முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 90

    பகுதி I

    18 x 5 = 90
  1. ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.

  2. நான்காவது வரிசை கார உலோகத்தைக் கொண்டுள்ள (A) என்ற இரட்டை உப்பை 500K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த (B) கிடைக்கிறது. (B) ன் நீர்க்கரைசல் Bacl2 உடன் வெண்மை நிற வீழ்ப்படிவைத் தருகிறது. மேலும் அலிசரினுடன் சிவப்பு நிற சேர்மத்தைத் தருகிறது. A மற்றும் B ஐக் கண்டறிக.

  3. பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
    அ) BrF5
    ஆ) BrF3

  4. தாமிரத்தின் E0M2+/M மதிப்பு நேர்க்குறி மதிப்புடையது. இதற்கான தகுந்த சாத்தியமான காரணத்தை கூறுக.

  5. [Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக. 

  6. KF ஆனது சோடியம் குளோரைடைப் போன்று fcc அமைப்பில் படிகமாகிறது. KF ன் அடர்த்தி 2.48gcm-3 எனில், KF-ல் உள்ள K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவினைக் கண்டறிக.,

  7. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 1.54 x 10-3 s-1 அதன் அரை வாழ் காலத்தினைக் கண்டறிக.

  8. ஒரு முதல் வகை வினை 50 நிமிடங்களில் 40% நிறைவடைகிறது. வினைவேக மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக அவ்வினை 80% நிறைவடைய தேவையான காலம் எவ்வளவு?

  9. Hg2Cl2. இன் கரைதிறன் பெருக்கத்திற்கான சமன்பாட்டை எழுதுக.

  10. பின்வருவனவற்றிற்கு, கரைதிறன் பெருக்கம் மற்றும் மோலார் கரைதிறன் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை நிறுவுக.
    a) BaSO4 b) Ag2(CrO4)

  11. தன்னிழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக .

  12. வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை  ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  13. 0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில் உள்ள மெத்தில் மெக்னீசியம் அயோடைடுன் சேர்க்கும் போது STP ல் 112 cm3 மீத்தேனை வெளியேற்றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம் வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.

  14. பின்வரும் வினை வரிசையில் A,B, X மற்றும் Y ஆகிய விளைபொருட்களைக்  கண்ட றிக. 

  15. எவ்வாறு தயாரிப்பாய்?
    i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
    ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
    iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
    iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
    v. அசிட்டைல் குளோரைடுடிலிருந்து அசிட்டோபீனோன்
    vi. சோடியம்  அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
    vii.டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
    viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
    ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
    x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு

  16. பின்வரும் வினையின் A,B,C மற்றும் D ஐக் கண்டறிக.

  17. α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக

  18. இரப்பரின் வல்கையாக்கல் பற்றி குறிப்பு வரைக .

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Important 5 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment