முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000
    ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 40,000
  2. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  3. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000
    கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000
    அளித்த தள்ளுபடி 5,000
    விற்பனைத் திருப்பம் 2,000
    2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000
  4. பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000
    உள்திருப்பம் 15,000
    வாராக்கடன் 5,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000
    ரொக்க விற்பனை 1,40,000
  5. பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000
    இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000
    மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது 60,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 5,000
  6. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் ரூ.
    ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) 5,00,000
    ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) 8,50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 1,20,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 70,000
  7. பின்வரும் தகவல்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும். 

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 2,20,000
    2018, டிசம்பர் 31 அன்று முதல் 1,80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 40,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 50,000
  8. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க கடனீந்தோர் 1,70,000
    கொள்முதல் திருப்பம் 20,000
    கடனீந்தோருக்குச் செலுத்தியது 4,50,000
    இறுதிக் கடனீந்தோர் 1,90,000
  9. முழுமை பெறா பதிவேடுகள் என்றால் என்ன?

  10. நிலை அறிக்கை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts From Incomplete Records Two Marks Questions )

Write your Comment