இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ விவரம் ரூ 
    தொடக்க  இருப்பு (1.1.2018) 20,000 பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது 12,000
    முதலீடுகள் செய்தது 80,000 அறைகலன் விற்றது 5,000
    மதிப்பூதியம் செலுத்தியது 3,000 பொதுச்செலவுகள்  7,000
    நன்கொடை பெற்றது 80,000 அஞ்சல் செலவுகள் 1,000
    தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 சந்தா பெற்றது 10,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
    எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018)  = ரூ1,500
    எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) = ரூ 200
    எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018)  = ரூ 200

  3. கரூர் சமூக மன்றத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய முதல் நிதியினைக் கணக்கிடவும்.

    விவரம் (31.03.2018) ரூ 
    அறைகலன் 50,000
    கட்டடம் 40,000
    2017-18 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது 10,000
    2018-19 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது 5,000
    கடன் வாங்கியது 10,000
    முதலீடுகள் 20,000
    கைரொக்கம்  4,000
    வங்கி ரொக்கம் 6,000
  4. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்

  5. இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்படுகிறது?

  6. பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள்  ரூ ரூ  செலுத்தல்கள் ரூ
    சந்தா         
    2017-2018 10,000      
    2018-2019 50,00      
    2019-2020 5,000 65,000    
             

    மன்றத்தில் உள்ள 200 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தாவாக ரூ.400 செலுத்துகின்றனர்.2017-2018 ஆம் ஆண்டில் இன்னும் பெற வேண்டிய சந்தா ரூ.2000

  7.  காரைக்குடி விளையாட்டு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வருவன எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்

    விவரம் ரூ
    2018, ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப்போட்டி நிதி 90,000
    2018, ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப்ப்போட்டி நிதி முதலீடு 90,000
    தொடர் விளையாட்டுப் போட்டி நிதி முதலீடு மீதான வட்டி பெற்றது 9,000
    தொடர் விளையாட்டுப்போட்டி நிதிக்கான நன்கொடை 10,000
    தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 60,000
  8. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  9. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கை தயாரிப்பதற்கான படிநிலைகளை எழுதுக.

  10. குறிப்பு வரைக 
    1) சந்தா 
    2) நன்கொடைகள் 

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Three Marks Questions )

Write your Comment