கூட்டாளி சேர்ப்பு இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. அன்பு மற்றும் இராஜு என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அக்ஷய் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். அன்பு, இராஜு மற்றும் அக்ஷய் அவர்களின் புதிய இலாபப் பங்கு 5:3:2. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  2. ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \(\frac{1}{8}\) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  3. ரவி மற்றும் குமார் என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் கிறிஸ்டி என்பவரை \(\frac { 3 }{ 7 } \) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கிறிஸ்டி ரவியிடமிருந்து \(\frac { 2 }{ 7 } \) பங்கும், குமாரிடமிருந்து \(\frac { 1 }{ 7 } \) பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  4. பிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  5. ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  6. மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  7. அனில், சுனில் மற்றும் ஹரி என்ற மூன்று கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ராஜா என்பவரை 20% இலாபத்திற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  8. புதிய கூட்டாளி சேர்க்கையின்போது, பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?

  9. தியாக விகிதம் என்றால் என்ன?

  10. பிரவீணா மற்றும் தான்யா என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் மாலினி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பிரவீணா, தான்யா மற்றும் மாலினி அவர்களின் புதிய இலாப விகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  11. கோவிந்த் மற்றும் கோபால் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் 5:4 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரஹீம் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கோவிந்த் தன் பங்கில் 2/9 பாகத்தினையும், கோபால் தன் பங்கில் 1/9 பாகத்தினையும் இரஹீமிற்காக தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதத்தையும் மற்றும் தியாக விகிதத்தையும் கணக்கிடவும்.

  12. பிரேமா மற்றும் சந்திரா 5:3 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வருகின்றனர். ஹேமா என்பவர் கூட்டாளியாக சேருகிறார். பிரேமா தன் பங்கில் 1/8 பாகமும், சந்திரா தன் பங்கில் 1/8 பாகமும் ஹேமாவிற்காக தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதத்தையும் மற்றும் தியாக விகிதத்தையும் கணக்கிடவும்.

  13. கார்த்திக் மற்றும் கண்ணன் இருவரும் இலாபத்தை சமமாக பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள். அவர்கள் கைலாஷ் என்பவரை 1/4 இலாபப் பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கைலாஷ் தனது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 7:3 என்ற விகிதத்தில் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  14. செல்வம் மற்றும் செந்தில் இருவரும் 2:3 என்ற விகிதத்தில் இலாபம் பகிரும் கூட்டாளிகள். இதில், சிவா என்பவர் 1/5 பங்கு விகிதத்தில் கூட்டாளியாக சேருகிறார். சிவா, இப்பங்கினை செல்வம் மற்றும் செந்தில் இருவரிடமும் சமமாக பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.

  15. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy Admission Of A Partner Two Marks Questions )

Write your Comment