" /> -->

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய  ________ தகவல்களை வழங்குகிறது.

  (a)

  ஒரு காலக்கட்டத்திற்கு மேலான

  (b)

  ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய

  (c)

  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான

  (d)

  குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

 2. நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

  (a)

  ரொக்க ஓட்ட பகுப்பாப்பாய்வு

  (b)

  பொது அளவு அறிக்கை

  (c)

  ஒப்பீட்டு அறிக்கை

  (d)

  போக்கு ஆய்வு

 3. பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாப்பாய்வின் ஒரு கருவி அல்ல?

  (a)

  போக்குப் பகுப்பாப்பாய்வு

  (b)

  பொது அளவு அறிக்கை

  (c)

  ஒப்பீட்டு அறிக்கை

  (d)

  நிர்ணயிக்கப்பப்பட்ட அடக்கவிலையியல்

 4. நிதி என்னும் சொல் குறிப்பிடுவது

  (a)

  நடப்புப் பொறுப்புகள்

  (b)

  நடைமுறை முதல்

  (c)

  நிலைச் சொத்துகள்

  (d)

  நீண்டகாலச் சொத்துகள்

 5. ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?

  (a)

  175

  (b)

  125

  (c)

  25

  (d)

  100

 6. 3 x 2 = 6
 7. சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.

  விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
  ரூ. ரூ.
  I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள்    
    பங்குதாரர் நிதி 1,00,000 2,60,000
    நீண்ட காலப் பொறுப்புகள் 50,000 60,000
    நடப்புப் பொறுப்புகள் 25,000 30,000
  மொத்தம் 1,75,000 3,50,000
  II. சொத்துகள்    
    நிலைச் சொத்துகள் 1,00,000 2,00,000
    நடப்புச் சொத்துகள் 75,000 1,50,000
  மொத்தம் 1,75,000 3,50,000
 8. நடைமுறை முதல் என்றால் என்ன?

 9. போக்குப் பகுப்பாய்வு எப்போது இதர பகுப்பாய்வு கருவிகளை விட ஏற்புடையதாகும்?

 10. 3 x 3 = 9
 11. பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

  விவரம் மணி நிறுமம் கனி நிறுமம்
  ரூ. ரூ.
  விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 2,50,000
  இதர வருமானம் 30,000 25,000
  செலவுகள் 1,10,000 1,25,000
 12. மரியா வரையறு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

  விவரம் 2018, மார்ச் 31
  ரூ.
  I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    பங்குதாரர் நிதி 4,00,000
    நீண்ட காலப் பொறுப்புகள் 3,20,000
    நடப்புப் பொறுப்புகள் 80,000
  மொத்தம் 8,00,000
  II. சொத்துகள்  
    நிலைச் சொத்துகள் 6,00,000
    நடப்புச் சொத்துகள் 2,00,000
  மொத்தம் 8,00,000
 13. நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றினை விளக்கவும்.

 14. 2 x 5 = 10
 15. பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்குப் சதவீதங்களைக் கணக்கிடவும்.

  விவரம் ரூ. ஆயிரங்களில்
  2015-16 2016-17 2017-18
  விற்பனை மூலம் பெற்ற வருவாய் 120 132 156
  இதர வருமானம் 50 38 65
  செலவுகள் 100 135 123
 16. பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

  விவரம் ரூ.இலட்சங்களில்
  2015-16 2016-17 2017-18
  விற்பனை மூலம் பெற்ற வருவாய் 100 120 160
  இதர வருமானம் 20 24 20
  செலவுகள் 20 14 40
  வருமானவரி 30% 30% 30%

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் Unit 8 நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு Book Back Questions ( 12th Accountancy Unit 8 Financial Statement Analysis Book Back Question )

Write your Comment