அரையாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

    (a)

    இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

    (b)

    ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

    (c)

    இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

    (d)

    வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை

  2. கணக்கேடுகள் முழுமையாக இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படாதபோது அவ்வேடுகள் ______ என்றழைக்கப்படுகின்றன.

    (a)

    முழுமை பெறா பதிவேடுகள் 

    (b)

    முழுமை பெற்ற பதிவேடுகள் 

    (c)

    ஒற்றைபதிவு முறை 

    (d)

    நிலையறிக்கை 

  3. ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ 50,000

    (b)

    ரூ 50,200

    (c)

    ரூ 49,000

    (d)

    ரூ 49,800

  4. ஒரு நிறுவனத்தில் வழக்கமான ஊழியராக இல்லாத ஒருவருக்கு வழங்கப்படும் ஊதியமே _______ எனப்படும்.

    (a)

    முதலீடு மீதான வட்டி 

    (b)

    சந்தா 

    (c)

    நன்கொடைகள் 

    (d)

    மதிப்பூதியம் 

  5. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

    (b)

    கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.

    (c)

    கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.

    (d)

    கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.

  6. _______ என்பது கூட்டாளிகளின் முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி ஆகும்.

    (a)

    எடுப்பு மீது வட்டி

    (b)

    முதல் மீது வட்டி

    (c)

    கடன் மீது வட்டி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  7. ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு _____.

    (a)

    ரூ.40,000

    (b)

    ரூ.70,000

    (c)

    ரூ.1,00,000

    (d)

    ரூ.30,000

  8. கூட்டுசராசரி இலாபமுறையில், நற்பெயரானது கூட்டு சராசரி இலாபத்தினைக் கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையால் ______ மூலம் கணக்கிடப்படுகிறது

    (a)

    கூட்டுவதன்

    (b)

    கழித்தலின்

    (c)

    பெருக்குவதன்

    (d)

    வகுப்பதன்

  9. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

    (a)

    மறுமதிப்பீட்டு இலாபம்

    (b)

    பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

    (c)

    புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

    (d)

    முதலீட்டு மாறுபடும் நிதி

  10. ஒரு கூட்டாளியைச் சேர்க்கும் போது பொதுவாக கூட்டாளிகளின் ________ உரிமைகளில் மற்றம் ஏற்படுகிறது

    (a)

    முதல்

    (b)

    பரஸ்பர

    (c)

    காப்பு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  11. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு_____.

    (a)

    A-ன் முதல் கணக்கு

    (b)

    A-ன் கடன் கணக்கு

    (c)

    A –ன் நிறைவேற்றாளர் கணக்கு

    (d)

    A –ன் நிறைவேற்றாளர்கடன் கணக்கு

  12. கூட்டாளி விலகினால், முடிவுக்கு வருவது எது?

    (a)

    பழைய ஒப்பந்தம்

    (b)

    புதிய ஒப்பந்தம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஆதாய விகிதம்

  13. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    அங்கீகரிக்கப்பட்ட முதல்

    (b)

    அழைக்கப்பட்ட முதல்

    (c)

    முதலினக் காப்பு

    (d)

    காப்பு முதல்

  14. _________ நிறுமத்தின் அலுவலக கையொப்பமாக கருதப்படுகிறது.

    (a)

    தனிச்சட்ட உருமம் 

    (b)

    பொது முத்திரை 

    (c)

    நீண்ட வாழ்நாள் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  15. ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ரூ.80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ரூ.88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?

    (a)

    10%

    (b)

    110%

    (c)

    90%

    (d)

    11%

  16. ஒரு கணக்காண்டிற்குரிய தொகை மட்டுமே பகுப்பாய்விற்கு எடுத்து கொள்ளப்படுமானால் அது _______ என்றழைக்கப்படும்.

    (a)

    கிடைமட்ட பகுப்பாய்வு 

    (b)

    செங்குத்துப் பகுப்பாய்வு 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  17. பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் ______.

    (a)

    உரிமையாளர் விகிதம்

    (b)

    முதல் உந்துதிறன் விகிதம்

    (c)

    புற அக பொறுப்பு விகிதம்

    (d)

    நடப்பு விகிதம்

  18. நீர்மைத் தன்மை விகிதங்கள் ________ என்றும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    சரக்கிருப்பு சுழற்சி விகிதம் 

    (b)

    மொத்த இலாப விகிதம் 

    (c)

    நிகர இலாப விகிதம் 

    (d)

    குறுகிய கால செயல்திறன் விகிதங்கள் 

  19. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தலைமைப் பதிவு 

    (b)

    அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்  

    (c)

    அறிக்கைகள் 

    (d)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது 

  20. _______ மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நிதியியல் கணக்கியல் மென்பொருள்களில் ஒன்றாகும்.

    (a)

    Tally 

    (b)

    Window excel 6.0

    (c)

    World docment 

    (d)

    Microsoft 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. பின்வரும் தகவல்களிலிருந்து கடன் விற்பனையை காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,00,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 2,30,000
    அளித்த தள்ளுபடி 5,000
    உள் திருப்பம் 25,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 1,20,000
  23. சென்னை டென்னிஸ் மன்றத்தின் விளையாட்டுப் போட்டிநிதி ஏப்ரல் 1, 2018 அன்று ரூ.24,000 வரவிருப்பு காட்டியது. அந்த ஆண்டில் அந்நிதியிலிருந்து பெற்ற வரவுகள் ரூ. 26,000. அந்த ஆண்டில் மேற்கொண்ட விளையாட்டுப்போட்டிச் செலவுகள் 33,000. இவ்விவரங்கள் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

  24. வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?

  25. ஆண்டுத் தொகை என்றால் என்ன?

  26. அனில், சுனில் மற்றும் ஹரி என்ற மூன்று கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ராஜா என்பவரை 20% இலாபத்திற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  27. புதிய இலாப விகிதம் என்றால் என்ன?

  28. ஜாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.5, ஒதுக்கீட்டின் போது ரூ.3, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 செலுத்தும் வகையில் வெளியிட்டது. 9,000 பங்குகளை வாங்க பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இயக்குனர்கள் 9,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்து அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டனர். தேவையான குறிப்பேட்ப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  29. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் பொருள் எழுதுக.

  30. பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்:

    31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 1,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 60,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) 80,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 50,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபடவேண்டிய செலவுகள் 30,000
    மொத்தம் 3,20,000
  31. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

  32. பகுதி - III

    ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்

    7 x 3 = 21
  33. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 40,000
    2019, மார்ச் 31 அன்று முதல் 50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 7,000
    அவ்வாண்டின் இலாபம் 8,000
    அவ்வாண்டில் எடுப்புகள் ?
  34. திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ விவரம் ரூ 
    தொடக்க  இருப்பு (1.1.2018) 20,000 பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது 12,000
    முதலீடுகள் செய்தது 80,000 அறைகலன் விற்றது 5,000
    மதிப்பூதியம் செலுத்தியது 3,000 பொதுச்செலவுகள்  7,000
    நன்கொடை பெற்றது 80,000 அஞ்சல் செலவுகள் 1,000
    தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 சந்தா பெற்றது 10,000
  35. முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  36. ஒரு நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் பின்வருமாறு:
    2015: ரூ.15,000; 2016: ரூ.17,000; 2017: ரூ.6,000 (நட்டம்); 2018: ரூ.14,000
    4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  37. கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். விலகலுக்குப்பின் தேவையான சரிக்கட்டுதல்களைச்   செய்த பிறகு அவருடைய முதல் கணக்கு ரூ.1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (i) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப் பட்டது.
    (ii) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    (iii) ரூ.1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது

  38. குறிப்பு வரைக:
    1) தனியார் ஒதுக்கீடு 
    2) உரிமை வெளியீடு 
    3) மேலூதிய பங்கு வெளியீடு 

  39. மரியா வரையறு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்  
      பங்குதாரர் நிதி 4,00,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 3,20,000
      நடப்புப் பொறுப்புகள் 80,000
    மொத்தம் 8,00,000
    II. சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 6,00,000
      நடப்புச் சொத்துகள் 2,00,000
    மொத்தம் 8,00,000
  40. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் குறைபாடுகள் யாவை?

  41. விகித பகுப்பாய்வின் நோக்கங்களை விளக்கவும்.

  42. கணக்கியல் சான்றாவணம் குறித்து சிறு குறிப்பு எழுதவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
  44. முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    
  45. கோயமுத்தூர் பொழுதுபோக்கு மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

    கோயமுத்தூர் பொழுதுபோக்கு மன்றம் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
    பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ.
    இருப்பு கீ/கொ      அறைகலன்  15,000
    கைரொக்கம்    9,000 எழுதுபொருள்கள்  2,400
    சந்தா      முதலீடு  12,500
    2018-2019 12,500   அஞ்சல் செலவுகள்  1,000
    2019-2020  400 12,900 இருப்பு கீ/இ   
    பொழுதுபோக்கு மூலமாக பெற்ற வருமானம்    12,000 கைரொக்கம்  3,500
    பல்வகை வரவுகள்    500    
        34,400   34,400

    கூடுதல் தகவல்கள்:
    1) மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ரூ.30 செலுத்துகின்றனர்.
    2) எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31ல் ரூ.300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ.500
    3) 2018, ஏப்ரல் 1 அன்று முதல் நிதி ரூ.9,300
    2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

  46. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 8,000
    ஜூன் 1 6,000
    செப்டெம்பர் 1 4,000
    டிசம்பர் 1 3,000

    பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

  47. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
    (ஆ) சாதாரண இலாப விகிதல் 10%
    (இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000:

  48. அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப் பகிர்வு விகிதம் 3 : 2 : 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துக்கள் ரூ.
    முதல் கணக்குகள்:     இயந்திரம் 60,000
      அமீர் 80,000   அறைகலன்  40,000
      இராஜா 70,000 1,50,000 கடனாளிகள் 30,000
    காப்பு நிதி   15,000 சரக்கிருப்பு 10,000
    கடனீந்தோர்   35,000 முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு 40,000
          வங்கி ரொக்கம் 20,000
        2,00,000   2,00,000

    ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ,10,000 கொண்டுவந்தார்.
    பின்வருமாறு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது
    தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

  49. ஒரு கூட்டண்மை நிறுவனத்தில் கண்ணன், ரஹிம் மற்றும் ஜான் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள்  ரூ 
    முதல் கணக்குகள்:     கட்டடம் 90,000
    கண்ணன் 1,00,000   இயந்திரம் 60,000
    ரஹிம் 80,000   கடனாளிகள் 30,000
    ஜான் 40,000 2,20,000 சரக்கிருப்பு 20,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   30,000 வங்கி ரொக்கம் 50,000
    கடனீந்தோ   20,000 இலாபநட்டக் க/கு (நட்டம்) 20,000
        2.70,000   2,70,000

    ஜான் 2018, ஜனவரி 1 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) கட்டடத்தின் மீது 10% மதிப்பேற்றம் செய்யப்பட்டது.
    (ii) சரக்கிருப்பு மதிப்பு 5% குறைக்க வேண்டும்.
    (iii) ரூ.1,000 வாராக்கடன் ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    (iv) பதிவுறா பொறுப்பு ரூ.8,000 என கண்டறியப்பட்டது.
    (v) விலகும் கூட்டாளிக்குரியதொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது.
    மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் விலகலுக்குப் பின் நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  50. மோகன்ராஜ், நாகராஜ், பாக்கியராஜ் என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 31.12.2014 அன்று நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.30,000 மற்றும் பகிர்ந்து தரா நட்டம் ரூ.20,000 உள்ளன. பாக்கியராஜ் 1.1.2015 அன்று விலக்கினார். காப்பு நிதி, பகிர்ந்து தரா நாட்டம் ஆகியவற்றை பழைய கூட்டாளிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

  51. கஸ்தூரி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 20,000 நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் வெளியிட்டது. 30,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. ரூ.3 விண்ணப்பத்தின் மீதும், ரூ.5 ஒதுக்கீட்டின் மீதும் (முனைமம் ரூ.2 உள்பட), ரூ.2 முதல் அழைப்பின் மீதும் மற்றும் ரூ.2 இறுதி அழைப்பின் மீதும் செலுத்தப்பட வேண்டும். சுபின் என்னும் பங்குதாரர் தன்னுடைய 500 பங்குகளுக்கான முதலாவது மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகையினை கட்டத் தவறினார். அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அதில், 400 பங்குகள் ஒன்று ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்

  52. மீனாட்சி வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 முகமதிப்புடைய 100 சாதாரணப் பங்குகளின் மீது ரூ.10 மட்டும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இறுதி அழைப்பான ரூ.2 செலுத்தாத காரணத்தினால் ஒறுப்பிழைப்பு செய்தனர். இவ்வொறுப்பிழப்பு செய்த பங்குகள் பங்கொன்று ரூ.7 வீதம் முழுவதும் செலுத்தப்பட்டவைகளாக வெளியிடப்பட்டன. தேவையான பதிவுகளை நிறுமத்தின் குறிப்பேட்டில் தருக.

  53. ராதா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 4,50,000
    இதர வருமானம் 67,500
    செலவுகள் 1,35,000
  54. குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடைவடியும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

      விவரம்  2016, மார்ச் 31 2017, மார்ச் 31
        ரூ. ரூ.
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்     
      பங்குதாரர் நிதி  2,00,000 5,20,000
      நீண்டகாலப் பொறுப்புகள்  1,00,000 1,20,000
      நடப்புப் பொறுப்புகள்  50,000 60,000
      மொத்தம்  3,50,000 7,00,000
    II  சொத்துகள்     
      நிலைச் சொத்துகள்  2,00,000 4,00,000
      நடப்புச் சொத்துகள்  1,50,000 3,00,000
      மொத்தம்  3,50,000 7,00,000
  55. பத்மா நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப மற்றும் நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்கவிலை விகிதம் கணக்கிடவும்

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் குறிப்பு எண். தொகை
    ரூ.
    I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்   15,00,000
    II. இதர வருமானம்   40,000
    III. மொத்த வருவாய் (I + II)   15,40,000
    IV. செலவுகள்:    
      கொள்முதல் செய்த சரக்குகள்   8,60,000
      சரக்கிருப்பு மாற்றம்   40,000
      பணியாளர் நலன்களுக்கான செலவுகள் (சம்பளம்)   1,60,000
      இதர செலவுகள் 1 1,70,000
      மொத்த செலவுகள்   12,30,000
    V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV)   3,10,000

    கணக்குகளுக்கான குறிப்புகள்

    விவரம் தொகை
    ரூ.
    1. இதர செலவுகள்  
      அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் 50,000
      விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 90,000
      அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம் 30,000
      1,70,000
  56. பின்வரும் விவரங்களைக் கொண்டு நடப்பு விகிதம் மற்றும் நீர்மை விகிதத்தைக் கணக்கிடுக.

      ரூ.   ரூ.
    ரொக்கம்  5,000 கடனாளிகள்  29,000
    பெறுதற்குரிய மாற்று சீட்டுகள்  5,000 குறுகிய கால முதலீடுகள்  15,0000
    சரக்கிருப்பு  52,000 முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்  2,000
    கடனீந்தோர்  36,000 முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்  2,000
    செலுத்த வேண்டிய செலவினங்கள்  8,000 செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள்  10,0000
  57. பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
    (1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
    (2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
    (3) ரொக்கத்திற்கு அறைகலன்  வாங்கியது ரூ. 15,000
    (4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
    (5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
    (6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
    (7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
    (8) அலுவலக செலவிற்காக  வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
    (9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
    (10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
    (11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
    (12) கொள்முதல் மீதான துக்குக்கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
    (13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy Half Yearly Model Question Paper )

Write your Comment