" /> -->

அணைவு வேதியியல் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  7 x 1 = 7
 1. IUPAC வழிமுறைகளின்படி, [Co(en)2(ONO)Cl]Cl என்ற அணைவுச் சேர்மத்தின் பெயர் 

  (a)

  குளோரோபிஸ்எத்திலின்டைஅமீன்நைட்ரிடோகோபால்ட் (III) குளோரைடு

  (b)

  குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1,2 டை அமீன்)நைட்ரோ - κ -O கோபால்டேட் (III) குளோரைடு

  (c)

  குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1,2 டை அமீன்)நைட்ரோ - κ -O கோபால்டேட் (II) குளோரைடு

  (d)

  குளோரிடோபிஸ்(ஈத்தேன் – 1,2 டை அமீன்)நைட்ரைட்டோ - κ -O கோபால்டேட் (III) குளோரைடு

 2. [Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்

  (a)

  அணைவு மாற்றியம்

  (b)

  இணைப்பு மாற்றியம்

  (c)

  ஒளிசுழற்ச்சி மாற்றியம்

  (d)

  வடிவ மாற்றியம் 

 3. முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?

  (a)

  [Co(en)3]3+

  (b)

  [Co(NH3)4(cl)2]+

  (c)

  [Co(NH3)3(cl)3]

  (d)

  [Co(NH3)5Cl]SO4

 4. மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறணை நிறைவு செய்வது  

  (a)

  நேர் அயனிகள் 

  (b)

  எதிர் அயனிகள் 

  (c)

  நடுநிலை மூலக்கூறுகள் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 5. மைய உலோக அயனியும், ஈனிகளும் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ள கோளம் ______________ எனப்படும்.

  (a)

  உட்புறக்கோளம் 

  (b)

  அயனியாகும் கோளம் 

  (c)

  அணைவுக் கோளம் 

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை.

 6. K4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறன் 

  (a)

  +2

  (b)

  +3

  (c)

  +4

  (d)

  +6

 7. இரத்த சிகப்பணு மற்றும் குளோரோபில் ஆகியவற்றில் காணப்படும் ஈனி 

  (a)

  EDTA 

  (b)

  DMG 

  (c)

  பார்பைரின் 

  (d)

  en 

 8. 2 x 1 = 2
 9. i) அணைவு உட்பொருள் மைய உலோக அயனியையும், ஈனிகளையும் உள்ளடக்கியது.
  ii) K4 [Fe(CN)6] என்ற சேர்மத்தின் அணைவு உட்பொருள்  [Fe(CN)6]4-
  iii) அணைவு உட்பொருளினுள் அடங்கியுள்ள தொகுதிகள் அயனியுறும்.
  iv) அணைவு உட்பொருள் சேர்மத்தின் வடிவத்திற்கு காரணமல்ல.
  அ) (i) & (ii)
  ஆ) (i) & (iii)
  இ) (ii) & (iii)
  ஈ) (iii) & (iv)

  ()

  ஈ) (iii) & (iv)
  சரியான கூற்று:
  iii) அணைவு உட்பொருளினுள் அடங்கியுள்ள தொகுதிகள் அயனி அய்னியுறாது.
  iv) அணைவு உட்பொருள் சேர்மத்தின் வடிவத்திற்கு காரணமாகிறது.

 10. i) நைட்ரேட் ஈனியில் இணைப்பு மாற்றியம் சாத்தியமல்ல.
  ii) அணைவு மாற்றியம், நேர் மற்றும் எதிர் அயனிகள் இரண்டுமே அணைவு அயனிகளாக கொண்ட அணைவுச் சேர்மங்களில் காணப்படுகிறது.
  iii) அயனியுறும் எதிர்மாறு அயனிகள் ஈனிகளாக செயல்படும் அணைவுச் சேர்மங்களில் அயனியாதல் மாற்றியம் காணப்படுகிறது.
  iv) கரைப்பானேற்ற மாற்றியத்தில் ஆல்கஹால் கரைப்பானாக இருப்பின் அது நீரேற்ற மாற்றியம் எனப்படும்.
  அ) (i) & (ii)
  ஆ) (ii) & (iii)
  இ) (iii) & (iv) 
  ஈ) (i) & (iv)

  ()

  ஈ) (i) & (iv)
  சரியான கூற்று:
  i) நைட்ரேட் ஈனியில் இணைப்பு மாற்றியம் சாத்தியமே.
  iv) கரைப்பானேற்ற மாற்றியத்தில் நீர் கரைப்பானாக இருப்பின் அது நீரேற்ற மாற்றியம் எனப்படும்.

 11. 1 x 2 = 2
 12. கூற்று(A) : ஓரின ஈனி அணைவுச் சேர்மங்களில் வடிவ மாற்றியங்கள் காணப்படுகின்றன.
  காரணம்(R) : மைய உலோக அயனியைச் சுற்றி ஈனிகள் முப்பரிமாண புறவெளியில் வெவ்வேறு வகைகளில் அமைவதால் வடிவ மாற்றியம் ஏற்படுகிறது.
  i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
  ii) A சரி ஆனால் R தவறு 
  iii) A தவறு ஆனால் R சரி
  iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

 13. 1 x 2 = 2
 14. ஈனியின் தன்மையை பொறுத்து வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக.
  அ) அக்வா 
  ஆ) கார்பனைல் 
  இ) நைட்ரோசைல் 
  ஈ) நைட்ரேட்டோ 

 15. 1 x 2 = 2
 16. i) VB கொள்கைப்படி அணைவில் மைய உலோக அயனியும், ஈனியும் அயனிப்பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.
  ii) ஈனிகள் வழங்கும் எலக்ட்ரான் இரட்டைகளை மைய உலோக அயனி ஏற்றுக்கொள்கிறது.
  iii) ஈனிகள் லூயி அமிலங்களாக செயல்படுகிறது.
  iv) அணைவுக் கோளத்தின் மீதுள்ள மின்சுமை அணைவுக் கோளத்தின் உள்ளேயுள்ள மொத்த மின்சுமைக்கு சமம்.
  அ) (i) & (ii)
  ஆ) (i) & (iii)
  இ) (ii) & (iii)
  ஈ) (iii) & (iv)

 17. 3 x 2 = 6
 18. பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
  அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
  ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
  இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ -K-N-கோபால்ட் (III) அயனி 
  ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட் 
  உ) சோடியம் டெட்ராபுளூரிடோடை ஹைராக்ஸிடோகுரமேட் (III)

 19. \([Ag(NH_{ 3 })_{ 2 }]^{ + }\)என்ற அணைவுச் சேர்மத்தின் நிலைப்பு மாறிலி 1.7x 107 எனில் 0.2M NH3 கரைசலில் \(\cfrac { \left[ { Ag }^{ + } \right] }{ \left[ Ag\left( NH_{ 3 } \right) _{ 2 } \right] ^{ + } } \) விகிதத்தினைக் கண்டறிக.

 20. இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?

 21. 3 x 3 = 9
 22. [Co(NH3)5Cl]SO4 மற்றும்  [Co(NH3)5SO4]Cl ஆகிய அணைவுச் சேர்மங்களை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.

 23. [Ni(CN)4]2- டையா காந்தத் தன்மை உடையது ஆனால் [NiCl4]2- பாரா காந்தத் தன்மையுடையது-படிக்கச் புலக் கொள்கையினைப் பயன்படுத்தி விளக்குக.

 24. நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.

 25. 4 x 5 = 20
 26. [Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக. 

 27. K4[Mn(CN)6]அணைவின், மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை, அணைவு எண், ஈனியின் தன்மை, காந்தப் பண்பு, மற்றும் எண்முகி படிக புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு ஆகியனவற்றைத் தருக

 28. அணைவுச் சேர்மங்களில் காணப்படும் கட்டமைப்பு மாற்றியங்களை விளக்குக.

 29. பின்வரும் அணைவுச் சேர்மங்களின் வாய்ப்பாடுகளைத் தருக.
  i) டிரிஸ் (எத்திலீன் டை அமின்) குரோமியம் (III) குளோரைடு 
  ii) பொட்டாசியம் டெட்ரா சயனிடோ நிக்கலேட் (II)
  iii) அம்மீன் புரோமிடோ குளோரிடோ நைட்ரிட்டோ - kN பிளாட்டினேட் (II) அயனி 
  iv) டைகுளோரிடா பிஸ் (ஈத்தேன் - 1, 2 - டைஅமின்) பிளாட்டினம் (IV)  நைட்ரேட்
  v) ஹெக்ஸா அக்வா மாங்கனீசு (II) பாஸ்பேட் 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - அணைவு வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Coordination Chemistry Model Question Paper )

Write your Comment