000 1,20,000
      நடப்புப் பொறுப்புகள்  50,000 60,000
      மொத்தம்  3,50,000 7,00,000
    II  சொத்துகள்     
      நிலைச் சொத்துகள்  2,00,000 4,00,000
      நடப்புச் சொத்துகள்  1,50,000 3,00,000
      மொத்தம்  3,50,000 7,00,000
  10. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
    (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
    (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
    (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

    அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம்  ரூ 
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
    1. பங்குதாரர் நிதி   
      (அ) பங்குமுதல்   
      நேர்மைப் பங்குமுதல்  1,50,000
      8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்   
      நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
    3. நடப்பு பொறுப்புகள்   
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
      மொத்தம்  10,00,000
    II  சொத்துகள்   
    1. நீண்ட காலச் சொத்துகள்   
      நிலைச் சொத்துகள்  7,50,000
    2. நடப்புச் சொத்துகள்  1,20,000
      (அ) சரக்கிருப்பு  1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
      செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
      மொத்தம்  10,00,000

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Model 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment