கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. 2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜுலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
    2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 கணக்கிடவும்.

  2. வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.

  3. கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்.

  4. இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?

  5. மன்னன் மற்றும் ரமேஷ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஏப்ரல் 1 அன்று அவர்களின் முதல் முறையே மன்னன் ரூ.1,50,000 மற்றும் ரமேஷ் ரூ.1,00,000 ஆகும். அவர்களின் நடப்புக் கணக்குகள் ரூ.25,000 மற்றும் ரூ.20,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிட்டு, அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  6. 2018 ஆம் ஆண்டில் மேத்யூ என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.20,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  7. கெவின் மற்றும் பிரான்சிஸ் இருவரும் கூட்டாளிகள். கெவின் ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ரூ.5,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6%. 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.

  8. கூட்டாண்மை பொருள் தருக.

  9. முதல் மீதான வட்டி என்றால் என்ன?

  10. வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Partnership Firms-fundamentals Two Marks Questions )

Write your Comment