கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
  10 x 1 = 10
 1. கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது

  (a)

  சமமான விகிதத்தில்

  (b)

  முதல் விகிதத்தில்

  (c)

  இரண்டும் (அ) மற்றும் (ஆ)

  (d)

  மேற்கூறிய எதுவுமில்லை

 2. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி

  (a)

  வழங்கப்படுவதில்லை

  (b)

  வங்கி வீதத்தில் வழங்கப்படும்

  (c)

  ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

  (d)

  ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

 3. கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்

  (a)

  ஆண்டுக்கு 8%

  (b)

  ஆண்டுக்கு 12%

  (c)

  ஆண்டுக்கு 5%

  (d)

  ஆண்டுக்கு 6%

 4. பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?

  (a)

  அலுவலகச் செலவுகள்

  (b)

  பணியாளர் ஊதியம்

  (c)

  கூட்டாளியின் ஊதியம்

  (d)

  வங்கிக்கடன் மீதான வட்டி

 5. கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?

  (a)

  கூடுதல் முதல் கொண்டுவந்தது

  (b)

  முதல் மீது வட்டி

  (c)

  எடுப்புகள் மீது வட்டி

  (d)

  இலாபப் பகிர்வு

 6. ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக

  (a)

  5.5 மாதங்கள்

  (b)

  6 மாதங்கள்

  (c)

  12 மாதங்கள்

  (d)

  6.5 மாதங்கள்

 7. பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?

  (a)

  எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

  (b)

  முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

  (c)

  கடன்மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

  (d)

  இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

 8. கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது

  (a)

  சம்பளம்

  (b)

  கழிவு

  (c)

  கடன் மீது வட்டி

  (d)

  முதல் மீது வட்டி

 9. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  (a)

  கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

  (b)

  கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.

  (c)

  கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.

  (d)

  கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.

 10. எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.

  (a)

  ரூ.50

  (b)

  ரூ.150

  (c)

  ரூ.550

  (d)

  ரூ.500

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy Accounts of Partnership Firms-Fundamentals One Marks Model Question Paper )

Write your Comment