விகிதப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
    (i) புற அக பொறுப்புகள் விகிதம்
    (ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
    (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்

    அருணன் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 1,50,000
      8% முன்னுரிமைப் பங்குமுதல் 2,00,000
    (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) 4,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் 25,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 75,000
    மொத்தம் 10,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 7,50,000
    2. நடப்புச் சொத்துகள்  
      (அ) சரக்கிருப்பு 1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 1,00,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 27,500
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது 2,500
    மொத்தம் 10,00,000
  2. சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,90,000
    அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு 40,000
    அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு 20,000
    அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் 90,000
    உள்தூக்குக்கூலி 10,000
  3. ஹரிணி நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.9,60,000. அந்த கணக்காண்டின் இறுதியில் இதன் வியாபார கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு தொகை முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.60,000. கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) கணக்கிடவும்.

  4. கல்பனா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம், சராசரி கடன் செலுத்தும் காலம் (நாட்களில்) கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    2018 – 2019 –ல் கடன் கொள்முதல் 1,00,000
    1.4.2018 அன்று வியாபார கடனீந்தோர் 20,000
    31.3.2019 அன்று வியாபார கடனீந்தோர் 10,000
    1.4.2018 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000
    31.3.2019 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 6,000
  5. டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
    (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 1,40,000 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000
    நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
    (ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
    (iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

  6. விகித பகுப்பாய்வின் நோக்கங்களை விளக்கவும்.

  7. சரக்கிருப்பு மாற்று காலம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  8. இயக்க இலாபம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

  9. விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகள் தரவும்

  10. விகித பகுப்பாய்வின் குறைபாடுகளைத் தரவும்

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Ratio Analysis Three Marks Questions )

Write your Comment