இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 10,000
    கைரொக்கம்  5,000 எழுதுபொருளுக்காக செலுத்தியது 7,000
    வாடகைப் பெற்றது 10,000 கணிப்பொறி வாங்கியது 25,000
    முதலீடுகள் விற்றது 8,000 சம்பளம்  20,000
    சந்தா பெற்றது 54,000 இறுதி இருப்பு  
        கைரொக்கம் 15,000
      77,000   77,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  3. பின்வரும் விவரங்கள் ஒரு விளையாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

    விவரம் ரூ
    விளையாட்டுப்பொருள்கள் இருப்பு (01.04.2018) 3,000
    நடப்பாண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருள்கள்  9,000
    நடப்பாண்டில் விற்பனை செய்த பழைய விளையாட்டுப் பொருள்கள் 500
    விளையாட்டுப் பொருள்கள் இருப்பு (31.03.2019) 4,000
  4. இலாப நோக்கற்ற அமைப்பின்பொருள் தரவும்.

  5. ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்

  6. இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.

  7. இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?

  8. அரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பெறப்படும் மானியம் பற்றி குறிப்பு வரைக.

  9. மதிப்பூதியம் என்றால் என்ன?

  10. இருப்புநிலைக் குறிப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Two Marks Questions )

Write your Comment