" /> -->

மின் வேதியியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 22
  11 x 2 = 22
 1. நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளை வரையறு.

 2. நீர்த்தல் அதிகரிக்கும் போது கரைசலின் கடத்துத்திறன் குறைகிறது ஏன்?

 3.  கோல்ராஷ் விதியை கூறு. அளவிலா நீர்த்தலில் ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் மோலார் கடத்துத்திறன் நிர்ணயித்தலில் கோல்ராஷ் விதி எவ்வாறு பயன்படுகிறது?

 4. வினையுறா மின்முனைகளைப் பயன்படுத்தி உருகிய NaCl ஐ மின்னாற்பகுத்தல் பற்றி விளக்குக.

 5. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.

 6. டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக

 7. கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனையானது எதிர்குறி கொண்டதாகவும் எதிர்மின்முனையானது நேர்குறி கொண்டதாகவும் கருதப்படுகிறது ஏன்?

 8. 298K வெப்பநிலையில், 0.01M செறிவு கொண்ட 1 :1 வலிமை குறைந்த மின்பகுளி கரைசலின் கடத்துத்திறன் மதிப்பு \(1.5\times10^{-4}\) S cm-1. எனில்
  i) கரைசலின் மோலார் கடத்துத்திறன்
  ii) வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை வீதம் மற்றும் பிரிகை மாறிலி ஆகியவற்றை கணக்கிடுக.
  குறிப்பு: \(\lambda\) நேரயனி = 248.2 S cm2 mol-1 ; \(\lambda\) எதிரயனி = 51.8 S cm2 mol-1

 9. 0.1M HCl மற்றும் 0.1 M KCl இந்த இரண்டு கரைசல்ளில் எது அதிக \(\overset{0}{\Lambda}_{m}\) கடத்துத்திறனை கொண்டது? ஏன்?

 10. ஒரு மின்கடத்துக் கலனிலுள்ள இரண்டு பிளாட்டின மின்முனைகளுக்கு இடைப்பட்ட தூரம் 1.5 செ.மீ. ஒவ்வொரு மின்முனையும் குறுக்குப் பரப்பும் 4.5 ச.செ.மீ என்க. 0.5 N மின்பகுளிக் கரைசலுக்கு மின்கலத்தை பயன்படுத்தி கண்டறியப்பட்ட மின்தடை மதிப்பு 15 Ω எனில், கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பை காண்க.

 11. 25°C. வெப்பநிலையில் 0.025M செறிவுடைய நீர்த்த கால்சியம் குளோரைடு கரைசலின் மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக. கால்சியம் குளோரைடு கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பு 12.04 × 10-2 Sm-1.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - மின் வேதியியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Electro Chemistry Two Marks Question Paper )

Write your Comment