வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. ஒரு முதல் வகை வினையானது 99.9% நிறைவடைய தேவையான நேரமானது, அவ்வினை பாதியளவு நிறைவடைய தேவையான நேரத்தைப் போல தோராயமாக பத்து மடங்கு எனக் காட்டுக,

  2. அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.

  3. பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  4. வினை வேகம் மற்றும் வினை வேக மாறிலி ஆகியவற்றிக்கு இடையேயான வேறுபாடுகளைத் தருக.

  5. பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.

  6. 2NO(g)+Cl2(g)➝ 2NOCl(g) என்ற வினைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வினை ஒட்டுமொத்த வினைவகை மற்றும் ஒட்டுமொத்த வினைவகை ஆகியனவற்றின் மதிப்புகளைக் காண்க.

    சோதனை எண்  துவக்கச் செறிவு  துவக்க வினை வேகம் 
    NO Cl2 NOCl mol L-1 s-1
    1. 0.1 0.1 7.8x10-5
    2. 0.2 0.1 3.12x10-4
    3. 0.2 0.3 9.63x10-4
  7. ஒரு எஸ்டரின் நீராற்பகுப்பு வினையானது அவ்வினையில் உருவாகும் கார்பாக்சிலிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்ஸைடிற்கு எதிராக தரம் பார்த்தல் மூலம் தரம் பார்த்தல் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெவ்வேறு கால இடைவெளிகளில் எஸ்டரின் செறிவானது பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

    நேரம் (min) 0 30 60 90
    எஸ்டரின் செறிவு 
    mol L-1
    0.85 0.80 0.754 0.71

    மேற்கொண்டுள்ள வினை ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.

  8. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி மதிப்பு 1.54x10-3s-1 என்றால் அதன் அரை வாழ் கால மதிப்பு என்ன?

  9. ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் 10 நிமிடங்கள் என்றால் ஒரு மணி நேரம் கழிந்த பின் வினைபடு பொருள் எத்தனை சதவீதம் எஞ்சியிருக்கும்?

  10. ஒரு முதல் வகை வினைக்கு 99% வினை முடிவடைய ஆகும் காலம் 90% வினை முடிவடையும் காலத்தைப் போல் இரு மடங்கு என நிரூபி.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Three Marks Questions )

Write your Comment