அரையாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. எலிங்கம் வரைபடத்தை பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது? 

    (a)

    கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது  நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது.

    (b)

    CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.

    (c)

    CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.

    (d)

    உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் போது  அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது

  2. வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம் _________.

    (a)

    நான்முகி 

    (b)

    அறுங்கோணம் 

    (c)

    எண்முகி 

    (d)

    இவை எதுவுமல்ல 

  3. குளோரினின் வாயுவின் நிறம் _________.

    (a)

    நிறமற்றது

    (b)

    பழுப்பு

    (c)

    பசுமை கலந்த மஞ்சள்

    (d)

    இளம்பச்சை

  4. லாந்தனைடு குறுக்கத்தின் விளைவு பின்வரும் எதற்கு காரணமாகிறது?

    (a)

    Zr மற்றும் Y இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன

    (b)

    Zr மற்றும் Nb இரண்டும் ஒரே ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளன

    (c)

    Zr மற்றும் Hf இரண்டும் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைப் பெற்றுள்ளன.

    (d)

    Zr மற்றும் Zn இரண்டும் ஒரே ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளன.

  5. அணைவுச் சேர்மங்களின் நிறங்களை விளக்கும் கொள்கை ___________

    (a)

    இணை திற பிணைப்புக் கொள்கை 

    (b)

    வெர்னர் கொள்கை 

    (c)

    படிக புலக்கொள்கை 

    (d)

    மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை 

  6. திட கார்பன்டை ஆக்சைடு ஒரு _______ படிகமாகும்.

    (a)

    முனைவற்ற மூலக்கூறு 

    (b)

    முனைவுற்ற மூலக்கூறு 

    (c)

    ஹைட்ரஜன் பிணைப்பில் பிணைக்கப்பட்ட மூலக்கூறு 

    (d)

    உலோக 

  7. \(\rightarrow \)B+C+D  என்ற ஒரு படுத்தான வினையில், துவக்க அழுத்தம் P0. 't' நேரத்திற்குப் பின் 'P'. P0, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி _____________

    (a)

    \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{ 3{ P }_{ 0 }-P } \right) \)

    (b)

    \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{{ P }_{ 0 }-P } \right) \)

    (c)

    \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac {3{ P }_{ 0 }-P }{2{ P }_{ 0 } } \right) \)

    (d)

    \(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{3{ P }_{ 0 }-P } \right) \)

  8. பின்வருவனவ ற்றுள் எது லெளரி– ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?

    (a)

    HCl

    (b)

    SO42−

    (c)

    HPO42−

    (d)

    Br-

  9. பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக
    \(Mn^{2+}+2e^{-}\rightarrow Mn=E^{0}=-1.18V\)   \(Mn^{2+}\rightarrow Mn^{3+}+e^{-}\quad E^{0}=-1.51V\)
    \(3Mn^{2+}\rightarrow Mn+2Mn^{3+}\), என்ற வினையின் E0 மதிப்பு முன்னோக்கு வினையின் சாத்தியக்கூறு முறையே ____________

    (a)

    2.69V மற்றும் தன்னிச்சையானது

    (b)

    - 2.69 மற்றும் தன்னிச்சையற்றது

    (c)

    0.33V மற்றும் தன்னிச்சையானது

    (d)

    4.18 V மற்றும் தன்னிச்சையற்றது

  10. ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது  தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில் ____________

    (a)

    ΔH அதிகரிக்கிறது

    (b)

    ΔS அதிகரிக்கிறது

    (c)

    ΔG அதிகரிக்கிறது

    (d)

    ΔS குறைகிறது

  11. கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
    காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்க மல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  12. பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைப்பொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ர ஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகியவை  முறையே _____________

    (a)

    சோடியம்பென்சோயேட்  மற்றும் பீனால்

    (b)

    சோடியம்பென்சோயேட்  மற்றும் பீனைல்மெத்தனால்

    (c)

    பீனைல்மெத்தனால் மற்றும் சோடியம்பென்சோயேட்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  13. நைட்ரோபபென்சீன்  ஆனது அடர் HNO3 / H2SO4 உடன் 80-100°C ல் வினைபுரிந்து  கொடுக்கும் விளைபொருள்  எது?

    (a)

    1,4 – டைநைட்ரோ பென்சீன்

    (b)

    2,4,6 – ட்டைநைட்ரோ பென்சீன்

    (c)

    1,2 – டைநைட்ரோ பென்சீன்

    (d)

    1,3 – டைநைட்ரோ பென்சீன்

  14. சேர்மம் A என்பது ____________

    (a)

    ஹெப்டனாயிக் அமிலம்

    (b)

    2-அயோடோஹெக்ஸேன்

    (c)

    ஹெப்டேன்

    (d)

    ஹெப்டனால்

  15. ஆஸ்பிரின் என்பது ____________

    (a)

    அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

    (b)

    பென்சாயில் சாலிசிலிக் அமிலம்

    (c)

    குளோரோபென்சாயிக் அமிலம்

    (d)

    ஆந்த்ரனிலிக் அமிலம்

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுட்ட  சுண்ணாம்புவின் பயன்பாடு யாது? 

  18. சலவைத்தூள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  19. டைமீத்தைல் கிளையாக்ஸைமின் ஆல்கஹால் கலந்த கரைசலைப் பயன்படுத்தி Ni2+ கண்டறியப்படுகிறது இவ்வினையில் உருவாகும் ரோஜா சிவப்பு நிற அணைவுச் சேர்மத்தின் வாய்ப்பாட்டினை எழுதுக.

  20. படிக திடப்பொருள் என்றால் என்ன?

  21. N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.

  22. வினையுறா மின்முனைகளைப் பயன்படுத்தி உருகிய NaCl ஐ மின்னாற்பகுத்தல் பற்றி விளக்குக.

  23. ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணையை  ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.

  24. A, B மற்றும் C ஆகியவற்றை கண்ட றிக.

     

  25. எதிர் உயிரிகள் என்றால் என்ன?

  26. பகுதி - III

    ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

    6 x 3 = 18
  27. எலிங்கம் வரைபடம் பற்றி எழுது.

  28. உலோகங்களுடன் கந்தக அமிலத்தின் வினை யாது?

  29. Ti3+ , Mn2+ அயனியில் காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறிக மேலும் அவைகளின் காந்ததிருப்பு திறன் மதிப்புகளைக் (μs) கண்டறிக.

  30. பருமனறி பகுப்பாய்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்களை சுருக்கமாக விளக்குக.

  31. பின்வரும் வினைகளை அடிப்படை வினைகளாகக் கருத்திற்கொண்டு அவ்வினைகளுக்கான வினை வேகத்தினைக் குறிப்பிடும் சமன்பாடுகளை எழுதுக.
    i) 3A+5B2➝4CD
    ii) X2+Y2 ➝2xy

  32. \(1.5\times10^{-3}\) M Ba (OH)2 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.t

  33. 4 – மெத்தில் பென்ட் -2- ஈன் -1- ஆல் ஐ தரும் ஆல்டிஹைடு, கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் எஸ்டர் ஆகியனவற்றின் வடிவமைப்புகளைத் தருக.

  34. அசிட்டோனுடன் பென்சால்டிஹைடின் ஆல்டால் குறுக்கவினையில் உருவாகும் முதன்மையான விளைபொருளின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.

  35. பின்வருவனவற்றிற்கு காரணம் கூறு
    i. அனிலீன் பிரீடல் கிராப்ட் வினைக்கு உட்படுவதில்லை
    ii. அலிபாட்டிக் அமீன்களை விட அரோமேட்டிக் அமீன்களின் டையசோனியம் உப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டது.
    iii. அனிலீனின் pKb மதிப்பு மெத்திலமீனை விட அதிகம்
    iv. காப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை ஓரிணைய அமீன்களை தொகுப்பதற்கானது.
    v. எத்தில்மீன் நீரில் கரையும் ஆனால் அனிலீன் கரையாது.
    vi. அமைடுகளை விட அமீன்கள் அதிக காரத்தன்மை உடையது.
    vii. அரோமேட்டிக் எலக்ட்ரான்கவர் பதிலீட்டு வினைகளில் அமினோ தொகுதி o – மற்றும்  p – வழிநடத்தும் தொகுதியாக இருப்பினும்  அனிலீனின் நைட்ரோ ஏற்றம் செய்யும் வினைகளில் m – நைட்ரோ அனிலீன் கணிசமான விளைபொருளாக கிடைக்கிறது.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை  ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. ஹார்மோன்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

    1. பிராங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.

    2. எத்தில் புரோமைடு மற்றும் புரப்பைல் புரோமைடு ஆகிய இரு சேர்மங்கள் சிதைவடையும் வினைகளும் முதல் வகை வினைகளாகும். மேலும் இவ்விரு வினைகளும் ஒரே அதிர்வெண் காரணி A மதிப்பினைப் பெற்றுள்ளன. 390oC ல் எத்தில் புரோமைடு சிதைவுறும் வினையின் வினைவேக மாறிலி மதிப்பும் சமம். எத்தில் புரோமைடு சிதைவுறும் வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பு 230 KJ mol-1 எனில் புரப்பைல் புரோமைடு சிதைவுறும் வினையின் கிளர்வு ஆற்றல் மதிப்பினைக் கணக்கிடுக.

    1. அணைவுச் சேர்மங்களின் வகைப்பாட்டினை விவரி?

    2. 0.1M KCl கரைசலை பயன்படுத்தி கண்ட றியப்பட்ட மின்கடத்து கலனின் மின்தடை 190 \(\Omega \) (0.1M KCl கரைச லின் நியம கடத்துத்திறன் மதிப்பு 1.3 Sm-1). அதே கலனில் 0.003M செறிவுள்ள சோடியம் குளோரைடு  கரைசலை நிரப்பும் போது, அளவிடப்பட்ட மின்தடை மதிப்பு 6.3K\(\Omega\) இவை இரண்டும் ஒரே குறிப்பிட்ட வெப்பநிலையில் கண்டறியப்பட்ட அளவீடுகளாகும்.  NaCl கரைசலின் நியம மற்றும்   மேலார் கடத்துத்திறன்  மதிப்புகளை கணக்கிடுக.
      கொடுக்கப்பட்டது
      κ = 1.3 Sm -1   (0.1M KCL  கரைசலுக்கு )
      R = 190 \(\Omega\)

    1. பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
      அ) BrF5
      ஆ) BrF3

    2. d - தொகுதி தனிமங்கள் f - தொகுதி தனிமங்களை விட அதிக ஆக்சிஜனேற்ற நிலைகளை கொண்டிருப்பதேன்?

    1. நுரை மிதப்பு முறையினை விளக்கு.

    2. CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry Half Yearly Model Question Paper )

Write your Comment