முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  விவரம் 1-1-2018
  ரூ.
  31.12.2018
  ரூ.
  இயந்திரம் 60,000 60,000
  வங்கி ரொக்கம் 25,000 33,000
  பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
  சரக்கிருப்பு 45,000 22,000
  பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
  வங்கிக் கடன் 45,000 45,000
  பற்பல கடனீந்தோர் 25,000 21,000

  கூடுதல் தகவல்கள்:

    ரூ.   ரூ.
  ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
  ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
  கூலி 6,000 சம்பளம் 23,500
  விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
  எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

  சரிக்கட்டுதல்கள்:
  இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

 2. வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

  விவரம் ரூ  விவரம் ரூ
  தொடக்க இருப்பு (1.4.2016) 3,000 கேளிக்கை வரவுகள் 20,000
  தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) 12,000 சேர்க்கைக் கட்டணம் பெற்றது 1,000
  அறைகலன் வாங்கியது 11,000 நகராட்சி வரி 22,000
  விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 11,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவு 2,000
  விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை 8,000 பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 15,000
  பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது 1,500 புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது 18,000
  செய்தித்தாள்கள் வாங்கியது 500 அறக்கொடை நாடகக்காட்சிவரவுகள் 2,500
  பயணச் செலவுகள் 4,500 இறுதி கைரொக்க இருப்பு 8,000
 3. ஏற்காடு இளைஞர் சங்கத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31-ம் நாlளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

  ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
  பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
  இருப்பு கீ/கொ   சம்பளம்  14,000
  கைரொக்கம்  9,600 அலுவலகச் செலவுகள் 7,200
  புத்தகம் வாங்குவதற்காக பெற்ற   புத்தகங்கள் வாங்கியது 15,000
  அரசு மானியம் 10,000 எழுதுபொருள்கள் வாங்கியது 1,800
  சந்தா 24,800 செய்தித்தாள் வாங்கியது 2,100
  சேர்க்கைக் கட்டணம் 2,000 பரிசுகள் வழங்கியது 5,000
  பரிசுநிதி வரவுகள் 6,000 இருப்பு கீ/இ  
  வங்கி வட்டி 1,500 கைரொக்கம் 9,900
  பழைய செய்தித்தாள்கள் விற்றது 1,100    
    55,000   55,000

  கூடுதல் தகவல்கள்:
  (i) தொடக்க முதல் நிதி ரூ.20,000
  (ii) புத்தகங்கள் இருப்பு (1.4.2018) ரூ.9,200
  (iii) கூடியுள்ள சந்தா பெறப்படாதது ரூ1,700
  (iv) 1.4. 2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.1,200 மற்றும் 31.3.2019 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.2,000.

 4. பின்வரும் தகவல்களிலிருந்து, மன்னன் மற்றும் சேவகன் எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல் மாறுபடும் முதலாக இருக்கும்போது தயாரிக்கவும்.

  விவரம் மன்னன் ரூ. சேவகன் ரூ.
  2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 2,00,000 1,75,000
  2018 ஆம் ஆண்டின் எடுப்புகள் 40,000 35,000
  எடுப்புகள் மீதான வட்டி 1,000 500
  2018 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு 21,000 16,500
  முதல் மீது வட்டி 12,000 10,500
  ஊதியம் 18,000 -
  கழிவு - 2,500
 5. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
  (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
  (ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
  (இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000

 6. வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

  பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
  முதல் கணக்குகள்     அறைகலன் 25,000
  வெற்றி 30,000   சரக்கிருப்பு 20,000
  இரஞ்சித் 20,000 50,000 கடனாளிகள் 10,000
  காப்பு நிதி   5,000 கைரொக்கம் 35,000
  பற்பல கடனீந்தோர்   45,000 இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000
      1,00,000   1,00,000

  பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
  (i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
  (ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
  (iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
  (iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
  (v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
  புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

 7. அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

  பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
  முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
  அமல் 70,000   அறைகலன் 20,000
  விமல் 50,000 1,20,000 சரக்கிருப்பு 25,000
  பற்பல கடனீந்தோர்   30,000 கடனாளிகள் 30,000
  இலாப நட்ட க/கு   24,000 வங்கி 19,000
      1,74,000   1,74,000

  1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
  அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
  (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
  (இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
  மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

 8. திவ்யா நிறுமம் 10,000 ரூ.10 மதிப்புள்ள நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் 14,000 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. மிகுதியாகப் பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டுத் தொகையில் சரிக்கட்டப்படும். பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் ரூ.2 உட்பட) முதல் அழைப்பின்போது ரூ.3 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.2 செலுத்தப்பட வேண்டும். விகாஸ் என்ற பங்குதாரர் தன்னுடைய 300 பங்குகளுக்கு முதல் மற்றும் இறுதி அழைப்புகளை செலுத்தத் தவறினார். அனைத்துப் பங்குகளும் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன. அவற்றில் 200 பங்குகள் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

 9. நதியா ஜவுளி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்பிலான ரூ.8 அழைக்கப்பட்ட 100 பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. இதில் மயூரி பங்கு ஒன்றுக்கு ` 6 விண்ணப்ப்ணப்பம் மற்றும் ஒதுக்கீட்டிற்கான தொகையினைச் செலுத்தி இருந்தார். அப்பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.7 பெற்றுக் கொண்டு சௌந்தர்யா என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

 10. ராதா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

  விவரம் 2016-17
  ரூ.
  விற்பனை மூலம் பெற்ற வருவாய் 4,50,000
  இதர வருமானம் 67,500
  செலவுகள் 1,35,000

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment