பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 95

    பகுதி I

    19 x 5 = 95
  1. எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை? 

  2. நான்காவது வரிசை கார உலோகத்தைக் கொண்டுள்ள (A) என்ற இரட்டை உப்பை 500K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த (B) கிடைக்கிறது. (B) ன் நீர்க்கரைசல் Bacl2 உடன் வெண்மை நிற வீழ்ப்படிவைத் தருகிறது. மேலும் அலிசரினுடன் சிவப்பு நிற சேர்மத்தைத் தருகிறது. A மற்றும் B ஐக் கண்டறிக.

  3. ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக

  4. Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?

  5. நீரேற்ற மாற்றியங்கள் என்றால் என்ன, ஒரு உதாரணத்துடன் விளக்குக.

  6. [CoC2O4)3]3- ல் காணப்படும் பிணைப்பின் தன்மையை VB கொள்கையைப் பயன்படுத்தி விளக்குக.

  7. ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.

  8. SO2Cl2 → SO2 + Cl2 என்ற வாயு நிலை ஒருபடித்தான வினையாது முதல் வகை வினைவேகவியலுக்கு உட்படுகிறது. அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள் SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப அளவில் 1% ஆக குறைய ஆகும் காலத்தினை கணக்கிடுக.

  9. ஒரு முதல் வகை வினை 50 நிமிடங்களில் 40% நிறைவடைகிறது. வினைவேக மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக அவ்வினை 80% நிறைவடைய தேவையான காலம் எவ்வளவு?

  10. 500 ml கனஅளவுள்ள நீரில், 6 கிராம் அசிட்டிக் அமிலம் மற்றும் 8.2 கிராம்  சோடியம் அசிட்டேட் மற்றும் ஆகியவற்றை நீரில் கரைத்து பெறப்பட்ட கரைசலின் pH மதிப்பு என்ன? (கொடுக்கப்பட்டது: அசிட்டிக் அமிலத்தின் Ka மதிப்பு \(1.8 \times10^{-5}\)

  11. ஒரு ஏரியில் \(8.2\times10^{12}\) லிட்டர் நீர் நிரம்பியுள்ளது. ஒரு திறன் அணு உலையானது தகுந்த மின்னழுத்தத்தில் ஏரியிலுள்ள நீரை மின்னாற்பகுத்து \(2\times10^{6}\) Cs-1 வேகத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஏரியிலுள்ள நீர் முழுவதும் மின்னாற்பகுத்தலுக்கு உட்பட எவ்வளவு வருடங்களாகும்? மின்னாற்பகுத்தலைத் தவிர வேறெந்த வகை யிலும் நீர் இழக்கப்படவில்லை என கருதுக. 

  12. 0.1M KCl கரைசலை பயன்படுத்தி கண்ட றியப்பட்ட மின்கடத்து கலனின் மின்தடை 190 \(\Omega \) (0.1M KCl கரைச லின் நியம கடத்துத்திறன் மதிப்பு 1.3 Sm-1). அதே கலனில் 0.003M செறிவுள்ள சோடியம் குளோரைடு  கரைசலை நிரப்பும் போது, அளவிடப்பட்ட மின்தடை மதிப்பு 6.3K\(\Omega\) இவை இரண்டும் ஒரே குறிப்பிட்ட வெப்பநிலையில் கண்டறியப்பட்ட அளவீடுகளாகும்.  NaCl கரைசலின் நியம மற்றும்   மேலார் கடத்துத்திறன்  மதிப்புகளை கணக்கிடுக.
    கொடுக்கப்பட்டது
    κ = 1.3 Sm -1   (0.1M KCL  கரைசலுக்கு )
    R = 190 \(\Omega\)

  13. வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை  ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  14. 0.44 கிராம் மோனோஹைட்ரிக் ஆல்கஹாலை, ஈதரில் உள்ள மெத்தில் மெக்னீசியம் அயோடைடுன் சேர்க்கும் போது STP ல் 112 cm3 மீத்தேனை வெளியேற்றுகிறது. அதே ஆல்கஹாலானது PCC யுடன் வினைபடுத்தும் போது கார்பனைல் சேர்மத்தைத் தருகிறது. அந்த கார்பனைல் சேர்மம் வெள்ளி ஆடி சோதனைக்கு உட்படுகிறது. சேர்மத்தினைக் கண்டறிக.

  15. பின்வரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன?
    புரப்பனல் \(\longrightarrow\) பியுட்டனோன்
    ஹெக்ஸ்-3-ஐன் \(\longrightarrow\) ஹெக்சன் -3-ஓன்
    பீனைல் மெத்தனேல்  \(\longrightarrow\) பென்சாயிக் அமிலம்
    பீனைல் மெத்தனேல் \(\longrightarrow\) பென்சாயின்

  16. எவ்வாறு தயாரிப்பாய்?
    i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
    ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
    iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
    iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
    v. அசிட்டைல் குளோரைடுடிலிருந்து அசிட்டோபீனோன்
    vi. சோடியம்  அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
    vii.டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
    viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
    ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
    x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு

  17. பின்வரும் வினைவரிசையில் உள்ள A முதல் E வரை உள்ள சேர்மங்களை கண்டறிக.

  18. பின்வரும் சர்க்கரையானது, D – சர்க்கரையா? அல்லது L – சர்க்கரையா?

  19. வெப்பத்தால் இளகும் மற்றும் வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள் வேறுபடுத்துக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 5 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment