கணினி கணக்கியல் முறை Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது______.

    (a)

    வழக்கமான கணக்கியல் அறிக்கை 

    (b)

    குறிப்பிட்ட நோக்க அறிக்கை

    (c)

    இருப்பாய்வு 

    (d)

    இருப்புநிலைக் குறிப்பு 

  2. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தலைமைப் பதிவு 

    (b)

    அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்  

    (c)

    அறிக்கைகள் 

    (d)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது 

  3. அலுவலகப் பயன்பாட்டிற்காக  ரூ. 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?  

    (a)

    எதிர்பதிவு சான்றாவணம் 

    (b)

    பெறுதல்கள் சான்றாவணம் 

    (c)

    செலுத்தல்கள் சான்றாவணம் 

    (d)

    விற்பனை சான்றாவனம் 

  4. அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்? 

    (a)

    பெறுதல்கள் சான்றாவணம் 

    (b)

    உரிய குறிப்பேடு சான்றாவணம் 

    (c)

    கொள்முதல் சான்றாவணம் 

    (d)

    பெறுதல்கள் சான்றாவணம் 

  5. Tally- யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்? 

    (a)

    Gateway of Tally -> Reports -> Trial Balance

    (b)

    Gateway of Tally -> Trial Balance

    (c)

    Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  6. 4 x 2 = 8
  7. தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?

  8. ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.

  9. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

  10. Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?

  11. 4 x 3 = 12
  12. கணக்கியல் சான்றாவணம் குறித்து சிறு குறிப்பு எழுதவும்.

  13. Tally.ERP 9-ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள் யாவை?

  14. Tally.ERP 9-ல் இலாப நட்டக் கணக்கை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.

  15. கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.

  16. 1 x 5 = 5
  17. பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
    (1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
    (2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
    (3) ரொக்கத்திற்கு அறைகலன்  வாங்கியது ரூ. 15,000
    (4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
    (5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
    (6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
    (7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
    (8) அலுவலக செலவிற்காக  வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
    (9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
    (10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
    (11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
    (12) கொள்முதல் மீதான துக்குக்கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
    (13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் Unit 10 கணினி கணக்கியல் முறை Book Back Questions ( 12th Accountancy Unit 10 Computerized Accounting System-tally Book Back Questions )

Write your Comment