முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது_____.

    (a)

    ஒரு சொத்து

    (b)

    ஒரு பொறுப்பு

    (c)

    ஒரு செலவு 

    (d)

    தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று 

  3. பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?

    (a)

    அலுவலகச் செலவுகள்

    (b)

    பணியாளர் ஊதியம்

    (c)

    கூட்டாளியின் ஊதியம்

    (d)

    வங்கிக்கடன் மீதான வட்டி

  4. ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு _____.

    (a)

    ரூ.40,000

    (b)

    ரூ.70,000

    (c)

    ரூ.1,00,000

    (d)

    ரூ.30,000

  5. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

    (a)

    முதல் விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    ஆதாய விகிதம்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  6. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.

    (a)

    பத்திர முனைமக் கணக்கு

    (b)

    அழைப்பு முன்பணக் கணக்கு

    (c)

    பங்குமுதல் கணக்கு

    (d)

    பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

  7. நிதி என்னும் சொல் குறிப்பிடுவது_____.

    (a)

    நடப்புப் பொறுப்புகள்

    (b)

    நடைமுறை முதல்

    (c)

    நிலைச் சொத்துகள்

    (d)

    நீண்டகாலச் சொத்துகள்

  8. சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது______.

    (a)

    காப்புகள்

    (b)

    புலனாகும் சொத்துகள்

    (c)

    நிதி

    (d)

    விரைவு சொத்துகள்

  9. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்______.

    (a)

    2 மடங்கு

    (b)

    3 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    8 மடங்கு

  10. Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?

    (a)

    அனாமத்து க/கு 

    (b)

    கொடுபட வேண்டிய செலவு க/கு 

    (c)

    விற்பனை க/கு 

    (d)

    முதலீடுகள் க/கு 

  11. 10 x 2 = 20
  12. பின்வரும் தகவல்களிலிருந்து கடன் விற்பனையை காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,00,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 2,30,000
    அளித்த தள்ளுபடி 5,000
    உள் திருப்பம் 25,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 1,20,000
  13. உயில்கொடை என்றால் என்ன?

  14. நிலைமுதல் முறை என்றால் என்ன?

  15. உயர் இலாபம் என்றால் என்ன?

  16. மாலா மற்றும் அனிதா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். மெர்சி என்பவர் 1/5 இலாப விகிதத்தில் கூட்டாண்மையில் கூட்டாளியாக சேருகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  17. ஆதாய விகிதம் என்றால் என்ன?

  18. அழைப்பு நிலுவை என்பதன் பொருள் என்ன?

  19. நடைமுறை முதல் என்றால் என்ன?

  20. விரைவு விகிதம் என்றால் என்ன?

  21. ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.

  22. 5 x 3 = 15
  23. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  24. இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  25. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு என்றால் என்ன?

  26. கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.

  27. நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.

  28. 3 x 5 = 15
  29. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் 1.4.2017 31.3.2018
    ரூ. ரூ.
    வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
    கைரொக்கம் 800 1,500
    சரக்கிருப்பு 12,000 16,000
    கடனாளிகள் 34,000 30,000
    பொறித்தொகுதி 80,000 80,000
    அறைகலன் 40,000 40,000
    கடனீந்தோர் 60,000 72,000

    அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

  30. பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.50,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம்: 10%
    (இ) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ.13,000, ரூ.15,000 மற்றும் ரூ.17,000.
    (ஈ) 3 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் ரூ.1 ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ரூ.2.4868.

  31. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     நிலம் 80,000
    சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
    விவேக்  40,000   கடனாளிகள் 30,000
    பாண்டியன் 10,000 1,00,000 வங்கிரொக்கம் 14,000
    பொதுக்காப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
    பற்பல கடனீந்தோர்   14,000    
        1,50,000   1,50,000

    1.1.2019 அன்று பாண்டியன் இறந்து விட்டார் மற்றும் அவரின் இறப்பின்போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்ட வேண்டும்.
    (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்.
    (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்.
    (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை செலுத்தப்படவில்லை.
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model Question Paper )

Write your Comment