வேதிவினை வேகவியல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு ____________

    (a)

    001. e−x

    (b)

    1x 10-2(1-e-60x)

    (c)

    (1x10-2)e-60x 

    (d)

    இவை எதுவுமல்ல

  2. 2NH3\(\rightarrow\)N2 + 3Hஎன்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில்,K1,K2, மற்றும் K3  ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு ____________

    (a)

    k= k= k3

    (b)

    k= 3k= 2k3

    (c)

    1.5k1= 3k= k3

    (d)

    2k= k= 3k3

  3. ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது?

    (a)

    என்தால்பி 

    (b)

    கிளர்வு ஆற்றல் 

    (c)

    என்ட்ரோபி 

    (d)

    அக ஆற்றல் 

  4. ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 0,6909 min-1 எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).

    (a)

    \(\left( \frac { 3 }{ 2 } \right) log2\)

    (b)

    \(\left( \frac { 2 }{ 3 } \right) log2\)

    (c)

    \(\left( \frac { 3 }{ 2 } \right) log\left( \frac { 3 }{ 4 } \right) \)

    (d)

    \(\left( \frac { 2 }{ 3 } \right) log\left( \frac { 3 }{ 4 } \right) \)

  5. N2O5(g) \(\rightarrow \)2NO2(g)+\(\frac{1}{2}\) O2 (g) என்ற வினைக்கு N2O5 ன் மறையும் வேகமானது 6.5x10-2 mol L-1S-1 NO2 மற்றும் O2 ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே _____________

    (a)

     (3.25x10-2 mol L-1s-1); மற்றும் (1.3x10-2 mol L-1s-1)

    (b)

    (1.3x10-2 mol L-1s-1); மற்றும்(3.25x10-2 mol L-1s-1)

    (c)

    (1.3x10-1 mol L-1s-1)மற்றும் (3.25x10-2 mol L-1s-1)

    (d)

    இவை எதுவுமல்ல 

  6. 3 x 2 = 6
  7. பின்வரும் வினைகளுக்கான வேக விதியினைத் தருக.
    அ. ஒரு வினை x ஐப் பொருத்து \(\frac{3}{2}\) வினை வகையையும், y ஐப் பொருத்து பூஜ்ய வகையையும் பெற்றுள்ளது. 
    ஆ. ஒரு வினை NO வைப் பொறுத்து இரண்டாம் வகை Br2 வைப் பொறுத்து முதல் வகை.

  8. ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  9. A,B மற்றும் C ஆகியவற்றிற்கிடையேயான வினையின் வேக விதி வினைவேகம் = k[A]2[B][L]3/2 பின்வரும் நேர்வுகளின் வினைவேகம் எவ்வாறு மாற்றமடையும்?
    i) [L] ன் செறிவு நான்கு மடங்காக உயர்த்தும் போது 
    (ii) [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் செறிவுகளையும் இரு மடங்காக்கும் போது 
    (iii) [A] ன் செறிவை பாதியாகக் குறைக்கும் போது.
    (iv) [A] ன் செறிவை (1/3) மடங்காக குறைத்தும் [L] ன் செறிவை நான்கு மடங்காகவும் மாற்றும் போது.

  10. 3 x 3 = 9
  11. பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  12. போலி முதல் வகை வினையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  13. பின்வரும் வினைகளில் வினைவகையைக் கண்டறிக
    (i) இரும்பு துருப்பிடித்தல்
    (ii) 92U238 ன் கதிரியக்கச் சிதைவு
    (iii) 2A +3B \(\rightarrow \)விளைபொருள்; வினைவேகம் = K [A]1/2 [B]2

  14. 2 x 5 = 10
  15. SO2Cl2 → SO2 + Cl2 என்ற வாயு நிலை ஒருபடித்தான வினையாது முதல் வகை வினைவேகவியலுக்கு உட்படுகிறது. அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள் SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப அளவில் 1% ஆக குறைய ஆகும் காலத்தினை கணக்கிடுக.

  16. A என்ற பொருள் சிதைவடையும் வினை ஒரு முதல் வகை வினையாகும். வினைபொருளில் சரிபாதி குறைய ஆகும் காலம் 60 விநாடிகள் எனில் அவ்வினையின் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக. 180 வினாடிகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் வினைபொருளின் (A) அளவினைக் கண்டறிக

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - வேதிவினை வேகவியல் Book Back Questions ( 12th Chemistry - Chemical Kinetics Book Back Questions )

Write your Comment