பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45

    பகுதி I

    9 x 5 = 45
  1. காப்பர் அதன் தாதுவிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?

  2. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக

  3. பாஸ்பரஸ் ஆக்சைடுகளின் அமைப்புகளை விவரி

  4. i) லாந்தனைடுகளில் எது பெரிய Ln3+ அயனி?
    ii) ஒரு தனித்த எலக்ட்ரானின் காந்த திருப்புத் திறன் மதிப்பு 1.1 BM எனில் குரோமியம் அனுவின் காந்த திருப்புத் திறனைக் கணக்கிடுக.
    iii) பெர்மாங்கனேட் அயனியில் அணைத்து Mn மற்றும் O பிணைப்புகளும் சகப்பிணைப்புகள், காரணம் தருக.

  5. குரோமேட் மற்றும் டைகுரோமேட் அயனியின் அமைப்பினை விவரி?

  6. இணைதிற பிணைப்புக் கொள்கையின் முக்கிய கருதுகோள்களை எழுது.

  7. எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.

  8. பின்வரும் சோதனை முடிவுகளிருந்து 298 Kல் CCl4 ல் N2O5 சிதைவடையும் வினை முதல் வகை வினை என நிரூபி. மேலும் அவ்வினையின் வினைவேக மாறிலியை கணக்கிடு.

    நேரம் (நிமிடங்கள்) 10 15 20
    O2 வின் கனஅளவு (மிலி) 6.3 8.95 11.4 34.75
  9. எத்தில் புரோமைடு மற்றும் புரப்பைல் புரோமைடு ஆகிய இரு சேர்மங்கள் சிதைவடையும் வினைகளும் முதல் வகை வினைகளாகும். மேலும் இவ்விரு வினைகளும் ஒரே அதிர்வெண் காரணி A மதிப்பினைப் பெற்றுள்ளன. 390oC ல் எத்தில் புரோமைடு சிதைவுறும் வினையின் வினைவேக மாறிலி மதிப்பும் சமம். எத்தில் புரோமைடு சிதைவுறும் வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பு 230 KJ mol-1 எனில் புரப்பைல் புரோமைடு சிதைவுறும் வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பினைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Tamil Medium Model 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment