காலாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை_____.

    (a)

    ரூ. 85,000

    (b)

    ரூ. 1,06,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 64,000

  3. ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

    (a)

    முழுமை பெறா பதிவேடுகள் 

    (b)

    நிலையறிக்கை 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    குறிப்பேடுகள் 

  4. சட்ட நிபந்தனைகள் காரணமாக _______ ஒற்றைப் பதிவு முறையைப் பயன்படுத்துவதில்லை.

    (a)

    நிறுமங்கள் 

    (b)

    வங்கிகள் 

    (c)

    நிதி நிறுவனங்கள் 

    (d)

    தனியாள் வணிகம் 

  5. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.

    (a)

    வருவாயினத் தன்மை மட்டும் உடையது

    (b)

    முதலினத் தன்மை மட்டும் உடையது

    (c)

    வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  6. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது ______.

    (a)

    இலாபம் அல்லது நட்டம் 

    (b)

    ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு

    (c)

    உபரி அல்லது பற்றாக்குறை

    (d)

    நிதிநிலை 

  7. ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ 50,000

    (b)

    ரூ 50,200

    (c)

    ரூ 49,000

    (d)

    ரூ 49,800

  8. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.

    (a)

    வழங்கப்படுவதில்லை

    (b)

    வங்கி வீதத்தில் வழங்கப்படும்

    (c)

    ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

    (d)

    ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

  9. கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்______.

    (a)

    ஆண்டுக்கு 8%

    (b)

    ஆண்டுக்கு 12%

    (c)

    ஆண்டுக்கு 5%

    (d)

    ஆண்டுக்கு 6%

  10. சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.

    (a)

    சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (b)

    உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (c)

    ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு

    (d)

    கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

  11. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு_____.

    (a)

    சொத்து க/கு

    (b)

    பெயரளவு க/கு

    (c)

    ஆள்சார் க/கு

    (d)

    ஆள்சாரா க/கு

  12. கூட்டாளி சேர்ப்பின்போது புதிய கூட்டாளி நற்பெயருக்காக கொண்டு வரும் தொகை, யாருடைய முதல்கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்?

    (a)

    அனைத்து கூட்டாளிகள்

    (b)

    பழைய கூட்டாளிகள்

    (c)

    புதிய கூட்டாளி

    (d)

    தியாகம் செய்த கூட்டாளிகள்

  13. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

    (a)

    மறுமதிப்பீட்டு இலாபம்

    (b)

    பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

    (c)

    புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

    (d)

    முதலீட்டு மாறுபடும் நிதி

  14. ________ என்பதில் பாதுக்காப்பு, கப்புநிதி, தொழிலாளர் ஈட்டு நிதி மற்றும் முதலீட்டு மாறுபடும் நிதி ஆகியவை அடங்கும்

    (a)

    நற்பெயர்

    (b)

    கப்புகள்

    (c)

    சொத்துக்கள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  15. கூட்டாளி விலகலின் பொதுக்காப்பு மாற்றப்படுவது _____.

    (a)

    அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு

    (b)

    மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு

    (c)

    தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு

    (d)

    நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு

  16. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு_____.

    (a)

    வங்கி க/கு

    (b)

    விலகும் கூட்டாளியின் முதல் க/கு

    (c)

    விலகும் கூட்டாளியின் கடன் க/கு

    (d)

    பிற கூட்டாளிகளின் முதல் க/கு

  17. X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ. 1,000

    (b)

    ரூ. 3,000

    (c)

    ரூ.12,000

    (d)

    ரூ.36,000

  18. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    அங்கீகரிக்கப்பட்ட முதல்

    (b)

    அழைக்கப்பட்ட முதல்

    (c)

    முதலினக் காப்பு

    (d)

    காப்பு முதல்

  19. பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?

    (a)

    வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது.

    (b)

    பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்

    (c)

    காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும்போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

    (d)

    செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்

  20. சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை_____.

    (a)

    ரூ.700

    (b)

    ரூ.800

    (c)

    ரூ.900

    (d)

    ரூ.1,000

  21. 7 x 2 = 14
  22. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  23. பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும். 

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 1,40,000
    ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 2,00,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 3,90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 30,000
  24. ஒரு சங்கத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 ஆம் ஆண்டு சந்தா மூலம் பெற்ற வருமானத்தைக் கணக்கிடவும்.

    விவரம் 1.1.2018
    ரூ
    31.12.2018
    ரூ
    பெறவேண்டிய சந்தா  10,000 7,000
    முன்கூட்டிப் பெற்ற சந்தா  3,000 5,000

    2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா ரூ.1,50,000.

  25. இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?

  26. முதல் மீதான வட்டி என்றால் என்ன?

  27. ஒரு கூட்டாண்மை நிறுவனம் விலகும் கூட்டாளி ஒருவரின் கணக்கைத் தீர்ப்பதற்காக நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. அந்த நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2015: ரூ.40,000; 2016: ரூ.50,000; 2017: ரூ.48,000 ; 2018: ரூ.46,000
    வியாபாரம் கூட்டாளிகளில் ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை. அக்கூட்டாளியின் நியாயமான ஊதியம் ஆண்டுக்கு ரூ.6,000 என மதிப்பிடப்பட்டது.
    கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  28. ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  29. 7 x 3 = 21
  30. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 27,500
    உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது 5,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 2,500
    அவ்வாண்டின் இலாபம் 10,000
  31. 2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வங்கி மேல்வரைப்பற்று 50,000 சரக்கிருப்பு 1,60,000
    கடனாளிகள் 1,80,000 கடனீந்தோர் 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 70,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,40,000
    கணினி 30,000 கைரொக்கம் 60,000
    இயந்திரம் 3,00,000    

    அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

  32. இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்படுகிறது?

  33. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கை தயாரிப்பதற்கான படிநிலைகளை எழுதுக.

  34. கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகளை எழுதுக.

  35. முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக

  36. ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?  

  37. 7 x 5 = 35
  38. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றம் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம் தொடக்க இருப்பு ரூ. இறுதி இருப்பு ரூ.
    கடனாளிகள் 60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 1,000
    கடனீந்தோர் 25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 3,000
    பிற தகவல்கள் ரூ.
    கடளாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது 1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது 7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது 14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 1,200
    வாராக்கடன் 3,500
  39. பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31-12-2018
    ரூ.
    அறைகலன் 30,000 30,000
    கைரொக்கம் 10,000 17,000
    கடனாளிகள் 40,000 60,000
    சரக்கிருப்பு 28,000 11,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100
    வங்கிக் கடன் 25,000 25,000
    கடனீந்தோர் 15,000 16,000

    கூடுதல் தகவல்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800
    ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750
    கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700
    கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500
    எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000
    சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400

    சரிக்கட்டுதல்கள்:
    அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  40. திருமதி ரேவதி ரூ.1,20,000 முதலுடன் 1.4.2003 அன்று தொழில் தொடங்கினார் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வீதம் தன் சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டார். அவர் ரூ.20,000 கூடுதல் முதலாக இட்டார் அவருடைய 31.3.2004 அன்றைய நிலை கீழே தரப்பட்டுள்ளது.

      ரூ.
    வங்கி இருப்பு 8,000
    சரக்கிருப்பு  80,000
    பற்பல கடனாளிகள்  50,000
    அறைகலன்  2,500
    கை ரொக்கம்  2,000
    பற்பல கடனீந்தோர்  25,000
    கொடுபட வேண்டிய செலவுகள்  1,000

    அவர் தனது கணக்குகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார். 2003-04 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் அல்லது நட்டம் கண்டறிக.

  41. மதுரை மாநகர மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு

    துரை இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ  ரூ 
    இருப்பு கீ/கொ     மைதான பராமரிப்பு   16,500
    ரொக்கம் 500   விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    19,000
    வங்கி 7,000 7,500 பல்வகைச் செலவுகள்   11,000
          அறை கலன்   20,000
    சந்தா (2016-17 ஆம் ஆண்டிற்கான ரூ 4,000 உட்பட   30,000 இருப்பு கீ/இ    
    உயில்கொடை    9,000 கைரொக்கம்  1,500  
    அரங்க வாடகை   10,000 வங்கி ரொக்கம் 11,000 12,500
    விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள்   22,500      
        79,000     79,000

    கூடுதல் தகவல்கள்:
    2017, ஏப்ரல்ப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.40,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ30,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ4,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ4,500. இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.

  42. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சகம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

  43. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 8,000
    ஜூன் 1 6,000
    செப்டெம்பர் 1 4,000
    டிசம்பர் 1 3,000

    பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

  44. வைரம் வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 வீதம் 60,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் பின்வரும் செலுத்துதலுக்கேற்ப வெளியிட்டது.

    விண்ணப்பத்தின் போது ரூ.6
    ஒதுக்கீட்டின் போது ரூ.4 (முனைமம் உள்பட)
    முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2

    அனைத்துப் பங்குகளும் ஏற்கப்பட்டன. சரிதாவின் 100 பங்குகளுக்கான ஒதுக்கீடு, முதலாவது அழைப்பு மற்றும் இறுதி அழைப்பிற்கானத் தொகை தவிர, ஏனைய அனைத்தும் பெறப்பட்டன. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட அனைத்து பங்குகளும் பரிமளா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy Quarterly Model Question Paper )

Write your Comment