விகிதப் பகுப்பாய்வு Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது

  (a)

  முடிவு

  (b)

  விகிதம்

  (c)

  மாதிரி

  (d)

  தீர்மானம்

 2. புற அக பொறுப்புகள் அளவிடுவது

  (a)

  குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

  (b)

  நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

  (c)

  இலாபம் ஈட்டும் திறன்

  (d)

  செயல்திறன்

 3. ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?
  (i) விரைவு விகிதம்
  (ii) நிகர இலாப விகிதம்
  (iii) புற அக பொறுப்புகள் விகிதம்
  (iv) நடப்பு விகிதம்
  கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

  (a)

  (i) மற்றும் (ii)

  (b)

  (i) மற்றும் (iv)

  (c)

  (ii) மற்றும் (iii)

  (d)

  (ii) மற்றும் (iv)

 4. நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்

  (a)

  1:1

  (b)

  2.5:1

  (c)

  2:1

  (d)

  1:2

 5. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

  (a)

  2 மடங்கு

  (b)

  3 மடங்கு

  (c)

  6 மடங்கு

  (d)

  8 மடங்கு

 6. 3 x 2 = 6
 7. பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.

  பயோனியர் நிறுமத்தின் 31.3.2019 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு
  விவரம் ரூ.
  I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
  1. பங்குதாரர் நிதி  
    (அ) பங்குமுதல்  
       (i) நேர்மைப் பங்குமுதல் 1,00,000
        (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 75,000
     (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000
  2. நீண்டகால பொறுப்புகள்  
     நீண்டகாலக் கடன்கள் -
  3. நடப்புப் பொறுப்புகள்  
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 2,00,000
  மொத்தம் 4,00,000
  II. சொத்துகள்  
  1. நீண்டகாலச் சொத்துகள்  
    (அ) நிலைச் சொத்துகள் 2,75,000
    (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000
  2. நடப்புச் சொத்துகள்  
  ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 75,000
  மொத்தம் 4,00,000
 8. முதலீடுகள் மீதான வருவாய் விகிதம் எதைக் குறிப்பிடுகிறது?

 9. விகித பகுப்பாய்வின் ஏதேனும் இரண்டு குறைபாடுகளைத் தரவும்.

 10. 3 x 3 = 9
 11. இயக்க இலாபம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

 12. விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகள் தரவும்

 13. விகித பகுப்பாய்வின் குறைபாடுகளைத் தரவும்

 14. 2 x 5 = 10
 15. கீழ்க்கண்ட நிலைகளில் இயக்க இலாப விகிதம் காணவும்.
  நிலை 1: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,00,000, இயக்க இலாபம் ரூ.1,50,000.
  நிலை 2: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.15,00,000, இயக்க அடக்கம் ரூ.12,00,000.
  நிலை 3: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.20,00,000, மொத்த இலாபம் விற்பனை மூலம் பெற்ற வருவாயில் 30%, இயக்கச் செலவுகள் ரூ.4,00,000

 16. கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து நடப்பு விகிதத்தைக் கணக்கிடவும்.

  விவரம் ரூ. விவரம் ரூ.
  குறுகிய கால முதலீடுகள் 40,000 நிலைச் சொத்துகள் 5,00,000
  சரக்கிருப்பு 2,00,000 வணிகத்தின் கடனீந்தோர் 80,000
  வணிகத்தின் கடனாளிகள் 1,20,000 செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு 50,000
  பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள் 80,000 கொடுபட வேண்டிய செலவுகள் 20,000
  ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 10,000 நீண்டகால பொறுப்புகள் 3,00,000

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு Book Back Questions ( 12th Accountancy - Ratio Analysis Book Back Questions )

Write your Comment